ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இல்லாத நிலையிலும், விடாது தொடரும் வழக்குகளால் நடுக்கத்திலேயே இருக்கிறது தி.மு.க. இந்தநிலையில்தான், தி.மு.க-வுக்கு எதிரான ஊழல் அஸ்திரத்தை சென்னையில் முழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார் மத்திய பா.ஜ.க-வின் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவரது வருகைக்குப் பிறகு செங்கோட்டையிலிருந்து ஏவுவதற்காகத் தயாராகிவரும் அஸ்திரங்களால் அலறத் தொடங்கியிருக்கிறது தி.மு.க முகாம்.

நவம்பர் 21-ம் தேதி சென்னையில் பேசிய அமித் ஷா, ‘‘தி.மு.க-வுக்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. 2ஜி ஊழல் மட்டுமல்ல... ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பல ஊழல்களை அவர்கள் செய்திருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக உங்கள் ஊழல்களைத் திரும்பிப் பாருங்கள்” என்று இதுவரை இல்லாத அளவுக்கு ஊழல் விவகாரத்தை பூதாகரமாக்கி தி.மு.க-வைக் கடுமையாக தாக்கினார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குக் குறுகிய காலமே இருக்கும் நிலையில், தான் முழங்கியதற்கு நியாயம் கற்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அமித் ஷா என்கிறது கமலாலயம் தரப்பு.

இத்தனைக்கும் மத்திய பா.ஜ.க அரசுமீது தி.மு.க எவ்வளவோ விமர்சனங்களை எழுப்பியபோதும், ரஃபேல் விமான பேர ஊழலைத் தாண்டி வேறெந்த ஊழல் புகாரையும் முன்வைத்ததில்லை. ஆனாலும், விடாமல் தாக்கத் தயாராகிவிட்டது பா.ஜ.க. இது குறித்து டெல்லியின் மூவ்களை நன்கு அறிந்திருக்கும் தமிழக பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி மத்தியில் அதிகாரத்தை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டபோதிலும், இன்றுவரை 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அவர்கள் ஏற்படுத்திய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பீட்டை மக்கள் மறக்கவில்லை.

பி.எஸ்.என்.எல் கேபிள் அமைத்ததில் ஊழல், கலைஞர் டி.வி தொடங்கப்பட்டதில் எழுந்த சர்ச்சை எனப் பல விவகாரங்களும் இன்றுவரை லைவ்வாக இருக்கின்றன. அவற்றைக் கிளறி, தி.மு.க-வை ‘பிராண்ட் ஊழல்’ கட்சியாக அடையாளப்படுத்துவதுதான் அமித் ஷாவின் திட்டம். இதற்காக ஆறு அஸ்திரங்களை அவர் தயார் செய்திருக்கிறார்” என்றவர்கள், அந்த அஸ்திரங்களை ஒவ்வொன்றாக விவரித்தார்கள்.

``2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில், ஜூ.வி உட்பட பல்வேறு தரப்பினரும் ஏகப்பட்ட விஷயங்களை அம்பலப்படுத்தியது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும். ஆனால், ‘அரசுத் தரப்பு போதிய சாட்சியங்களை அளிக்கவில்லை’ என்று ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை 2017, டிசம்பர் 21-ல் நீதிபதி ஓ.பி.சைனி விடுதலை செய்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு கடந்த அக்டோபர் 5-ம் தேதியிலிருந்து தினமும் விசாரிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், ‘2018-ல் திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கக் கூடாது’ என்று

ஆ.ராசா உள்ளிட்டோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். இதை விசாரித்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, ‘ஏற்கெனவே நடந்த முறைகேடுகளுக்கெல்லாம் திருத்தப்பட்ட சட்டம் பொருந்தாது. 2ஜி வழக்கு மேல்முறையீட்டை விசாரிக்க எந்தத் தடையுமில்லை’ என்று நவம்பர் 23-ம் தேதி உத்தரவிட்டார்.

தமிழக வருகையை முடித்துக்கொண்டு அமித் ஷா டெல்லி திரும்பிய மறுநாளே இப்படியொரு தீர்ப்பு வந்திருப்பதைத்தான் இங்கு கவனிக்க வேண்டும். ராசா, கனிமொழி ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்து, தி.மு.க-வின் இமேஜை உடைக்கத்தான் இந்த அஸ்திரத்தைக் கையிலெடுத்திருக்கிறார்

அமித் ஷா. இந்தத் தாக்குதலை எதிர்கொள்ளவே தி.மு.க-வுக்கு நேரம் போதாது என்பதால், ‘தேர்தல் நேரத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு உயிர் கொடுத்து, அவர்களை நிலைகுலைய வைப்பதுதான் பா.ஜ.க-வின் திட்டம். இது மட்டுமல்ல...

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, வேலூர் தொகுதியில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டி யிட்டார். தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருந்த நேரத்தில், அதிகாலை 4 மணிக்கு துரைமுருகனின் வீட்டுக்குள் புகுந்த வருமான வரித் துறையினர் சல்லடை போட்டுத் துளைத்தனர். அங்கு எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து கட்சிக் குள்ளிருந்தே கசிந்த ஒரு தகவலால், துரைமுருகனுக்கு நெருக்கமானவரான காட்பாடியிலுள்ள பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் குடோனைச் சோதனையிட்டது வருமான வரித்துறை.

அங்கிருந்து 10.57 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றிய வருமான வரித்துறை, வாக்காளர்களுக்குப் பணம் விநியோகித்ததற்கான சில ஆவணங்களையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்தின் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட சீரியல் எண்ணோடு அந்தப் பணம் ஒத்துப்போவதாகவும் வருமான வரித்துறை விளக்கம் அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உட்பட மூன்று பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், வேலூர் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. பின்னர், தேர்தல் நடைபெற்று கதிர் ஆனந்த் வெற்றிபெற்றது தனிக்கதை.

இந்த வழக்கில் துரைமுருகனைச் சேர்ப்பதற்கான காய்நகர்த்தல்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. இதை மோப்பம் பிடித்ததால்தான், தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அச்சுறுத்துவதாக அப்போதே மக்களவையில் கதிர் ஆனந்த் உளறிக் கொட்டினார். அவர் இப்படிப் பேசிய இரண்டாவது நாளே, செப்டம்பர் 24-ம் தேதி பூஞ்சோலை சீனிவாசனை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகள், அவரிடம் சில ஆதாரபூர்வமான தகவல்களைத் திரட்டியிருக்கிறார்கள். இந்த அஸ்திரத்தைவைத்து தி.மு.க மீது ஊழல் கறைபடிந்த கட்சி என்கிற இமேஜை உருவாக்கவும் அமித் ஷா தயாராகிவிட்டார்.

தி.மு.க-வின் அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன் மீது ஏற்கெனவே அமலாக்கப் பிரிவில் வழக்குகள் இருக்கின்றன. சிங்கப்பூரி லுள்ள ஒரு நிறுவனத்தில் சட்டவிரோதமாக பணத்தை மாற்றிய குற்றச்சாட்டில் அவரது 89.19 கோடி ரூபாய் சொத்துகளை, கடந்த செப்டம்பர் 12-ம் தேதி அமலாக்கத்துறை முடக்கியது. அவர்மீதும், அவரின் குடும்ப உறுப்பினர்கள்மீதும் ஃபெமா பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இந்த வழக்குகளிலிருந்து விடுபடுவதற்காக, பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகரை தி.நகரிலுள்ள ஒரு ஹோட்டலில் ஜெகத்ரட்சகன் தரப்பினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஒரு தகவல் உண்டு. அதற்கெல்லாம் டெல்லி மசியவில்லை. தேர்தல் நேரத்தில் ஜெகத் மூலமாக பெரும் நிதி தி.மு.க-வுக்குக் கைமாறும் என்று டெல்லி கருதுவதால், அவரை ‘டைட்’ செய்வதற்கான வேலைகள் ஆரம்பித்திருக்கின்றன.

இதே அந்நியச் செலாவணி மோசடிப் புகாரில் கள்ளக்குறிச்சி தி.மு.க எம்.பி-யும், பொன்முடியின் மகனுமான கெளதம சிகாமணியின் 8.5 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்துக்குப் பிறகு, இந்த வழக்குகளின் வேகம் அதிகரிக்கலாம். தி.மு.க-வில் பசையாகவுள்ள கோவை மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா கவுண்டர், மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியன் ஆகியோர்மீது ரெய்டு அஸ்திரம் ஏவப்பட்டதுபோல, மற்றவர்கள்மீதும் அஸ்திரங்களை ஏவுவதற்கு அமித் ஷா திட்டமிட்டிருக்கிறார். இதன் மூலம், பண மூட்டையை அவிழ்க்க நினைக்கும் கட்சிக்காரர்கள்கூட பதுங்கிவிடுவார்கள், கடைசி நேரத்தில் கரன்ஸி இல்லாமல் கழகம் தடுமாறிவிடும் என்பது செங்கோட்டையின் கணக்கு.

