Published:Updated:

EWS: `உச்ச நீதிமன்றத்தில் மூக்கறுபட்டு, இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏன்?’- ஜெயக்குமார் காட்டம்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

``உச்ச நீதிமன்றத்தில் தான்தோன்றிதனமாக வாதிட்டு, மூக்கறுபட்டு, தீர்ப்பு வந்த பிறகு, தற்போது சட்டமன்றக் கட்சிகளை அழைப்பது ஏன்?” - ஜெயக்குமார்

EWS: `உச்ச நீதிமன்றத்தில் மூக்கறுபட்டு, இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏன்?’- ஜெயக்குமார் காட்டம்

``உச்ச நீதிமன்றத்தில் தான்தோன்றிதனமாக வாதிட்டு, மூக்கறுபட்டு, தீர்ப்பு வந்த பிறகு, தற்போது சட்டமன்றக் கட்சிகளை அழைப்பது ஏன்?” - ஜெயக்குமார்

Published:Updated:
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என, சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றிருந்தன. அதேநேரம், தி.மு.க., வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதையடுத்து 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சட்டசபையில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளின் பிரதிநிதிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் தகவல் வெளியானது. ஆனால், இந்த இட ஒதுக்கீடு குறித்து அ.தி.மு.க தரப்பில் எந்தக் கருத்தும் கூறப்படவில்லை. இந்த நிலையில், 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க பங்கேற்காது எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற தி.மு.க-வின் கபட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வழக்கு நடந்துகொண்டிருந்தபோது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், உச்ச நீதிமன்றத்தில் தான்தோன்றித்தனமாக வாதிட்டு, மூக்கறுபட்டு, தீர்ப்பு வந்த பிஅகு, தற்போது சட்டமன்றக் கட்சிகளை அழைப்பது ஏன்?

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

பா.ஜ.க தேவை இல்லை என்பதால் 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்ப்பதுபோல் தி.மு.க நடிக்கிறது. 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.