Published:Updated:

அ.தி.மு.க கூட்டணி வேண்டாம்... போர்க்கொடி தூக்கிய தே.மு.தி.க மா.செ நீக்கம்!

சிந்து ஆர்

கட்சி தலைமை மாற வேண்டும், இல்லையென்றால் நாம்தான் மாற வேண்டும் என்ற முடிவிற்கு வந்தேன்.

ஜெகநாதன்
ஜெகநாதன்

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என மாவட்ட கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் போட்ட கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தே.மு.தி.க செயலாளர் டி.ஜெகநாதன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நாளை தி.மு.க.வில் இணைகிறார்.

ஜெகநாதன்
ஜெகநாதன்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளராக இருந்தவர் டி.ஜெகநாதன். விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் தீவிரமாக செயல்பட்டவர். பின்னர் விஜயகாந்த் தே.மு.தி.க. தொடங்கியதும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். கட்சி தொடங்கியதில் இருந்து இதுவரை மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்தவாரம் ஜெகநாதன் தலைமையில் நடந்த மேற்குமாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தே.மு.தி.க. தலைமை ஜெகநாதனை கட்சியில் இருந்து நேற்று நீக்கியுள்ளது.

இதுகுறித்து ஜெகநாதன் கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என பிரேமலதா கூறியிருந்தார். நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்ற நிர்வாகிகளின் கருத்தை அடுத்து தீர்மானம் நிறைவேற்றினோம். கட்சி தலைமை என்னை தொடர்புகொண்டு பேசியது அதற்கு நான் உள்ளாட்சியில் அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்ற கருத்தை வெளிப்படையாக தெரிவித்தேன். இருப்பினும் தலைமையில் இருந்து தொடர்ந்து பேசினார்கள்.

தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டத்தில்
தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டத்தில்

கட்சி தலைமை மாற வேண்டும், இல்லையென்றால் நாம்தான் மாற வேண்டும் என்ற முடிவிற்கு வந்தேன். இதற்கிடையில் என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்கள். எனவே நான் சற்றும் தாமதிக்காமல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நாளை தி.மு.க.வில் இணைகிறேன்" என்றார். ஜெகநாதன் ஜெகநாதன் தி.மு.க.வில் இணையும் முடிவில் இருந்ததால் அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்ற கோஷத்தை எழுப்பியதாக தே.மு.தி.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கு முன்பு கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த தினேஷ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.