Published:Updated:

தென்காசி: பெண் தலைவரை அவதூறாகப் பேசிய உறுப்பினர்? - மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் குழப்பம்

மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் குழப்பம்

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் இதுவரை இரு முறை கூடியுள்ளது. அவை அனைத்துமே கூச்சல் குழப்பம் ஏற்பட்டு முடிவடைந்த நிலையில், இன்றைய கூட்டத்திலும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வியை அவதூறாகப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி: பெண் தலைவரை அவதூறாகப் பேசிய உறுப்பினர்? - மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் குழப்பம்

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் இதுவரை இரு முறை கூடியுள்ளது. அவை அனைத்துமே கூச்சல் குழப்பம் ஏற்பட்டு முடிவடைந்த நிலையில், இன்றைய கூட்டத்திலும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வியை அவதூறாகப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் குழப்பம்

தென்காசி மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. அதில் 10 வார்டுகளை தி.மு.க-வும், 3 வார்டுகளை காங்கிரஸும், ஒரு வார்டில் ம.தி.மு.க-வும் வெற்றி பெற்றிருந்தன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தி.மு.க சார்பாக தமிழ்செல்வியும், போட்டி வேட்பாளராக கனிமொழியும் களமிறங்கியதில், தமிழ்செல்வி வெற்றி பெற்றார்.

இரு தரப்பின்ரும் ஆக்ரோஷமாக பேசியதால் குழப்பம்
இரு தரப்பின்ரும் ஆக்ரோஷமாக பேசியதால் குழப்பம்

அதன் பினனர் நடந்த இரு கூட்டங்களிலும், 6-வது வார்டு உறுப்பினரான கனிமொழி சரமாரியாக கேள்விகளை எழுப்பியதால் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. அத்துடன், தனது ஆதரவு கவுன்சிலர்களை அழைத்துக் கொண்டு சென்னைக்குச் சென்று தலைமையிடம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்விக்கு எதிராகப் புகார் அளித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாவட்ட பஞ்சாயத்து சார்பாக நடந்த கடந்த இரு கூட்டங்களிலும் கூச்சல் குழப்பமே நீடித்தது. இந்த நிலையில், இன்று மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட கூட்டத்துக்கு கனிமொழி தனது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என வெளியாள்களை அழைத்து வந்திருந்தார். அதனால் கூட்ட அரங்கினுள் வந்திருந்த வெளியாட்களும், மாவட்ட பஞ்சாயத்து தலைவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.

ஒரு கட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான கனிமொழியும் அவரது ஆதரவாளர்களும் தலைவரை ஒருமையில் பேசியதுடன் அவதூறான வார்த்தைகளால் பேசியதால் கூச்சல் குழப்பம் நீடித்தது. பின்னர் காவல்துறையினர் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினார்கள். அதனால இந்தக் கூட்டத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாமல் முடிவடைந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட பஞ்சாயத்து தலைவரான தமிழ்செல்வி, ``மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் கட்சி சார்பாகப் போட்டியிட்ட என்னை எதிர்த்து கனிமொழி போட்டியிட்டார். அதன் பிறகு அவர் என் மீது வன்மத்துடன் செயல்படுகிறார். மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்துக்கு தனக்கு வேண்டியவர்களை அழைத்து வந்து வன்முறையில் ஈடுபடும் எண்ணத்துடன் செயல்பட்டார்.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி

அவரது நடவடிக்கை குறித்து கட்சித் தலைமையிடம் புகார் அளிப்பேன். அத்துடன் இந்தக் கூட்டத்துக்குள் வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் என்னை அவதூறாக பேசினார்கள். இது தொடர்பாக காவல் துறையினரிடமும் புகார் அளிப்பேன்” என்றார்.

தி.மு.க-வுக்குள் நடக்கும் இந்த கோஷ்டி பூசலால் மாவட்ட தி.மு.க-வில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism