Published:Updated:

பரஸ்பரம் பழிசுமத்தும் படலம்... நீட் அரசியலில் திமுக, அதிமுக உச்சக்கட்ட மோதல் - யார் சொல்வது சரி?

நீட் திமுக, அதிமுக மோதல்

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கிடையே உச்சக்கட்ட மோதல் நடைபெற்று வருகிறது. என்ன நடக்கிறது!

பரஸ்பரம் பழிசுமத்தும் படலம்... நீட் அரசியலில் திமுக, அதிமுக உச்சக்கட்ட மோதல் - யார் சொல்வது சரி?

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கிடையே உச்சக்கட்ட மோதல் நடைபெற்று வருகிறது. என்ன நடக்கிறது!

Published:Updated:
நீட் திமுக, அதிமுக மோதல்

திருப்பி அனுப்பிய ஆளுநர்:

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சார்பில், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறச் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானமானது ஒப்புதலுக்காகத் தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு நிறைவேற்றிய இந்த தீர்மானத்தை ஒப்புதல் வழங்கி, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்று ஆளும் கட்சி குற்றம் கூறிக்கொண்டிருந்தது. அதே சமயத்தில், நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஏழு கட்சிகளின் பிரதிநிதிகள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேச முடிவெடுத்தனர்.

அனைத்துக் கட்சி கூட்டம்
அனைத்துக் கட்சி கூட்டம்

ஆனால், அமித் ஷாவை சந்திக்க முடியவில்லை என தமிழக எம்.பி-க்கள் குற்றம்சாட்டினர். கடைசியாக பல்வேறு தமிழக கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொண்ட குழு அமித் ஷாவை சந்தித்துப் பேசினர். அப்போது, அமித் ஷாவிடம் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மனு ஒன்று வழங்கப்பட்டது. மேலும், அவரிடம் தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு வழங்குவது தொடர்பாக விரிவாகப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இந்நிலையில், தமிழக அரசு அனுப்பியிருந்த நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பு அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக கலந்துகொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து சிறப்புச் சட்டமன்ற கூட்டமும் நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீட் தேர்வு:

நீட் தேர்வு விலக்கு பெறும் விவகாரத்தில் இரண்டும் கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் கூறி பழிசுமத்திக் கொள்கிறார்கள். மற்ற கட்சித் தலைவர்களும், திமுக, அதிமுக நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது சுருக்கமாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த 2010-ம் ஆண்டு முதல், மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) கொண்டுவரப்பட்டது. அந்த சமயத்தில் மத்தியில் ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு. 2013-ம் ஆண்டு முதல் தேர்வு நடைபெற்று வந்தாலும், கடந்த 2017- ம் ஆண்டு முதல் தான் தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்தது பாஜக தலைமையிலான அரசு.

நீட் தேர்வு
நீட் தேர்வு

தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதற்கு அன்றைய அதிமுக அரசு உட்பட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக அரசு நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதே அதிமுக அரசு ஆட்சியில் தான் மருத்துவ மாணவர்களின் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. அடுத்ததாக, திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்ய முதல் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறப்புச் சட்டப்பேரவை கூட்டம்:

திமுக ஆட்சிப் பொறுப்பு வந்ததுமே, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், இந்த நீட் தேர்வு காரணமாகச் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவும் ஆய்வு நடத்தி, பொதுமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரிடம் கருத்துக் கேட்டது. அந்த கருத்துக்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கையை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அரசுக்குத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், நீட் தேர்வு பலதரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தைக் குறைத்துள்ளது என்றும், கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டத்தைப் போல, மாநில அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம் என்று பரிந்துரை செய்திருந்தது.

சிறப்புச் சட்டப்பேரவை கூட்டம்
சிறப்புச் சட்டப்பேரவை கூட்டம்

இதனிடையே, தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா மீது எந்த முடிவும் எடுக்காமலிருந்தார். இந்த சமயத்தில், தமிழக கட்சிகளைச் சேர்த்த உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி தமிழக சட்டப்பேரவை தலைவருக்குத் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து, நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாகச் சிறப்புச் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.

சிறப்புச் சட்டமன்ற கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் தேர்வு விலக்கு மசோதாவைத் தாக்கல் செய்தார். அதன்பின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, ``ஜெயலலிதா காலத்திலிருந்தே நீட் தேர்வுக்கு எதிர்ப்புக் குரலை அதிமுக கொடுத்துவருகிறது. நீட் தேர்வை 2010-ம் ஆண்டு காங்கிரஸ் தான் கொண்டு வந்தது" என்று கூறினார். அப்போது எழுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், `நீட் விலக்கு மசோதா ஏற்கனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றத் தான் இந்த பேரவை கூடியுள்ளது. இதற்கிடையில் வேறு பிரச்னைகளைப் பேசி வேண்டாம்." என்று கூறினார்.

