Published:Updated:

`100 நாட்கள் ஆட்சி நிறைவு’ - சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

``லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றியதும், அவர்களுக்கு அரவணைப்பாக இருந்ததும் தான் இந்த நூறு நாளில் நாம் செய்த பெரிய சாதனையாகக் கருதுகிறேன்” சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தது. இந்தநிலையில், தமிழக அரசின் நிதிநிலை கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று வேளாண்துறையின் தனி நிதிநிலையும் தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கைக்குப் பின்னர் முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத்தில் உரையாற்றினார்.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

``100 நாட்கள் கடந்ததை பற்றி நீங்கள் எல்லாம் பெருமையாக பேசினீர்கள். ஆனால், எனக்கு அடுத்து வரும் காலங்களைப் பற்றியே நினைப்பாக இருந்துகொண்டு இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு கழகத்திற்கும் எனக்கும் இருந்த எதிர்பார்ப்பை விட இந்த நூறு நாட்களில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது. நீங்கள் பாராட்டுவது எல்லாம் இன்னும் பணியைச் சிறப்பாகச் செய்ய ஊக்கப்படுத்துகிறீர்கள் என்று நான் எடுத்துக்கொள்கிறேன்.. திமுக-வுக்கு வாக்களிக்காதவர்கள் கூட, இப்போது தேர்தல் நடந்தால் வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

வேளாண் பட்ஜெட்: `பழங்குடிகளும் இனி பயன்பெறுவர்!' - சிறுதானிய பதப்படுத்தும் மையத்திற்கு வரவேற்பு

அந்த அளவுக்கு ஒரு சிறப்பான பெயரைப் பெற்றிருக்கின்றோம். அந்த பெயரைக் காலமெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் எண்ணமாக இருக்கிறது. என்னுடைய பணிக்குத் தோளோடு தோள்கொடுத்து துணை நிற்கும் அமைச்சர்கள். பல்வேறு கட்சிகளைச் சார்ந்திருக்கக் கூடிய தலைவர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள். அதனைப் பேருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆட்சிக்கு வரும்போது கொரோனா பெருந்தொற்று நம்மைச் சூழ்ந்து இருந்தது. அதனை எதிர்கொள்ளப் போர்க்கால அடிப்படையில் நாமெல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டோம். முதல் ஒருமாத காலம் ஆம்புலன்ஸ் சத்தம் மட்டுமே. அந்த சத்தம் நம்மை நிம்மதியாக இருக்க விடவில்லை."' என்றார் முதல்வர் ஸ்டாலின்.

`யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்!” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தொடர்ந்து, ``அதையும் தாண்டி மருத்துவமனைகளில் இடம் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, என்று இப்படி ஏதாவது ஒரு செய்தி வந்து நம்மை வாட்டி வதைத்துக் கொண்டே தான் இருந்தது. இதையெல்லாம் சமாளிப்பதற்குத் தான் உடனடியாக ஒரு வார் ரூம்மை தொடங்கியிருந்தோம். மக்களின் கோரிக்கைகளைக் காதுகொடுத்துக் கேட்டோம். அந்த கோரிக்கைகளை முடிந்த அளவு நிவர்த்தி செய்தோம். இன்னும் சொல்லவேண்டும் என்றால், கோரிக்கைகளே வராத சூழலை இப்போது உருவாக்கியுள்ளோம். லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றியதும், அவர்களுக்கு அரவணைப்பாக இருந்ததும் தான் இந்த நூறு நாளில் நாம் செய்த பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் போல நடவடிக்கை எடுத்து இந்த அரசு என்று வரும்கால தலைமுறையினர் நம்மைப் பற்றிச் சொல்ல வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். முழுவதுமாக நிறைவேற்றிவிட்டோம் என்று கூறி, உங்களையும் ஏமாற்றி என்னையும் நான் ஏமாற்றிக் கொள்ள நான் தயாராக இல்லை. கண்டிப்பாக நிறைவேற்றுவோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. உறுதியாக இருக்கிறோம். நேற்று முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் இங்குத் தாக்கல் செய்தார்."

நாள் முழுக்க நாட்டுக்காக உழைக்கிறோம். ஒவ்வொரு நொடியும் மக்களுக்காகச் சிந்திக்கிறோம். தமிழ்நாட்டின் இழந்த பெருமையை மீட்டெடுக்க எங்கள் முடியும் என்ற நம்பிக்கை தரும் நாட்களாக இந்த நூறு நாட்கள் அமைத்துள்ளது - முதல்வர் மு.க. ஸ்டாலின்

``நமது அரசின் நூறாவது நாளில் தமிழகத்தில் வரலாற்றில் பதிவாகக் கூடிய வகையிலே வேளாண்துறையின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் தாயுள்ளதோடு திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரி இல்லாத நிதிநிலை அறிக்கையைக் கொடுத்துள்ளோம். இப்போது தான் தொடங்கியிருக்கிறோம். இங்குப் பலமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் நமது தலைவர் கலைஞர் சொன்னது எனது மனதில் இன்னமும் ஆழமாக இருக்கிறது. `சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம்' அவர் இருந்து செய்யவேண்டியதை, அவர் மகன் நிச்சயம் செய்வான் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஐந்தாண்டுக் கால ஆட்சியில், நூறு நாட்கள் என்பது 18-ல் ஒரு சதவிகிதம் தான்."

``ஆனால், இந்த நூறு நாட்களில் இந்த அரசு செய்துள்ள சாதனையை இங்கு நான் பட்டியல் போட்டால் உள்ளபடியாக ஒரு மூன்று மணிநேரம் ஆகும். வாய்ப்பு கிடைக்கும் போது, அமைச்சர்களோ நானோ அதைச் சொல்லக் காத்திருக்கிறேன். தமிழகத்தின் நிதி நிலைமை மட்டும் தான் கொஞ்சம் கவலை தரும் வகையில் அமைத்துள்ளது. அதையும் விரைந்து சீர் செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.. உங்களின் ஒத்துழைப்போடு தான். சீர்மிகு தமிழ்நாட்டை உருவாக்குவோம். இந்த பெரும் பொறுப்பை நான் என் தோளில் சுமக்கத் தயாராகிவிட்டேன்."

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

``நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையோடு எனது பயணத்தை நான் தொடர்வேன். எனது அரசாகத் தான் முதலில் உருவானது. இப்போது நான் சொல்கிறேன், எனது அரசு இல்லை. நமது அரசு. இது தான் என்னுடைய கொள்கை. எமது அரசு, நமது அரசு என்று சொல்லக்கூடிய வகையில் தான் இந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வாழ்த்திய அனைவர்க்கும் நன்றிகள். வாழ்த்த மனமில்லாதவர்களுக்கும் அடுத்த நூறு நாட்களுக்குள் இரண்டு மடங்காக நாங்கள் உழைப்போம். உழைப்போம்.. உழைப்போம்…" என்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.

முதல் 100 நாள்கள்... என்னென்ன செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு