Published:Updated:

“நானும் என் மகனும் பரம்பரை கட்சிக்காரர்கள்!”

Minister Ponmudi
பிரீமியம் ஸ்டோரி
Minister Ponmudi

நாடாளுமன்றத் தேர்தலில் மாஸ் காட்டிய தி.மு.க-வுக்கு, வேலூர்த் தேர்தலில் மரணபயம் காட்டிவிட்டது அ.தி.மு.க!

“நானும் என் மகனும் பரம்பரை கட்சிக்காரர்கள்!”

நாடாளுமன்றத் தேர்தலில் மாஸ் காட்டிய தி.மு.க-வுக்கு, வேலூர்த் தேர்தலில் மரணபயம் காட்டிவிட்டது அ.தி.மு.க!

Published:Updated:
Minister Ponmudi
பிரீமியம் ஸ்டோரி
Minister Ponmudi

மீண்டும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இரு கட்சிகளும் நேருக்குநேர் முஷ்டி முறுக்குகின்றன. சொந்த மாவட்டத்தில் ‘கெத்து காட்டியே தீரவேண்டும்’ என்ற முனைப்போடு களமாடிவரும் தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடியை விழுப்புரத்தில் சந்தித்தேன்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘நாடாளுமன்றத் தேர்தலில், லட்சங்களில் வாக்குவித்தியாசம் காட்டி ஜெயித்த தி.மு.க-வுக்கு வேலூர்த் தேர்தல் முடிவு, மிகப்பெரிய பின்னடைவு தானே?’’

‘‘பொதுத்தேர்தலுக்கும் இடைத்தேர்த லுக்கும் வித்தியாசம் உண்டு. தமிழகத் தேர்தல் வரலாற்றில் சமீபமாக 40 இடைத்தேர்தல்களில், தொடர்ந்து ஆளுங்கட்சிதான் ஜெயித்து வந்திருக்கிறது. வேலூரைப் பொறுத்தவரையில், பொதுத்தேர்தல்தான் என்றாலும்கூட, தனியே நடத்தப்பட்ட தேர்தல் என்கிறபோது அதுவும் இடைத்தேர்தல் கணக்கிலேதான் வரும். ஆனால், வேலூரில் வரலாற்றையே மாற்றி முதன்முறையாக எதிர்க்கட்சியான தி.மு.க வெற்றிபெற்றிருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சியாக இருப்பவர்களின் அதிகார பலத்தையெல்லாம் தாண்டி, எதிர்க்கட்சியான நாங்கள் வெற்றி பெற்றிருப்பது சரித்திர சாதனைதான்!’’

“நானும் என் மகனும் பரம்பரை கட்சிக்காரர்கள்!”

‘‘வேலூரில், சிறுபான்மையின மக்களின் வாக்குதானே தி.மு.க-வைக் கரைசேர்த்தது. விக்கிரவாண்டியில் தி.மு.க-வுக்கு அப்படிக் குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கிறதா?’’

‘‘சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் தி.மு.க-வுக்கு வாக்களித்தார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதையும் தாண்டி மற்ற சமுதாய மக்களும் எங்களுக்கு வாக்களித்ததால்தான் கடந்த தேர்தலைவிடவும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றோம்.”

‘‘சாதி பார்த்து வாக்களித்துவந்த மக்கள் இப்போது மதம் சார்ந்தும் வாக்களிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர் என்கிறீர்களா?’’

‘‘அப்படி ஒரு சூழல் தமிழகத்தில் வந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. ‘பா.ஜ.க, அ.தி.மு.க இரண்டும் ஒன்றுதான்’ என்றுதான் இங்கே மக்கள் நினைக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை பா.ஜ.க கொண்டு வருவதற்குள்ளாகவே, இங்கே 5-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வைக் கொண்டு வருகிறார்கள். அண்ணா பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருதத்தைப் பாடமாக்குகிறார்கள். தமிழர் நலனுக்கு எதிராக பா.ஜ.க-வினர் கொண்டுவரும் திட்டங்களை எதிர்ப்பதற்கோ தட்டிக்கேட்பதற்கோ தைரியமில்லாமல், வெறும் தலையாட்டிப் பொம்மைகளாக மட்டுமே அ.தி.மு.க ஆட்சியாளர்கள் இருந்துவருகின்றனர். இதை அறிந்த மக்கள், தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தி.மு.க-வுக்கு வாக்களிக்கிறார்கள்.’’

“நானும் என் மகனும் பரம்பரை கட்சிக்காரர்கள்!”

