Published:Updated:

தொடர் உட்கட்சிப்பூசல்; சுயேச்சையாகக் களமிறங்கும் திமுக-வினர்?! - திண்டிவனம் நகராட்சியில் நடப்பதென்ன?

அமைச்சர் செஞ்சி மஸ்தான் ( Facebook - Gingee masthan )

போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால், திமுக-வின் ஒரு தரப்பினர் சுயேச்சையாக நிற்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் திண்டிவனம் தேர்தல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தொடர் உட்கட்சிப்பூசல்; சுயேச்சையாகக் களமிறங்கும் திமுக-வினர்?! - திண்டிவனம் நகராட்சியில் நடப்பதென்ன?

போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால், திமுக-வின் ஒரு தரப்பினர் சுயேச்சையாக நிற்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் திண்டிவனம் தேர்தல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Published:Updated:
அமைச்சர் செஞ்சி மஸ்தான் ( Facebook - Gingee masthan )

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மூன்று நகராட்சிகளில் ஒன்று திண்டிவனம். நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. அதனால், தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு வேகம் காட்டிவருகின்றனர் அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும். ஆனால், திண்டிவனம் நகர திமுக-வில் நிலவிவந்த உட்கட்சி குஸ்தி, இப்போது இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளது.

அமைச்சர் மஸ்தான், முதலமைச்சர் ஸ்டாலின்
அமைச்சர் மஸ்தான், முதலமைச்சர் ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்துவரும் அமைச்சர் மஸ்தான், செலவு செய்பவர்கள், தனது ஆதரவாளர்கள் என சீட்டுகளை ஒதுக்கீடு செய்ததால், உட்கட்சிக்குள் குஸ்தி நடைபெறத் தொடங்கியது என்கிறார்கள் உடன்பிறப்புகள். திண்டிவனம் திமுக நகரச் செயலாளராக இருக்கும் கபிலன், தனது ஆதரவாளர்களுக்கு வார்டு கவுன்சிலராகப் போட்டியிட சீட் கேட்டிருக்கிறார். ஆனால், கபிலனின் ஆதரவாளர்கள் யாருக்கும் மாவட்டச் செயலாளர் சீட் தருவதற்கு பரிசீலனை செய்யவில்லை என்று அவர்களுக்குத் தகவல் தெரியவந்ததை அடுத்து கடந்த மாதம் 31-ம் தேதி திண்டிவனத்திலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் மாவட்டச் செயலாளருக்கு எதிராக ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்களாம் கபிலன் தரப்பினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கு முன்னதாகவே, மாவட்டச் செயலாளரான மஸ்தானைச் சந்தித்து தனது ஆதரவாளர்கள் சிலருக்கு சீட் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தாராம் கபிலன். இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி அன்று திமுக தலைமை திண்டிவனம் நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டபோது கபிலனின் ஆதரவாளர்களுள் ஒருவரான செல்வராஜைத் தவிர்த்து, அதில் வேறு யாருக்கும் சீட் ஒதுக்கப்பட்டவில்லையாம். இதனால் நகரச் செயலாளர் கபிலன் தரப்பினர் ஒரே அப்செட்டாம். செல்வராஜுக்கு சீட் கொடுத்ததும் 31-வது வார்டில் வேறு நம்பிக்கையான ஆள் இல்லை என்பதால்தான் என்கின்றனர் கட்சியினர் சிலர். சீட் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட வந்த கபிலன் தரப்பினர், ஏழு வார்டுகள் வரை சுயேச்சையாகக் களமிறங்க முடிவு செய்துள்ளனராம். இந்த விவகாரம் உட்கட்சிக்குள் புகைச்சலை மேலும் அதிகரித்துள்ளது.

திண்டிவனம் நகராட்சி அலுவலகம்
திண்டிவனம் நகராட்சி அலுவலகம்
Facebook

திண்டிவனம் நகராட்சி மொத்தம் 33 வார்டுகளை உள்ளடிக்கியுள்ளது. திமுக தலைமை, இதில் 26 வார்டுகளுக்கு மட்டும்தான் வேட்பாளர்களை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளதாம். மீதமுள்ள ஏழு வார்டுகளில்... மூன்று வார்டுகள் வி.சி.க மற்றும் ஒரு வார்டு காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம். எஞ்சிய மூன்று வார்டுகளுக்கு இதுவரையில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படாமலே இருந்துவருகிறதாம். அந்த இடங்களில் ஒன்றான 20-வது வார்டில் போட்டியிட திமுக-வைச் சேர்ந்த இருவரிடையே கடுமையான போட்டி நிலவுகிறதாம். ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் மற்றொருவர் 'சுயேச்சையாகப் போட்டியிடுவேன்' எனப் பிடி கொடுக்காமல் உள்ளனராம்.

இந்த வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் கஸ்தூரியே நகராட்சித் தலைவர் வேட்பாளராக இருப்பார் என்பதால், அவருக்கு எதிராக திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் `தாராள’ வேட்பாளராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறதாம் மாவட்ட திமுக தலைமை. உட்கட்சி குஸ்தியாலும், குற்றப் பின்னணிகொண்ட சிலருக்கு சீட் கொடுக்கப்படுவதாலும் கொதிப்பில் ஆழ்ந்துள்ளனர் திண்டிவனம் திமுக உடன்பிறப்புகள்.

திண்டிவனம் நகராட்சித் தேர்தலில் நிகழவுள்ள மாற்றங்கள் என்னென்ன என்று இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். பொறுத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism