Published:Updated:

கோவை: கேள்வி எழுப்பிய மேயர்... போட்டுடைத்த அதிகாரி... சர்ச்சையில் திமுக கவுன்சிலர்கள்!

கோவை மேயர்

கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்னை தொடர்பாக மேயர் எழுப்பிய கேள்விக்கு, அதிகாரி சொன்ன பதில் வைரலாகிவருகிறது.

கோவை: கேள்வி எழுப்பிய மேயர்... போட்டுடைத்த அதிகாரி... சர்ச்சையில் திமுக கவுன்சிலர்கள்!

கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்னை தொடர்பாக மேயர் எழுப்பிய கேள்விக்கு, அதிகாரி சொன்ன பதில் வைரலாகிவருகிறது.

Published:Updated:
கோவை மேயர்

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், கடந்த சில நாள்களுக்கு முன்பு வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் ஆய்வு செய்திருக்கிறார். அப்போது அங்கு அனுமதி இல்லாமல் குப்பை அள்ளுவோர் குறித்து அதிகாரிகளிடம், ‘இதற்கு யார் பொறுப்பாளர்?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுகாதார அலுவலர் திருமால்,

குப்பைக் கிடங்கு
குப்பைக் கிடங்கு

``இதை ஒழுங்குப்படுத்த முன்பே செந்தில் பாஸ்கர் என்ற உயரதிகாரிக்குக் கடிதம் எழுதினேன். குப்பை அள்ளுவதை நிறுத்தச் சொல்லி உத்தரவு போட்டோம். கவுன்சிலர்களின் பெயர்களைச் சொல்லி உள்ளே வருகின்றனர்” என அவர் கூறினார்.

“பெயரைச் சொல்லுங்க.” என்று மேயர் கல்பனா கேட்டதும் அவர் சற்றே தயங்கினார். “சார், நான் மேயர் கேட்கிறேன். பெயரைச் சொல்லுங்க.” என்று கேட்கவே, ‘100-வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன், துணை மேயர் பெயரைச் சொல்கின்றனர்’ என்று தயக்கத்துடன் கூறினார். “குப்பை பொறுக்க டெண்டர் விடப்பட்டிருக்கிறதா...

கோவை மேயர்
கோவை மேயர்

அத்துமீறி குப்பை பொறுக்க உள்ளே அனுமதிக்கலாமா?” என்று மேயர் கல்பனா தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.

அப்பாவிகளைவைத்து பிளாஸ்டிக், இரும்புக் குப்பைகளை எடுத்து திமுக-வினர் தினசரி லட்சக்கணக்கில் பணம் பார்க்கின்றனர். இப்போது உட்கட்சிப்பூசலால் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றனர்.

``ஏன் மேயரும், துணை மேயரும் ஒன்றாக ஆய்வு செய்யவில்லை?’’ என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இது குறித்து துணை மேயர் வெற்றிச்செல்வனிடம் விளக்கம் கேட்டபோது, ``வயிற்றுப் பிழைப்புக்காகச் சிலர் குப்பை அள்ளுகின்றனர். இதுவரை யாரும் டெண்டர் விடவில்லை.

துணை மேயர் வெற்றிச்செல்வன்
துணை மேயர் வெற்றிச்செல்வன்

அங்கு குப்பை அள்ளுபவர்களுக்கு பாஸ் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. என் ஆட்களை விடுங்கள் என்று நான் எந்த அதிகாரியிடமும் பேசியதில்லை. அதிகாரிகள் எடுத்த வீடியோவை, சிலர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக சித்திரித்து பரப்பிவருகின்றனர்’’ என்றார்.

சுகாதார அலுவலர் திருமாலிடம் கேட்டபோது, “வாழ்வாதாரத்துக்காகச் சிலர் குப்பை அள்ளுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். எங்களால் முடிந்தவரை இவர்களை ஒழுங்குபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

வெள்ளலூர் குப்பை கிடங்கு
வெள்ளலூர் குப்பை கிடங்கு

குப்பை அள்ளத் தடைவிதித்திருந்தபோது சிலர் கவுன்சிலர்களிடம் பேசி உள்ளே வந்தனர். மேயர், அவர்கள் எந்த அடிப்படையில் வருகின்றனர் எனக் கேட்டதால் நடந்ததைச் சொன்னேன். அவ்வளவுதான்” என்றார்.