Published:Updated:

அதிமுக போராட்டம்: ``திமுக மீண்டும் ஜனநாயக படுகொலை செய்திருக்கிறது"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக போராட்டம்

இந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கமும் தரப்பட்டது.

அதிமுக போராட்டம்: ``திமுக மீண்டும் ஜனநாயக படுகொலை செய்திருக்கிறது"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கமும் தரப்பட்டது.

Published:Updated:
அதிமுக போராட்டம்

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்காததைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், "தமிழக சட்டசபையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கும் ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரதப் போராட்டம், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும்' என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிமுக போராட்டம்
அதிமுக போராட்டம்

ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கமும் தரப்பட்டது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் எடப்பாடி பழனிசாமி, திட்டமிட்டபடி வள்ளுவர் கோட்டத்துக்கு கருப்பு சட்டை அணிந்து வந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை தரப்பு போராட்டத்தை கைவிட கோரியும், அதிமுக-வினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

அதிமுக போராட்டம்
அதிமுக போராட்டம்

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் போலீஸார் கைது செய்து ராஜரத்தினம் மைதானத்துக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஜனநாயக ரீதியாக முறைப்படி போராட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்ட போதும் காவல்துறை மறுத்துள்ளது. ஆளும்கட்சிக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். உண்ணாவிரத போராட்டத்திற்கு திமுக அரசு அனுமதி மறுத்ததன் மூலம் மீண்டும் மீண்டும் ஜனநாயக படுகொலை செய்துள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார்.