Published:Updated:

`உதயசூரியனைக் காண தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்!’ - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

`பத்தாண்டுகளாகச் சூழ்ந்திருக்கும் இருட்டிலிருந்து மீண்டு, உதயசூரியனின் வெளிச்சத்தைக் காண, தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க-வின் புதுக்கோட்டை, அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.சந்திரனின் இல்லத் திருமணவிழாவில், காணொலிக் காட்சிவாயிலாகப் பங்கேற்று ஸ்டாலின் திருமணத்தை நடத்திவைத்தார். பின்னர், காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க-வினரிடையே பேசிய ஸ்டாலின், ``இது சுயமரியாதைத் திருமணம். தமிழ் முறையிலான திருமணம். சீர்திருத்தத் திருமணம். அதையும் தாண்டி, புதுமையான முறையில் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றிருக்கும் திருமணம்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

கொரோனா காலம் நமக்குப் பல இழப்புகளை - நெருக்கடிகளை - சோதனைகளை ஏற்படுத்தினாலும், இப்படிச் சில அரிய புதுமைகளுக்கும் வழிவகுத்திருக்கிறது. நெருக்கடியான காலத்திலெல்லாம், கழகத்துக்கு ஆறுதல் தருவதும், புது வலிமை சேர்ப்பதும், கழகத்தைச் சேர்ந்தவர்களின் இது போன்ற இல்லத் திருமணங்கள்தான். கொரோனா காலத்தைப் பயன்படுத்திக் கோடி கோடியாக கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், உலகத்திலேயே பழனிசாமி தலைமையிலான ஆட்சி மட்டும்தான் கொரோனாவைவைத்து `புதிது புதிதாக என்னவெல்லாம் ஊழல் செய்யலாம்’ என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

அடுத்தடுத்து எடுபடாத 'திட்டங்கள்' - ஐபேக் மீது கோபத்தில் ஸ்டாலின் குடும்பம்?!

அவர்களின் இந்த ஊழல் தேனிலவு - ஊழல் குடித்தனமெல்லாம் இன்னும் ஆறு மாதங்கள்தான். அதன் பிறகு, புதுக்கோட்டை மட்டுமல்ல, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் நிலைமை மாறும். தமிழ்நாட்டுக்கு புதிய வெளிச்சம் பிறக்கும். பத்தாண்டுகளாகச் சூழ்ந்திருக்கும் இருட்டிலிருந்து மீண்டு, உதயசூரியனின் வெளிச்சத்தைக் காண, தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த இயக்கத்தைப் பார்த்து, `குடும்பக் கட்சி’ என்று சொல்பவர்களுக்கு... `இந்தக் கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் எங்கள் குடும்பம்தான்’ என்று பதில் சொல்கிற பேரியக்கம் இது. குட்கா ஊழலுக்கும் - குவாரி கான்ட்ராக்ட்டுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களைப் பயன்படுத்துவோருக்கு இதன் அருமை தெரியாது. கரைவேட்டியும் கறுப்பு - சிவப்பு துண்டும்தான் நமது நிரந்தர முகவரி. நாம் தி.மு.ககாரர்கள் என்பதுதான் நமது அசையாச் சொத்து. நம்மையோ இந்த இயக்கத்தையோ எவராலும் அசைக்கவும் முடியாது. ஆட்டவும் முடியாது. விரைவில், உதயசூரியனால் தமிழ்நாட்டிலுள்ள அனைவருக்கும் புது ஒளி பிறக்கும்’’ என்று ஸ்டாலின் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு