Published:Updated:

`திமுக அரசு 'ஸ்லோ பாய்சன்' கொடுத்துக் கொல்கிறது' - மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத் தலைவர் வேதனை

தி.மு.க தலைவர் ஸ்டாலின்

`அதிமுக அரசு எங்களை முழுமையாகக் கொன்றுவிட்டது. திமுக அரசு கொஞ்சம் கொஞ்சமாக 'ஸ்லோ பாய்சன்' கொடுத்துக் கொல்கிறது' என மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

`திமுக அரசு 'ஸ்லோ பாய்சன்' கொடுத்துக் கொல்கிறது' - மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத் தலைவர் வேதனை

`அதிமுக அரசு எங்களை முழுமையாகக் கொன்றுவிட்டது. திமுக அரசு கொஞ்சம் கொஞ்சமாக 'ஸ்லோ பாய்சன்' கொடுத்துக் கொல்கிறது' என மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

கடந்த 2011-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது நீதிபதிகள், "இந்தப் பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொள்ளவேண்டியிருக்கிறது. எனவே, இது தொடர்பாக தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும்" என்றனர்.

அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் மேற்கொண்டு அரசு என்ன நடவடிக்கை எடுக்கவிருக்கிறது என்பது தொடர்பாக விளக்கம் பெற்றுத் தெரிவிப்பதாகவும், தற்போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மக்கள் நலப் பணியாளர்களை நிரந்தரமாகப் பணியமர்த்துவது தொடர்பாக தமிழக அரசின் கருத்து, நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியனிடம் பேசினோம். "நாங்கள் 1990 காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் நியமிக்கப்பட்டோம். ஓர் ஆண்டு வேலை பார்த்தோம். 1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு எங்களைப் பணியிலிருந்து நீக்கிவிட்டார். பிறகு 96-ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு பணி வழங்கப்பட்டது.

முதன்முறை போடும்போது, தற்காலிக பணி என்று போடப்பட்டது. அடுத்த முறை ஒப்பந்தப் பணியாளர்கள் என்று போட்டுவிட்டனர். 2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் எங்களை நீக்கிவிட்டார். 3-வது முறையாக 2006-ல் மீண்டும் கருணாநிதி வேலை வழங்கினார். அப்போது `இரண்டு ஆண்டு ஒப்பந்தப் பணி’ என்று போட்டுவிட்டார். 2011-ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நீக்கிவிட்டார். அதன் பிறகு ஒவ்வொரு நீதிமன்றமாகச் சென்று வழக்கு நடத்திவருகிறோம்.

`திமுக அரசு 'ஸ்லோ பாய்சன்' கொடுத்துக் கொல்கிறது' - மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத் தலைவர் வேதனை

2011-ல் 'மக்கள் நலப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது தவறு. இனியாவது நிரந்தரமாகப் பணி கொடுங்கள்' என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து அ.தி.மு.க அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. பிறகு தொடர்ந்து இதுநாள் வரை போராடிவருகிறோம். திமுக ஆட்சியில் எங்களுக்குப் பணி வழங்கப்பட்டது என்பதற்காக, அதிமுக அரசு எங்களை மூன்று முறை நீக்கிவிட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின், 'நான் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து போடுகிறேன். நான் ஆட்சிக்கு வந்ததும் நிரந்தரம் செய்கிறேன். உச்ச நீதிமன்ற வழக்கைத் திரும்பப் பெறுகிறேன். ஆட்சிக்கு வந்த பிறகு ஒருவர்கூட இறக்க மாட்டார்கள்' என்றார். இதனால் நிரந்தரப் பணி கிடைக்கும் என நினைத்தோம். வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தோம். கடைசியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் செயல்படுவோம் என்று தற்போது முதல்வர் கூறுகிறார்.

ஜெயலலிதா | அதிமுக
ஜெயலலிதா | அதிமுக

ஓர் அரசு மூன்று முறை நீக்குகிறது. ஓர் அரசாங்கம் நான்காவது முறையும் ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கிறது. உலகில் எங்கேயாவது இப்படி நடக்குமா... யாராவது ஒருவர் அரவணைக்க வேண்டும். இரண்டு அரசும் சேர்த்து எங்களது வாழ்க்கையையே அழித்துவிட்டார்கள். பலி வாங்கி விட்டார்கள். அ.தி.மு.க அரசு ஒரே நாளில் கொன்றார்கள். தி.மு.க அரசு கொஞ்சம் கொஞ்சமாக 'ஸ்லோ பாய்சன்' கொடுத்துக் கொல்கிறது. விரைவில் அனைத்து சங்கங்களையும் இணைத்து கூட்டம் கூட்டப்படும். அப்போது வழக்கைத் திரும்பப் பெற்று, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும்" என்றார்.