சிறப்புச் சட்டப்பேரவை கூட்டம்
சிறப்புச் சட்டப்பேரவை கூட்டம்

தொடர்ந்து பேசிய முதல்வர், ``தற்போது ஆளுநர் நீட் மசோதாவைத் திரும்பி அனுப்பிய இரண்டு நாள்களிலேயே மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் குடியரசுத் தலைவர் மசோதாவை நிராகரித்த ஒரு ஆண்டுக்குப் பின்னர் தான் அனைவர்க்கும் தெரியவந்தது" என்று தெரிவித்தார்.

அப்போது எழுத்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ``இப்போது நீங்களா, நாங்களா என்று பேசிக்கொண்டு போனால், பிரச்சனை நீண்டு கொண்டே தான் போகும். பேசியதை விட்டுவிட்டு தீர்மானத்துக்கு ஆதரவு தெரியுங்கள்" என்று பேசினார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசுகையில், ``அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு வந்தது என்ற தவறான கருத்து உள்ளது. நீட் தேர்வு எப்போது வந்தது என்பதைக் கட்சியினர் பேசுகிறார்கள். வரலாற்றை மறைத்து யாரும் பேச முடியாது. சட்ட வல்லுநர்களைக் கொண்டு நீட் விலக்கு விஷயத்தில் அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் அதிமுக துணை நிற்கும்" என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. கடைசியில், நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் மசோதா ஒரு மனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த மசோதாவை உடனடியாக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பழிசுமத்தும் படலம்:

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், ``நீட் தேர்வு ரத்து தொடர்பாகக் கடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும். அதற்குத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அதிமுக ஆதரிக்கும். நீட் தேர்வை நேற்றும் எதிர்த்தோம். இன்றும் எதிர்க்கிறோம், நாளையும் எதிர்ப்போம். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும்வரை அதிமுக உறுதியாக எதிர்க்கும். காங்கிரஸ் கட்சி கூட்டணியில் திமுக அங்கம் வகித்த சமயத்தில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. இன்று இவ்வளவு பெரும் விளைவுகள் ஏற்படக் காங்கிரஸ் - திமுக கூட்டணி தான் காரணம். இந்திய அரசியலமைப்பின் படி ஆளுநர் தனது பணியைச் செய்துகொண்டிருக்கிறார்" என்று பேசியிருந்தார்.

திமுக -அதிமுக
திமுக -அதிமுக

இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் ``சமூகநீதியை வெட்டிச் சாய்க்க வெறிகொண்டு துடிக்கும் நீட் எனும் கொடுவாளை ஏந்தியிருக்கும் எதேச்சாதிகாரத்தின் கரங்களை சட்டரீதியாக ஒடுக்குவதில் சமரசமற்ற அகிம்சைப் போரினைத் தொடங்கியுள்ளோம். பிப்ரவரி 8-ஆம் நாள் கூட்டப்படும் சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தின் நோக்கமும், அதில் நிறைவேற இருக்கிற தீர்மானமும், கடைக்கோடித் தமிழ் மாணவருக்கு எட்டாக் கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பு கிட்ட வேண்டும் என்பதுதான்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், `அதிமுக ஆட்சியில் நீட் மசோதா நிராகரித்தது குறித்த தகவல் முன்கூட்டியே தெரிந்தும், அதுகுறித்து அன்றைய சட்ட அமைச்சர் சி.பி.சண்முகம் மவுனம் காத்தார். சட்டமன்றத்தில் நாம் கேட்ட கேள்விகளுக்கும் கூறிய பதில் வழங்கப்படவில்லை. நீட் விவகாரத்தில் திருடனைப் போலச் சிக்கிக்கொண்டது அதிமுக. நீட் தேர்வு வைத்து அரசியல் செய்யும் அவசியம் திமுக-வுக்கு இல்லை" என்று முதல்வர் கூறியிருந்தார்.

``இந்தியாவில் நீட் தேர்வு கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தாலும், தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசார கூட்டத்திலும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லாது மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும் என்று உறுதி அளித்திருந்தார். சொன்னது போல அவர் தலைமையிலான ஆட்சி இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, காங்கிரஸ் நீட் தேர்வு கொண்டுவந்த சமயத்தில் திமுக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் அங்கம் வகித்தது. ஆனாலும், தமிழகத்தில் அந்த காலகட்டத்திலும் நீட் தேர்வு கொண்டுவரப்படவில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

இப்படி இரண்டு கட்சிகளுமே ஒருவர் இன்னொருவரின் மீது பழிசுமத்தி குற்றம் கூறிக்கொண்டிருக்கிறார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல முயற்சி செய்துகொண்டிருப்பது உண்மையே. அதே சமயத்தில், அதிமுக கூறுவது போல, நீட் தேர்வு கொண்டுவரும்போது காங்கிரஸ் கட்சியோடு திமுக கூட்டணியிலிருந்ததும் உண்மை தான். எப்படி முதன்மையான இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொள்ளாமல். ஒற்றுமையாகச் செயல்பட்டு தமிழக மக்களுக்கு எது நன்மையோ அதனை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும்” என்பதை சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism