Published:Updated:

ரஜினி - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: கூர்ந்து கவனிக்கும் கமல், தி.மு.க தரப்பு!

Rajini
Rajini

ஏற்கெனவே மக்கள் நீதி மய்யம், அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் பணியாற்றிவருவதாகக் கூறப்பட்ட நிலையில், இப்போது ரஜினி

''ரஜினி, பிரசாந்த் கிஷோர் சந்திப்பு?''

''கட்சி ஆரம்பிப்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். அதற்காக பலரிடமும் அவர் ஆலோசனை பெற்றுவருகிறார். படப்பிடிப்புக்காக மகாராஷ்டிரம் போயிருந்த நேரத்தில், அங்கு உள்ள மூத்த அரசியல் பிரமுகர் ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஏற்கெனவே மக்கள் நீதி மய்யம், அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் பணியாற்றிவருவதாகக் கூறப்பட்ட நிலையில், இப்போது ரஜினிக்கு ஆலோசனை வழங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.” மேலும் படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2o4POfr

''கமலின் ரியாக்‌ஷன் என்னவோ?''

“ரஜினியின் இந்தச் சந்திப்பை, கமல் தரப்பும் தி.மு.க-வும் உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ரஜினியின் அரசியல் என்ட்ரி எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும், யாருடன் அவர் கூட்டணி அமைப்பார் என்றெல்லாம் தீவிரமாக ஆலோசனை செய்துவருகிறார்கள்.''

*

ரஜினி - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: கூர்ந்து கவனிக்கும் கமல், தி.மு.க தரப்பு!

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் இரண்டு பெண் உயரதிகாரிகள் 'கூடுதல்' கமிஷன் அடிப்பதில் 'டெக்னிக்கலாக' வீடுகட்டி அடிக்கிறார்கள் என்று பல சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே புகார் வாசிக்கின்றனர். ஐந்து ஆண்டுகளாக அதே இடத்தில் விடாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் அவர்கள் டிரான்ஸ்ஃபர், டெண்டர் உள்ளிட்ட விஷயங்களில் துறையின் உச்ச அதிகாரியின் கவனத்துக்கே கொண்டு செல்லாமல் சாதித்துக்கொள்கிறார்கள் என்கிறது கோட்டை வட்டாரம். விஷயம் கசிந்து விஜிலென்ஸ் தரப்பில் ரகசியமாக விசாரிக்கப்போக... அள்ள அள்ளக் குறையாத 'அமிர்த'சுரபியாக இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் குவித்த பல கோடி சொத்துகளைக் கணக்கிட்டு, வடிவேலு பாணியில் 'உஷ்ஷ்' என்று டயர்டாகிறார்களாம் அதிகாரிகள்!

*

''சசிகலா தரப்புக்கும் எடப்பாடிக்கும் இடையே அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது. அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் இந்த ஆண்டும் நடைபெறுவது சந்தேகம். இதற்கு எடப்பாடி தரப்பிலிருந்து முட்டுக்கட்டை போடப்படுகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும் வரை பொதுக்குழுவைத் தள்ளிப்போட்டுவிட வேண்டும் என்று எடப்பாடி திட்டமிடுகிறார். சசிகலா வந்த பிறகு அவரை கட்சிக்குள் கொண்டுவந்து அவருக்கு ஒரு பதவியை பொதுக்குழுவை வைத்து உருவாக்கத் திட்டமிடுகிறார்.''

ரஜினி - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: கூர்ந்து கவனிக்கும் கமல், தி.மு.க தரப்பு!

எடப்பாடியின் இந்தத் திட்டத்தின் பின்னணி என்ன? இதற்கு அ.தி.மு.க-வில் ரியாக்‌ஷன்கள் என்னென்ன > விரிவாக தகவல் சொல்லும் ஜூனியர் விகடன் கழுகார் பகுதி > மிஸ்டர் கழுகு: தள்ளிப்போகிறதா அ.தி.மு.க பொதுக்குழு? 'அடடே' திட்டத்தில் எடப்பாடி! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-admk

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான

325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |

அடுத்த கட்டுரைக்கு