Published:Updated:

'சிரிப்பும்... கேலியும்' - ஸ்டாலினின் ஐ.நா பயணமும்... கொதிக்கும் தி.மு.க-வும்!

ஸ்டாலின்
News
ஸ்டாலின்

கழகத்தின் மீதுள்ள பொறாமையில் சில்லுண்டுத்தனமாகச் சிரிப்பதும் சித்திரித்து கேலி பேசுவதும், குரைப்பதுமாக இருக்கிறார்கள். அந்தச் சிரிப்பொலிக்கும் குரைப்பொலிக்கும் தொடர்ந்து பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.

ஐ.நா சபை மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. உலகம் முழுக்க மனித உரிமைக்காகப் போராடும் முக்கியத் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். இதில் கலந்துகொள்ள ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், ஸ்டாலின் தரப்பு வலியுறுத்தியே இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு புகழ்தேட நினைக்கிறது. ஐ.நா-வில் இதுபோல பலர் உரையாற்றியுள்ளார்கள். ஐ.நா-வே ஸ்டாலினைப் பேச அழைத்ததாகக் கூப்பாடு போடுகிறது தி.மு.க” என்று பா.ம.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாகக் கடும் விமர்சனங்களை எழுப்பிவருகின்றன.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில் தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரும், ஏற்கெனவே ஐ.நா-வின் மனித உரிமை ஆணையத்துக்கு ஸ்டாலினை அழைத்துச் சென்றவருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், ``ஈழத்தமிழர் குறித்து பேச தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஐ.நா மனித உரிமை ஆணையத்துக்குச் செல்லலாம் என்ற செய்தியைக் கேட்டாலும் கேட்டார்கள், உடனே கொதித்தெழுந்துவிட்டனர் குலக்கொழுந்துகள்.

பழையனவற்றை மறந்து பேசுகின்றனர். அன்புமணி ராமதாஸ்கூட இப்படிப் பதிவு செய்துவைத்திருக்கும் ஓர் அமைப்பான பசுமைத் தாயகம் முயன்று, ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில்தான் பேசினார். அப்போது என்ன செய்தி வெளியிட்டனர் என்பதை அவர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன். அதைத் தவறு என அப்போதும் சரி, இப்போதும் சரி... நான் திரித்துப் பேசவில்லை. ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பதிவுசெய்த இந்த அமைப்புகள் மூலம்தான் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பேச நேரமும் வழங்கும்.

ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டம், மன்றத்தின் அரங்கத்தில்தான் நடத்தப்படும். இதில் பிரதான மத்திய அரங்கில் (main central hall) கழகத் தலைவர் பேச ஏற்பாடு நடந்துள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டு அதை ஐ.நா ஆண்டறிக்கையில் பதிவுசெய்வார்கள்.

ஸ்டாலினுக்கு வழங்கப்ட்ட அடையாள அட்டை
ஸ்டாலினுக்கு வழங்கப்ட்ட அடையாள அட்டை

கழகத்தின் மீதுள்ள பொறாமையில் சில்லுண்டுத்தனமாகச் சிரிப்பதும் சித்திரித்து கேலி பேசுவதும், குரைப்பதுமாக இருக்கிறார்கள். அந்தச் சிரிப்பொலிக்கும் குரைப்பொலிக்கும் தொடர்ந்து பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கருதுகிறேன். ஆனாலும், சிலவற்றைச் சொல்லித்தான் தீர வேண்டும்.

பசுமைத் தாயகம் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பு அமைப்பு என்று அனைவருக்கும் தெரியும். அந்த அமைப்பின் பெயரால்தான் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடருக்குக் கலந்துகொள்ளச் சென்றார். ஆனால், கழகத் தலைவர் மற்றும் எங்களைப் போன்றவர்களுக்கோ அப்படியான அமைப்பு எங்களுக்கு இல்லை. ஈழத்தமிழர்கள் விரும்பி, அவர்களின் முயற்சியால்தான் எங்களுக்கு அழைப்பிதழ்கள் வந்தன.

இந்நிலையில் இந்தக் கூப்பாடு என்பது ஈழத்தமிழர்களின் உண்மையான பிரச்னைக்கே குந்தகம் விளைவிக்கும் கூப்பாடாகத்தான் இருக்குமேயொழிய, ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் பிரச்னையின் பலத்தினை இவர்கள் கூப்பாட்டால் பலமும் வீரியமான வீச்சும் சேதாரம்தானே படும்” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் தி.மு.க-வுக்கு இதுபோன்று ஏற்கெனவே வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தி.மு.க சார்பில் ஐ.நா மன்றத்திடம் கேட்டு இந்த அழைப்புக் கடிதம் வரவில்லை என்றும், ஈழத்தமிழர்களின் விருப்பத்தின் பெயரில் அவர்கள் முயற்சியில் ஐ.நா மனித உரிமை அமைப்பில் அரசியல் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் ஸ்டாலின் பெயர் பதிவுசெய்யப்பட்டு இந்த அழைப்புக் கடிதம் ஐ.நா-வின் முத்திரையோடு வந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அவர், “ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுடைய பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்றுதான் ஐ.நா மனித உரிமை ஆணையம் எல்லோருக்கும் கடிதம் வழங்கியுள்ளது.

ஸ்டாலின் ஐ.நா மனித உரிமை அலுவலர் சந்திப்பு
ஸ்டாலின் ஐ.நா மனித உரிமை அலுவலர் சந்திப்பு

அந்த வகையில், கழகத் தலைவரை மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து ஈழச் சகோதர்களே, அவர்களின் விருப்பத்தின்படி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பெற்று அனுப்பிய கடிதம்தான் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை. இதே மனித உரிமைக் கூட்டத்தில் ஏற்கெனவே நான் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளேன். அதேபோல் 2017-ம் ஆண்டு ஐ.நா அவையில் கலந்துகொள்ள தனக்கும், ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோருக்கும் அழைப்பும் அடையாள அட்டையும் வந்ததையும் அவர் சுட்டிகாட்டிள்ளார். இதன்மூலம், கடுமையான கண்டனங்களை தி.மு.க மீது வைத்தவர்களுக்கு தக்க பதிலாகச் சொல்லியுள்ளார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.