ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம், அ.தி.மு.க கூடாரத்துக்கு அதிர்ச்சியையும் தி.மு.க முகாமுக்கு கூடுதல் உற்சாகத்தையும் ஒருசேர அளித்துள்ளது.

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நேரம்...

அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் ஆறு முறை திடீர் மாற்றங்களைச் செய்து, கழக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ஜெயலலிதா. வேட்புமனுத் தாக்கல் வரையில் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், அச்சத்துடனேயே உலா வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த வரிசையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியின் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர் ஜி.டி.லாரன்ஸ். அவர் தொடர்பான சில புகார்கள் சென்றதும், `அடுத்ததாக யார் பெயரை அறிவிக்கப்போகிறது தலைமை?’ எனத் தொண்டர்கள் மத்தியில் விவாதம் கிளம்பியது. அ.தி.மு.க வழக்கறிஞர், அரசு பிளீடர் என்று பல்வேறு பதவிகளை வகித்துவந்த ஐ.எஸ்.இன்பதுரைக்கு அந்த வாய்ப்பு தேடி வந்தது. அவரை எதிர்த்து தி.மு.க வேட்பாளராக அப்பாவு போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தி.மு.க-வுக்குச் சாதகமாக வந்துகொண்டிருந்த நேரத்தில்தான், அந்தக் காட்சி அரங்கேறியது. `நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கையெழுத் திட்டதால், 203 தபால் வாக்குகள் செல்லாது’ என்று தேர்தல் அதிகாரி கூறவே, அதே இடத்தில் சண்டையிட்டார் அப்பாவு. போலீஸ் துணையோடு வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து அவரை இழுத்து வெளியே தள்ளினர் அதிகாரிகள். முடிவில், 49 வாக்குகள் வித்தி யாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. அதிகாரி களின் கடைசி நேரக் குளறு படிகளை எதிர்த்து சட்டப் போராட்டத்துக்குத் தயாரானார் அப்பாவு. இரண்டு ஆண்டுக்கால சட்டப் போராட்டத் துக்குப் பிறகு, மறுவாக்கு எண்ணிக்கை முடிவடைந்துவிட்டது. ஆனால், அந்த விவரங்களை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டார் இன்பதுரை.

இந்த நிலையில் அப்பாவுவிடம் பேசினோம்.

‘‘இரண்டு ஆண்டுக்கால சட்டப் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘என் வாழ்க்கையில் எந்தக் காலத்திலும் அந்தச் சம்பவத்தை மறக்க முடியாது. வாக்கு எண்ணிக்கையின்போது தபால் ஓட்டுகளில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கையெழுத்திட்ட வாக்குகளை `செல்லாத வாக்கு’ எனச் சொல்லிவிட்டனர். `அய்யா... நீங்கள் செய்வது தவறு’ என்று அந்த இடத்திலேயே வாதிட்டேன். என் கேள்விக்கு முதலில் எந்தப் பதிலும் சொல்லாத தேர்தல் அதிகாரி, பிறகு `எல்லாம் சரியாகத்தான் நடக்கின்றன’ என்றார். தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையத்திலிருந்து என்னை வெளியேற் றினர். அடுத்து 19, 20, 21 ஆகிய சுற்றுகளின் முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படாமல், அ.தி.மு.க வேட்பாளர் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவித்தனர். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, தபால் வாக்குகள் மற்றும் முடிவு அறிவிக்கப்படாத மூன்று சுற்று முடிவுகளுக்கும் சேர்த்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடுத்தேன். விசாரணை முடிவில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்துமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.’’

‘‘மறுவாக்கு எண்ணிக்கையைத் தடுக்க, கடுமையாகப் போராடியதே அ.தி.மு.க?’’

‘‘தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கை நடத்தாமல் செய்வதற்கு பல்வேறு வேலைகளைச் செய்தார்கள். `வழக்கை விசாரிக்க முகாந்திரம் இல்லை’ என எதிர்த்தரப்பு வழக்கு தொடர்ந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது நீதிமன்றம். மறுவாக்கு எண்ணிக்கைக்கு நீதிபதிகள் உத்தரவிட்ட பிறகும், பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினர். வாக்குப் பெட்டிகளை நெல்லையிலிருந்து மதுரைக்கு எடுத்து வர ஐந்து மணி நேரம் ஆனது. தாமதப் படுத்தினால் வாக்கு எண்ணிக்கையைத் தள்ளிப்போடலாம் எனத் திட்டமிட்டனர். இறுதிவரையில் அவர்களது நோக்கம் நிறைவேறவில்லை. மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டதே எங்களுக்கான வெற்றியாகப் பார்க்கிறோம்.’’

‘‘உங்களின் சட்டப் போராட்டத்துக்கு, தலைமை எந்த வகையில் உதவியது?’’

‘‘தலைவர் ஸ்டாலின், தொடர்ச்சியாக இந்த வழக்கு குறித்துக் கேட்டறிந்துகொண்டே இருந்தார். நீதிமன்ற உத்தரவு வெளியான நாளிலும், அதற்கடுத்து மறுவாக்கு எண்ணிக்கை நடந்த நாளிலும் குறைந்தது 50 முறையாவது தலைவர் ஸ்டாலின் அழைத்துப் பேசியிருப்பார். நீதிக்காகப் போராடிய என் வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மகிழ்ச்சியான சூழல் உருவாகியிருக்கிறது. என்னை நம்பி வாக்களித்தவர்களுக்கு, என்றைக்கும் கடமைப் பட்டிருக்கிறேன். உச்ச நீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை விவரங்களை வெளியிட அக்டோபர் 23-ம் தேதி வரையில் தடை விதித்திருக்கிறது. மக்கள் அளித்த வாக்குகளுக்கு உண்மையான வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்’’ என்றார் பூரிப்பான குரலில்.

இன்பதுரையிடம் பேசினோம். ‘‘வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நான் ஒரு வழக்கறிஞர். விசாரணையில் இருக்கும் வழக்கு தொடர்பாக பேசுவது நீதிமன்ற மாண்புக்கு எதிரானது’’ என்று மட்டும் சொன்னார்.

பொதுவாக, தேர்தல் வெற்றிக்கு எதிராகத் தொடரப்படும் வழக்குகளில் உரிய காலத்துக்குள் நிவாரணங்களைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. இந்த வழக்குகளில் தீர்ப்பு வருவதற்கு முன்பே, சம்பந்தப்பட்ட உறுப்பினரின் பதவிக்காலமும் முடிந்துவிடும். அப்படியல்லாமல், அ.தி.மு.க எம்.எல்.ஏ-வின் பதவிக்காலத்திலேயே மறுவாக்கு எண்ணிக்கை நடந்திருப்பதை அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.