Published:Updated:

“நட்பு வேறு; கட்சி வேறு!”

அன்பில் மகேஷ் - நேரு
பிரீமியம் ஸ்டோரி
அன்பில் மகேஷ் - நேரு

அன்பில் மகேஷ் அதிரடி

“நட்பு வேறு; கட்சி வேறு!”

அன்பில் மகேஷ் அதிரடி

Published:Updated:
அன்பில் மகேஷ் - நேரு
பிரீமியம் ஸ்டோரி
அன்பில் மகேஷ் - நேரு
அன்பில் மகேஷைச் சுற்றிவரும் சர்ச்சைகள் குறித்து அவரிடம் நேரடியாகச் சில கேள்விகளை முன்வைத்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“கட்சியின் சீனியர்களான வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் ஆகியோர் தி.மு.க-விலிருந்து வெளியேறியதற்கு நீங்களும் உதயநிதியும்தான் காரணம் என்கிறார்களே..?”

“புதிதாகப் பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து நானோ அல்லது உதயநிதி சொல்லியோ தளபதி கேட்க மாட்டார். யார் வேலை செய்கிறார்கள், செய்யவில்லை என்று தளபதிக்குத் தெரியும். சிற்றரசுவை எனக்குப் பெரிதாகப் பழக்கமில்லை. அவர் உதயநிதியிடம் நன்கு பழகக்கூடியவர். அவரைவைத்துப் பல கூட்டங்களை நடத்தியிருக்கிறார். அந்தவகையில் கட்சித் தலைமைதான் அவருக்குப் பொறுப்பு கொடுத்தது. இதில் என் தலையீடு எதுவும் இல்லை.”

“கட்சியில் நீங்கள் சொல்வதைத்தான் உதயநிதி செய்வதாகப் பல்வேறு மாவட்டங்களிலும் முணுமுணுப்புகள் எழுந்திருக்கின்றனவே..?”

“கலைஞரின் பேரனுக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. நான் ஒரு விஷயத்தைச் சொன்னால்கூட பலமுறை விசாரித்த பிறகே சம்பந்தப் பட்டவரிடம் பேசுவார் உதயநிதி. எங்களது நட்பு என்பது வேறு; கட்சி என்பது வேறு.”

அன்பில் மகேஷ் - நேரு
அன்பில் மகேஷ் - நேரு

“மாநிலம் முழுவதும் கட்சியின் சீனியர்களை நீங்கள் ஓரங்கட்டுவதாக வரும் புகார்கள் பற்றி..?”

“இது முற்றிலும் தவறு. தற்போதைய சீனியர்களால்தான் இந்தக் கட்சியே உருவானது. அவர்களை ஒதுக்கிவிட்டு இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சரியாக இருக்காது. இதை யாரோ கிளப்பிவிடுகிறார்கள். இதனாலேயே ‘இனி மாநிலத் தலைமை வேண்டாம்; திருச்சி அரசியல் போதும்’ என்று ஊருக்கு வந்துவிட்டேன். இனி, மாவட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துவேன்.”

“ஆனால், திருச்சியிலும் கே.என்.நேருவின் ஆதரவாளர்களை உங்கள் பக்கம் இழுத்துவிட்டீர்களே?”

“நேரு அண்ணனின் தலைமையில்தான் நாங்கள் வேலை பார்த்துவருகிறோம். இப்போது, தெற்கு மாவட்ட நிர்வாகிகள்கூட அண்ணன் நியமித்த ஆட்கள்தான். அவர்களுக்கு அரசியல் முகவரி கொடுத்தது நானில்லை; நேரு அண்ணன்தான். அவரின் மகனுக்கு எப்படிச் சுதந்திரம் கொடுப்பாரோ அதே சுதந்திரத்தைத்தான் எனக்கும் கொடுக்கிறார் அண்ணன். அதை எப்போதுமே காப்பாற்றுவேன். எந்த ஒரு நிர்வாகிக்குப் பதவி போட்டாலும், அண்ணனிடம் ஆசி பெற்றுத்தான் அறிவிப்பேன். அவரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்று எப்போதும் நினைக்க மாட்டேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism