Published:Updated:

``திமுக தில்லு முல்லு கட்சி என்பதை நிரூபித்திருக்கிறது!" - விழுப்புரத்தில் சாடிய பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த் ( தே.சிலம்பரசன் )

"டெல்லி முதல்வரை திட்டம் தொடங்க அழைத்த முதல்வர், கெஜ்ரிவால் டெல்லியில் அமல்படுத்திவரும் ஊழலற்ற அரசாங்கம், சிறப்பாக வழங்கப்படும் இலவச கல்வி உள்ளிட்டவற்றை எவ்வாறு செயல்படுத்துகிறார் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்." - பிரேமலதா.

``திமுக தில்லு முல்லு கட்சி என்பதை நிரூபித்திருக்கிறது!" - விழுப்புரத்தில் சாடிய பிரேமலதா விஜயகாந்த்

"டெல்லி முதல்வரை திட்டம் தொடங்க அழைத்த முதல்வர், கெஜ்ரிவால் டெல்லியில் அமல்படுத்திவரும் ஊழலற்ற அரசாங்கம், சிறப்பாக வழங்கப்படும் இலவச கல்வி உள்ளிட்டவற்றை எவ்வாறு செயல்படுத்துகிறார் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்." - பிரேமலதா.

Published:Updated:
பிரேமலதா விஜயகாந்த் ( தே.சிலம்பரசன் )

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள், தே.மு.தி.க தொடங்கப்பட்டு 18-ம் ஆண்டு நிறைவு, மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல் ஆகிய மூன்று காரணங்களை உள்ளடக்கி நேற்று மாலை தே.மு.தி.க சார்பில் விழுப்புரத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் தலைமையேற்றுப் பேசிய அந்தக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ``திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர் வரை கேப்டனின் கோட்டை. அதிலும் விழுப்புரம் முதன்மையானது. இங்குள்ள தொண்டர்கள் உணர்ச்சிமிக்க உண்மைத் தொண்டர்கள். தி.மு.க சார்பில் விருதுநகரிலும் முப்பெரும் விழா நடைபெறுகிறது. ஆளுங்கட்சியாக இருப்பதால்... பணத்தால் மக்களை அழைத்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால், இந்தக் கூட்டமோ சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

மதுரையில் 2005-ம் ஆண்டு, நடேசன் நகரை விற்று அந்தப் பணத்தில் 28 லட்சம் தொண்டர்களுடன் தே.மு.தி.க கட்சி மாநாடு நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் கின்னஸ் சாதனை.

தேமுதிக முப்பெரும் விழா - விழுப்புரம்
தேமுதிக முப்பெரும் விழா - விழுப்புரம்

கடைக்கோடித் தொண்டனின் வறுமை நீங்கி, நல்வாழ்வு பெறுவதையே நோக்கமாகக்கொண்டு இந்தக் கட்சி தொடங்கப்பட்டது. அந்த நோக்கத்தை அடைந்தே தீரும் .

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மின்கட்டண உயர்வு ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதியிலேயே இல்லாமல் புதிதாக அமல்படுத்தப்படுகிறது. மின்கட்டண உயர்வு மற்றும் மின்வெட்டு மூலம் தி.மு.க என்பது தில்லு முல்லுக் கட்சி என்பதை நிரூபித்திருக்கிறது. தே.மு.தி.க என்பது எந்த கட்சியிலிருந்தும் பிரிந்து தொடங்கப்பட்ட கட்சியில்லை. சுயம்புவாகக் கட்சியை உருவாக்கி, சாதிப் பாகுபாடற்று இருந்து, வறுமைக்கோட்டிலுள்ள மக்களை மீட்டு தங்கத் தட்டில் வைத்து தாலாட்டுவார் உங்கள் கேப்டன். இந்த மாவட்டத்தில் நந்தன் கால்வாய் திட்டம் தொடங்க தே.மு.தி.க நடத்திய போராட்டம் மக்களாகிய உங்களுக்கு நினைவிருக்கும். ஆனால் இன்றுவரை எந்த ஆளுங்கட்சியும் அதை நிறைவேற்றவில்லை. ஆளுங்கட்சி... ஆட்சிக்கு வந்து, 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று கொடுக்கப்பட்ட உறுதிமொழியில் ஒன்றுகூட இங்கு நடக்கவில்லை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மட்டும் மாறாமல் இருக்கின்றன. 

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

ஆளுங்கட்சி தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுக்கும் எனக் கூறி முதற்கட்டமாக படிக்கும் மாணவிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என திட்டம் தொடங்கியது. தொடக்கவிழாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்துவரப்பட்டார். டெல்லி முதல்வரைத் திட்டம் தொடங்க அழைத்த முதல்வர், கெஜ்ரிவால் டெல்லியில் அமல்படுத்திவரும் ஊழலற்ற அரசாங்கம், சிறப்பாக வழங்கப்படும் இலவசக் கல்வி உள்ளிட்டவற்றை எவ்வாறு செயல்படுத்துகிறார் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அரசு நிர்வாக நிகழ்ச்சியில், மின் நிறுத்தம் செய்யப்பட்டதற்கு இரண்டு அரசு அதிகாரிகள் நீக்கப்பட்டனர். அப்படியானால் மின் நிறுத்தத்தில் தினம்தோறும் அவதியுறும் மக்கள் சார்பில் எத்தனை அரசு அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது இந்த ஆளுங்கட்சி. இலவசமாக 300 யூனிட்டுகள் மின்சாரம்... எவ்வாறு டெல்லி மக்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை நம் முதல்வரும் கற்றுக்கொள்ள வேண்டும். இங்குள்ள ஒவ்வொரு குடிமகன்மீதும் 900 ரூபாய் கடன் இருக்கிறது. துறையூர் கொப்பம்பட்டியைச் சேர்ந்த செல்லதுரை சவுதியில் வேலை பார்க்கிறார். அவர், தான் சம்பாதித்த தொகையில் 900 ரூபாயை முதல்வருக்கு அனுப்பி அதற்கான ரசீதை தனக்கு அனுப்புமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். அவருக்கு எங்கள் ராயல் சல்யூட்.

நீங்கள் மக்கள் முதல்வர் என்றால், மக்கள் கடனை நீங்கள் ஏற்று தமிழ்நாட்டைக் கடனில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். முதலமைச்சரே உங்களுக்கு ஒரு கேள்வி... எதிர்க்கட்சித் தலைவர்கள் வீடுகளுக்கு ரெய்டு விடுகிறீர்கள். நீங்கள் மக்கள் முதல்வராக இருந்தால்... உங்கள் அமைச்சர்கள் வீடுகளுக்கு ரெய்டு விடுங்களேன். சிங்கப்பூருக்கு இணையாக சென்னையை மாற்றுவோம் என்று கூறி சென்னையைச் சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். தே.மு.தி.க கட்சியைவிட்டு பிரிந்து சென்றவர்களுக்கும் கூறுகிறேன்... மீண்டும் வந்து கேப்டனை பலப்படுத்துங்கள். இன்றைய நமது முரசு நாளைய அரசு" என்றார்.