‘‘மதம் சார்ந்து மக்கள் வாக்களிப்பதில்லை என்கிறபோது, ‘தி.மு.க-வில் பெரும்பான்மையாக இந்துக்கள்தான் இருக்கிறார்கள்’ என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?’’

‘‘சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை, சீர்திருத்தத் திருமணம் எனத் தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கைகளை நாங்கள் ஒருநாளும் விட்டுக்கொடுத்ததில்லை. கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது எப்படி இருந்தோமோ அதே நிலைப்பாட்டோடுதான் இன்றளவிலும் செயல்படுகிறோம். எங்களுக்கு எல்லா மதங்களும் ஒன்றுதான். ஆனால், தி.மு.க., தேர்தல் அரசியல் கட்சியாக இருக்கிறது. எனவே கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது, காலத்துக்கேற்ப வியூகங்களையும் மாற்றியாக வேண்டும். தேர்தல் அரசியலில் இருக்கும் எல்லாக் கட்சிகளுக்குமே இது பொருந்தும்!’’

‘‘தி.மு.க-வில் கருணாநிதி தலைமையிலான காலகட்டத்தில், நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வதற்கே தயங்கிய தலைவர்கள், இப்போது அத்திவரதரை தரிசனம் செய்து இணையத்தில் பதிவும் இடுகிறார்களே?’’

‘‘நான் நாத்திகனாக, கோயிலுக்குப் போகாமல் இருக்கலாம். ஆனால், தி.மு.க-வில் இருக்கும் எல்லோருமே நாத்திகர்கள் கிடையாது. லட்சக்கணக்கான தொண்டர்கள், தலைவர்கள் நிறைந்திருக்கும் இந்தக் கட்சியில் அவரவர் நம்பிக்கைகளை மதிக்கிறோம். அதனால்தான் ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற சமரசத்தையே அறிஞர் அண்ணா முன்மொழிந்தார். ஏற்கெனவே சொன்னதுபோல், கொள்கையில் நாங்கள் என்றைக்குமே மாறியதில்லை. செயல்தந்திரத்தில் மட்டும் காலத்துக்கேற்ற மாற்றங்களைச் செய்துவருகிறோம்.’’

‘‘விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனத்தில், தலைமையின் ஒப்புதல் இல்லாமல் நீங்களே தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கூறுகிறார்களே?’’

‘‘தி.மு.க தலைவர் முன்னி லையில் நேர்முகத்தேர்வில் தேர்வானவர்கள்தான் இப்போதும் பொறுப்பில் இருந்து வருகிறார்கள். ஒன்றிரண்டு காலி இடங்களுக்கும், சரிவரச் செயல்படாத பகுதிகளுக்கும் புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக, தற்போதைய இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, சில பெயர்களைப் பரிந்துரை செய்திருக்கிறோம். முடிவை நேர்முகத் தேர்வு நடத்தி அவர் தான் அறிவிப்பார். இதுதான் நடைமுறை. தனிப்பட்ட யாருடைய விருப்பு வெறுப்புக்கும் தகுந்தாற்போன்று கட்சி நிர்வாகத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு தி.மு.க-வில் கிடையாது.’’

“நானும் என் மகனும் பரம்பரை கட்சிக்காரர்கள்!”

‘‘தி.மு.க-வில் இணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு நீங்கள் முயற்சி செய்துவருவதாகச் செய்திகள் வெளிவருகின்றனவே?’’

‘‘அவையெல்லாம் தவறான செய்திகள். எங்கள் பொதுச் செயலாளர் நல்ல ஆரோக்கியத் துடன் இருக்கிறார். வழக்கம் போல், திறம்படச் செயல்பட்டும் வருகிறார். எனவே, இதுகுறித்துக் கட்சிக்குள் யாரும் பிரச்னையும் செய்யவில்லை; கேள்வியும் எழுப்பியதில்லை. கட்சித் தேர்தல்களின்போது ஜனநாயக முறைப்படி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவதுதான் தி.மு.க-வின் ஜனநாயகம்.”

‘‘விக்கிரவாண்டித் தொகுதியில், ‘மு.க.ஸ்டாலின் மகனும் இளைஞரணிச் செயலாளரு’மான உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக்கக் கோரி, ‘உங்கள் மகனும் எம்.பி’யுமான கௌதம சிகாமணி பணம் செலுத்திப் பரிந்துரை செய்வதெல்லாம் என்ன மாதிரியான ஜனநாயகம்? இது வாரிசு அரசியல் அன்றி வேறென்ன?’’