தி.மு.க குடும்பப் பிரமுகரும், ‘பரிசு’ பிரமுகர் ஒருவரின் மருமகனும் உற்ற நண்பர்கள். சென்னையிலிருக்கும் அந்த மருமகனுக்குச் சொந்தமான பங்களாவில்தான் முக்கியப் பிரமுகர்களுடன் சந்திப்புகள், சில பரிமாற்றங்கள் நடக்கின்றன. ‘பரிசு’ பிரமுகர் மூலமாகத் தேர்தல் நெருக்கத்தில் பெரும் நிதியைக் கழகத்துக்கு மடைமாற்றவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்குப் பிரதி உபகாரமாக, கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு மருமகன் சீட் கேட்டிருக்கிறார். ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், தொழில் சம்பந்தமாக சில கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டும்’ என்பதும் டீல். இதே ‘பரிசு’ பிரமுகர்தான் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தரப்புக்கும் நிதியளிக்கிறார். இதனால், இரட்டைக் கடுப்பிலிருக்கும் டெல்லி தரப்பு ‘பரிசு’ பிரமுகரின் மருமகனைச் சுற்றிவளைக்கவும் திட்டமிட்டிருக்கிறது. இதுவும் தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க-வுக்குப் பொருளாதாரரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும்.

தி.மு.க குடும்பப் பிரமுகருக்குச் சொந்தமான, சென்னையிலுள்ள ஒரு நிறுவனத்தையும் வருமான வரித்துறை நீண்ட மாதங்களாகவே கண்காணித்துவருகிறது. சமீபத்தில் நடைபெற்ற சில பரிமாற்றங்களை மோப்பம் பிடித்திருக்கும் வருமான வரித்துறை, அதற்கான ஆதாரங்களைத் திரட்டியிருப்பதாகக் கூறுகிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் திடீர் ரெய்டு நடத்தி, தி.மு.க குடும்பத்தின் ஆணிவேரையே அசைக்கவும் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவைதான் அந்த ஆறு அஸ்திரங்கள். இவை இல்லாமலும் மேலும் சில திட்டங்கள் பா.ஜ.க வசம் இருக்கின்றன” என்றவர்கள் அவற்றையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்...

“டெல்லி தரப்பு, ‘கடந்த பத்து ஆண்டுகளில், தி.மு.க பிரமுகர்களின் சாராய ஆலைகளி லிருந்து டாஸ்மாக்குக்கு எவ்வளவு மது பாட்டில்கள் சப்ளை செய்யப்பட்டிருக் கின்றன, அவற்றின் மதிப்பு எவ்வளவு, இதில் தி.மு.க பிரமுகர்கள் அடைந்த லாபம் எவ்வளவு?’ போன்ற விவரங்களைச் சேகரித்துவருகிறது. ‘சாராய ஆலை நடத்தும் தி.மு.க., மது ஒழிப்பு பற்றிப் பேசலாமா?’ என்கிற பிரசாரத்தை முன்னெடுப்பதுதான் பா.ஜ.க-வின் திட்டம். இன்னொரு பக்கம், அழகிரி பா.ஜ.க-வுக்கு வராவிட்டாலும்கூட அவர் கட்சி தொடங்கினாலும், தொடங்காவிட்டாலும் அவர் மூலமாக சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டு, தி.மு.க-வை பலவீனப்படுத்தும் திட்டங்களும் அமித் ஷா வசம் இருக்கின்றன. டிசம்பர் மாதம் அமித் ஷா மீண்டும் தமிழகம் வரும்போது, மேற்கண்ட திட்டங்கள் செயல்வடிவம் பெறும்” என்றார்கள் விரிவாக.

மடியில் கனம் இருப்பவர்கள் அலறித்தான் ஆக வேண்டும். தி.மு.க-வுக்கு மட்டுமல்ல... இது எல்லா கட்சிகளுக்குமே பொருந்தும்!