Published:Updated:

``உதயநிதி ஸ்டாலினை உறுதியாக அமைச்சராக்குவார்கள்!" - சீமான் திட்டவட்டம்

சீமான்

`புதிய கல்விக் கொள்கையை இந்த அரசு ஏற்கிறதா, எதிர்க்கிறதா என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்' என சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

``உதயநிதி ஸ்டாலினை உறுதியாக அமைச்சராக்குவார்கள்!" - சீமான் திட்டவட்டம்

`புதிய கல்விக் கொள்கையை இந்த அரசு ஏற்கிறதா, எதிர்க்கிறதா என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்' என சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Published:Updated:
சீமான்

கொரோனா காலத்தில் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக மதுரவாயல் போலீஸார் அவர்மீது வழக்கு பதிவுசெய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சீமான் ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கொரோனா காலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மதுரவாயல் போலீஸார் என்மீது வழக்கு பதிவுசெய்தனர்.

உதயநிதி
உதயநிதி

புதிய கல்விக் கொள்கையை இந்த அரசு ஏற்கிறதா, எதிர்க்கிறதா என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கை இந்தி, சம்ஸ்கிருதத்தைத்தான் வலியுறுத்துகிறது.

பா.ஜ.க-வின் கோட்பாடு இந்து, இந்தியா, இந்தி என்பதுதான். அதிலும் சம்ஸ்கிருதத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். தி.மு.க-வினர் உதயநிதி ஸ்டாலினை உறுதியாக அமைச்சர் ஆக்குவார்கள். ஐந்தாண்டுக்காலத்தில் அமைச்சராக மாட்டேன் என உறுதியாகக் கூறச் சொல்லுங்கள். அதன் பிறகு நான் பதில் சொல்கிறேன்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism