Published:Updated:

`மழைக்காலத்தில் வரும் ஞானம், வெயிலடித்தால் போய்விடுகிறது!’ - கொதிக்கும் துரைமுருகன்

துரைமுருகன்
துரைமுருகன்

``அமைச்சர்கள் பொய்யே பேசுகிறார்கள். இதற்கு முன் எந்தப் புயல் பாதிப்பையும் பார்வையிடாத முதலமைச்சர், தேர்தல் வருகிறது என்பதால் கடலூர் போயிருக்கிறார்’’ என்று விமர்சித்திருக்கிறார் துரைமுருகன்.

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசுகையில், ``நிவர் புயல் கடலூர் மாவட்டத்திலும் அதைத் தொடர்ந்து மரக்காணம், ஆரணி மற்றும் வேலூரின் பெரும்பகுதிகளிலும் மரங்களைச் சாய்த்திருக்கிறது. கரும்புகளையும் படுக்கவைத்திருக்கிறது. வாழைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. பயிர் நஷ்டத்தை மாநில அரசாங்கம் விரைவாகக் கணக்கிட்டு மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டுக்கு கொட்டிக் கொடுப்பதைப்போல் அமித் ஷா பேசிவிட்டுப்போயிருக்கிறார்.

புயல் பாதிப்பை பார்வையிட்ட துரைமுருகன்
புயல் பாதிப்பை பார்வையிட்ட துரைமுருகன்

இந்தப் புயல் ஏற்படுத்தியிருக்கும் சேதத்துக்கு எவ்வளவு நிதி கொடுக்கப்போகிறார்கள் என்று பார்க்கலாம். இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையை அடிப்படையாகக்கொண்டு வேலூர் திடீர் நகரில் விரைவாக ஒரு பாலம் கட்டித்தர வேண்டும் என்று கலெக்டரிடம் தெரிவித்திருக்கிறேன். மோர்தானா அணையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வேலூர்: `எந்த ஊரில் வாரிசு அரசியல் இல்லை?’  - அமித் ஷாவுக்கு துரைமுருகன் பதிலடி

இந்த அணையின் வலதுபுற மற்றும் இடதுபுறக் கால்வாய்கள் தூர்வாரப்படாத காரணத்தால், அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் சரியாகச் செல்லவில்லை. கால்வாய்களைத் தூர்வாராவிட்டால், தண்ணீர் போவது கஷ்டம் என்று நாங்கள் ஆறு மாதங்களுக்கு முன்னரே சொன்னோம். நாங்கள் சொல்வதைக் கேட்காததால், இன்றைக்கு அந்தப் பகுதி தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

துரைமுருகன்
துரைமுருகன்

இதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறோம். அகரம் ஆறு பெரிய ஆறு. அதை ஆக்கிரமித்திருக்கிறார்கள். முழு ஆக்கிரமிப்பையும் எடுக்க வேண்டும் என்று பொது கணக்குத்துறை அன்றைக்கே கலெக்டருக்கு உத்தரவிட்டது. இதுவரை, கலெக்டர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதன் விளைவு என்ன தெரியுமா? இன்றைக்கு பெரும் பகுதியான வெள்ளம் அந்த ஆற்றிலிருந்துதான் பாலாற்றுக்கு வருகிறது.

இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, மழைக்காலத்தில் ஞானம் வருகிறது. வெயில் வந்தவுடன் ஞானம் பறந்துபோய்விடுகிறது. வேலூரிலேயே இந்த வெள்ளம். பொய் பேசுவதே ஆட்சியின் கதை. அமைச்சர்கள் பொய்யையே பேசுகிறார்கள். இதற்கு முன் எந்தப் புயல் பாதிப்பையும் பார்வையிடாத முதலமைச்சர், தேர்தல் வருகிறது என்பதால் கடலூர் போயிருக்கிறார்’’ என்றார் காட்டமாக.

அடுத்த கட்டுரைக்கு