Published:Updated:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... பூத் கமிட்டி பட்டியல் கேட்கும் அறிவாலயம்!

அண்ணா அறிவாலயம்
News
அண்ணா அறிவாலயம்

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றியைப் போலவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியைக் கைப்பற்ற தி.மு.க தீவிரம் காட்டி வருகிறது.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த போதிலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. தேர்தலை விரைவாக நடத்தி முடிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பிப்ரவரி அல்லது மார்ச் மாதத் தொடக்கத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன. இந்தத் தேர்தலில் வெற்றியைக் கைப்பற்றும் நோக்கத்தில் ஆளுங்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அத்துடன், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வும் வேட்பாளர் தேர்வுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தல் களத்தை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். விருப்ப மனு வாங்குவது, பூத் கமிட்டி அமைப்பது போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கின்றன.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தவுள்ள மாநில தேர்தல் ஆணையம்
உள்ளாட்சித் தேர்தல் நடத்தவுள்ள மாநில தேர்தல் ஆணையம்

இந்த நிலையில், தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ``டிசம்பர் 18-ம் தேதி அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி பூத் கமிட்டி அமைக்க வலியுறுத்தப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அமைக்கப்பட்ட 10 பேர் கொண்ட பூத் கமிட்டி உறுப்பினர்களின் விவரங்களை ஜனவரி 3-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கமிட்டியில் இரு இளைஞர்கள், இரு மகளிர், தகவல் தொழில்நுட்ப அணிக்குரிய இருவர் ஆகியோர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

10 பேர் கொண்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் விவரங்களை் 3-ம் தேதிக்குள் மாவட்டக் கழகத்தினர் அனுப்ப வேண்டும்.
தி.மு.க தலைமை

ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பூத் கமிட்டி உறுப்பினராக இருக்க முடியும் என்பதோடு, பூத் கமிட்டி உறுப்பினர் அந்த வாக்குச் சாவடி வாக்காளர் பட்டியலில் பெயர் கொண்டவராக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பூத் கமிட்டி விவரங்களைச் சேகரித்து அனுப்பும் பணியில் மாவட்டச் செயலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.