‘‘இதிலென்ன தப்பு..? ஆரம்பக்காலத்தில், என் தொகுதியில் கலைஞர் நிற்க, நான் பணம் கட்டியிருக்கிறேன். அதேபோல், தலைவர் மு.க.ஸ்டாலினுக்காகவும் பணம் கட்டியிருக்கிறோம். இப்போது இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். என் மகன் கௌதம சிகாமணியும் இளைஞர் அணியில் இருப்பதால், உதயநிதியை வேட்பாளராக நிற்கக் கேட்டு அவரது விருப்பத்தைச் செயல்படுத்தியிருந்தார். ஆனால், அவரோ ‘வேண்டாம்’ என்று மறுத்துவிட்டார். இதைத் தவறான விஷயமாகவே நான் பார்க்கவில்லை. தவிரவும், கௌதம சிகாமணி தொடக்கக் காலத்திலிருந்தே தி.மு.க-வில் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவர்தான். 90களிலேயே தான் நடத்திவந்த ‘தளபதி நற்பணி மன்றம்’ சார்பாக உதயநிதியை அழைத்துவந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசளித்து வந்திருக்கிறார். எல்லோருமே பரம்பரையாகக் கட்சிப்பணிகளில் இருந்துவருகிறவர்கள்தான். கட்சிப்பணியில் ஆர்வமும் துடிப்பும் மிக்கவர்கள் மட்டும்தானே வருகிறார்கள். அ.தி.மு.கவிலும் அப்படித்தானே?”

‘‘தமிழர் உரிமை சார்ந்து பேசிவரும் சீமானுக்கு, இளைஞர்களிடையே கிடைக்கும் வரவேற்பை முறியடிக்கும் விதமாகத்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க-வில் பதவி அளிக்கப்பட்டுள்ளதா?’’

‘‘சீமான், இளைஞர்களை ஈர்க்கிறார் என்றெல்லாம் நான் நினைக்கவே இல்லை. அவரையெல்லாம் ஒரு பெரிய அரசியல் சக்தியாகவே நான் கருதவில்லை.’’

“நானும் என் மகனும் பரம்பரை கட்சிக்காரர்கள்!”

‘‘அரசு வேலைவாய்ப்பில் தமிழருக்கே முன்னுரிமை, சுற்றுச்சூழல் காப்போம் என்றெல்லாம் இளைஞர் அணி தீர்மானம் நிறைவேற்றுவது சீமானை மனதில் கொண்டுதானே..?’’

‘‘தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், வேலைவாய்ப்பில் தமிழருக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ப தெல்லாம் இப்போது உதயநிதி ஸ்டாலின் வந்த பிறகுதான் தி.மு.க சொல்கிறதா? காலங்காலமாக நாங்கள் சொல்லிவரும் விஷயத்தைத் தொடர்ந்து இப்போது உதயநிதி சொல்கிறார். சீமானுக்காகச் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது!’’

‘‘சமீபத்தில், ‘தமிழில் பெயர் சூட்டவேண்டும்’ என்று மு.க.ஸ்டாலின் வைத்துள்ள கோரிக்கை, உதயநிதி ஸ்டாலினின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயண்ட்’டுக்கும் பொருந்தும்தானே?’’

‘‘நம் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் தலைவர் அவ்வாறு கூறியிருந்தார். ஆனால், நிறுவனங்களின் பெயர்கள் என்பது அந்தந்தத் தொழிலுக்குத் தகுந்தாற்போன்று பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். உலகளவில் ஆங்கிலம் தொடர்புமொழியாக இருக்கும்போது, ஆங்கிலத்தைக் கூடாது என்று சொல்ல வில்லையே... தாய்மொழியை வளர்ப் போம் என்றுதானே சொல்கிறோம்?’’

‘‘தி.மு.க ஆட்சியின்போது, வெறும் 26,000 கோடி ரூபாய்தான் அந்நிய முதலீடாக ஈர்க்கப்பட்டதென்றும் அ.தி.மு.க ஆட்சியில் 53,000 கோடி ஈர்க்கப்பட்டுள்ள தென்றும் புள்ளிவிவரமாக பதிலடி கொடுத்திருக்கிறாரே முதல்வர்?’’

‘‘அன்றைக்கு 26,000 கோடி ரூபாய் என்பது, இன்றைக்கு ஒரு லட்சம் கோடிக்கு சமம்! இங்கே மாநாடு நடத்தி, மூன்று லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி என்றெல்லாம் கணக்கு சொன்னார்களே... அந்தப் பணமெல்லாம் என்னவாயிற்று? இவ்வளவு புள்ளிவிவரம் கொடுக்கிற நீங்கள், நாங்கள் கேட்கிற வெள்ளை அறிக்கையையும் கொடுத்துவிடலாம் தானே?’’