Published:Updated:

திண்டுக்கல்: பிரதமர், முதல்வர் வருகை; கொடிக்கம்பங்கள் நடுவதில் திமுக, பாஜக-வினர் இடையே மோதல்!

மோதல் - திண்டுக்கல்

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினின் திண்டுக்கல் வருகையையொட்டி இரு கட்சியினரும் கொடிக்கம்பங்களை நடுவதில் தகராறு செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்: பிரதமர், முதல்வர் வருகை; கொடிக்கம்பங்கள் நடுவதில் திமுக, பாஜக-வினர் இடையே மோதல்!

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினின் திண்டுக்கல் வருகையையொட்டி இரு கட்சியினரும் கொடிக்கம்பங்களை நடுவதில் தகராறு செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
மோதல் - திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவிருக்கிறது. இதில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். 

கொடிகளை அகற்றும் போலீஸார்
கொடிகளை அகற்றும் போலீஸார்

நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டக் கட்சி நிர்வாகிகளும், தி.மு.க அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் நேற்று பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் ஹெலிபேட் தளம், நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தை பார்வையிட்டுச் சென்றனர்.

மேலும் பிரதமர், முதல்வரை வரவேற்க கட்சியினர் ஆலோசனைகளை வழங்கிச் சென்றனர். கரூரில் நடக்கும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டுவரும் முதல்வரை வரவேற்க திண்டுக்கல்லில் 50,000 பேரை திரட்ட வேண்டும் என திண்டுக்கல் அமைச்சர்கள் கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கின்றனர்.

பாஜகவினர்
பாஜகவினர்

மேலும், மதுரை-திண்டுக்கல் இடையே நான்கு வழி சாலையின் இருபுறமும் தி.மு.க, பா.ஜ.க கொடிகளை கட்சியினர் போட்டிப் போட்டு கொண்டு கட்டினர். இதில் பிரதமர் கான்வாய் வரும் பகுதியான சின்னாளபட்டி பகுதியில் பா.ஜ.க-வினர் கட்டியிருந்த கொடிகளை அகற்றும்படி, போலீஸார் பா.ஜ.க-வினருக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர். அதற்கு, ``தி.மு.க கொடிகளை அகற்றச் சொல்லாமல் பா.ஜ.க கொடிகளை அகற்றச் சொல்வதை ஏற்கமுடியாது. மேலும் இந்தப் பகுதியில் வைத்தே பிரதமருக்கு வரவேற்பு கொடுக்கவிருக்கிறோம்" என பா.ஜ.க-வினர் கூற, அங்கிருந்த பழனி எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்ட தி.மு.க-வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஐ.பி.செந்தில்குமார்
ஐ.பி.செந்தில்குமார்

அப்போது திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் அங்குவர இருதரப்பையும் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர் போலீஸார். பா.ஜ.க-வினருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் காவலர் ஒருவர் தடுமாற எஸ்.பி பா.ஜ.க-வினரை தள்ளினார். இதில் பா.ஜ.க இளைஞர் அணி மாவட்டத் தலைவர் அன்பு ஹரிஹரன், மாவட்ட பொருளாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கீழே விழுந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பழநி எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார், ``பா.ஜ.க-வினர் போலீஸாரை தாக்கியதில்தான் பிரச்னை ஏற்பட்டது. முறையாக அனுமதி பெற்றே கொடிகள் கட்டப்பட்டிருக்கின்றன" என்றார்.

தகராறு
தகராறு

போலீஸார் பிரச்னை ஏற்படாமல் இருக்க தி.மு.க-வினரை அந்தப் பகுதியிலிருந்து கலைந்து செல்லும்படி கூறியும், தி.மு.க-வினர் அதேபகுதியில் இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க-வினர் காந்திகிராம பல்கலை நுழைவு வாயில் முன் கூடி, போலீஸார் தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

வாக்குவாதம்
வாக்குவாதம்

கொடி கட்டுவதில் தி.மு.க, பா.ஜ.க-வினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.