Published:Updated:

``ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு ஒரு நீதி, இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதியா?" - கே.எஸ்.அழகிரி காட்டம்

கே.எஸ்.அழகிரி

``மோடி இன்று எல்லாவற்றையும் தனியார்துறையாக மாற்றிவருகிறார். ரயிலை மட்டுமல்ல, ரயில் நிலையத்தையும்கூட விற்றுவருகிறார்." - கே.எஸ்.அழகிரி

``ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு ஒரு நீதி, இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதியா?" - கே.எஸ்.அழகிரி காட்டம்

``மோடி இன்று எல்லாவற்றையும் தனியார்துறையாக மாற்றிவருகிறார். ரயிலை மட்டுமல்ல, ரயில் நிலையத்தையும்கூட விற்றுவருகிறார்." - கே.எஸ்.அழகிரி

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134-வது பிறந்தநாள்விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த நிலையில், சென்னை, கிண்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி நேருவின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ``ஜவஹர்லால் நேரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்டவர். அவர் ரயில்வேதுறை, நெடுஞ்சாலைத்துறை, நாட்டின் நட்சத்திரமாக விளங்கிய பி.எஸ்.என்.எல் போன்ற பல்வேறு பொதுத்துறைகளை நாட்டுக்காக ஏற்படுத்தியவர். அதனால்தான் இந்தியா சிறப்பாகச் செயல்படுகிறது.

ஜவஹர்லால் நேரு
ஜவஹர்லால் நேரு

இல்லையென்றல், பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் போன்று இந்தியாவும் எப்போதோ மாறியிருக்கும். ஆனால், அந்த ஒருவர் உருவாக்கியதை, இன்று மத்தியில் இருக்கும் பா.ஜ.க விற்றுவருகிறது. எல்லாவற்றையும் பொதுத்துறையாக மாற்றினார் நேரு. ஆனால், மோடி இன்று எல்லாவற்றையும் தனியார்துறையாக மாற்றிவருகிறார். ரயிலை மட்டுமல்ல, ரயில் நிலையத்தையும்கூட விற்றுவருகிறார் மோடி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை குறித்து எங்களுக்கு உடன்பாடில்லை.

25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்றால், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட எத்தனையோ இஸ்லாமிய இளைஞர்கள், வழக்குகூட பதியப்படாமல் சிறையில் இருக்கிறார்களே... அவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமல்லாவா... அவர்களுக்கும் வாழ்க்கை கொடுங்களேன்... அவர்களையும் சமூக நீரோட்டத்தில் கலக்கவிடுங்கள். அது என்ன ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளுக்கு ஒரு நீதி, இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதியா?

முதல்வர் மு.க.ஸ்டாலின் - திமுக
முதல்வர் மு.க.ஸ்டாலின் - திமுக

நாங்கள் தி.மு.க-வுடன் கூட்டணியில் இருப்பதால் எல்லாவற்றையும் அவர்களுக்கு வலியுறுத்திக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. தி.மு.க-வும் காங்கிரஸும் மதச்சார்பின்மை என்ற கருத்தில்தான் இணைந்திருக்கிறோம். மற்றபடி எங்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு" என்றார்.