Published:Updated:

EWS: ``குறைசொல்வதை விட்டுவிட்டு எங்கள் பின்னால் நில்லுங்கள்" - ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

ஆர்.எஸ்.பாரதி

``குறைசொல்வதை விட்டுவிட்டு எங்கள் பின்னால் அதிமுக நின்றால், தமிழ்நாட்டு மக்கள் ஓரளவுக்கு கடந்தகாலத்தில் அவர்கள் செய்த பாவங்களயெல்லாம் மன்னிப்பார்கள்." - ஆர்.எஸ்.பாரதி

EWS: ``குறைசொல்வதை விட்டுவிட்டு எங்கள் பின்னால் நில்லுங்கள்" - ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

``குறைசொல்வதை விட்டுவிட்டு எங்கள் பின்னால் அதிமுக நின்றால், தமிழ்நாட்டு மக்கள் ஓரளவுக்கு கடந்தகாலத்தில் அவர்கள் செய்த பாவங்களயெல்லாம் மன்னிப்பார்கள்." - ஆர்.எஸ்.பாரதி

Published:Updated:
ஆர்.எஸ்.பாரதி

`பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு வழங்கிய 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும்’ என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் வரவேற்றாலும், தி.மு.க., வி.சி.க போன்ற கட்சிகள் எதிர்த்தன. மேலும், இந்த விவகாரத்தில் சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான அன்றே முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதோடு, இது குறித்து ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இட ஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மேலும், ``வழக்கு நடந்துகொண்டிருந்தபோது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், உச்ச நீதிமன்றத்தில் தான்தோன்றித்தனமாக வாதிட்டு, மூக்கறுபட்டு, தீர்ப்பு வந்த பிறகு, தற்போது கட்சிகளை அழைப்பது ஏன்?" என்று ஜெயக்குமார் கேள்வியெழுப்பியிருந்தார். இந்த நிலையில், ஜெயக்குமாரின் இத்தகைய பேச்சுக்கு, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்திருக்கிறார்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ``உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித், தி.மு.க-வின் வில்சனின் வாதத்தை ஏற்று அதற்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு எழுதியிருக்கிறார். ஆகவே, ஒரு நெருக்கடியான சூழ்நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஜெயக்குமார் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். தி.மு.க-வைப் பொறுத்தவரையில் அன்றைக்கே இதை எதிர்த்து குரல் கொடுத்ததின் விளைவு... இன்றைக்குத் தீர்ப்பு வந்திருக்கிறது. தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் இருக்கிற காரணத்தால் தீர்ப்பு வந்தவுடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாளைக்கு கூட்டவிருக்கிறார். அங்கே உங்களின் கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.பாரதி - ஜெயக்குமார்
ஆர்.எஸ்.பாரதி - ஜெயக்குமார்

இதைக் குறை சொல்வதை விட்டுவிட்டு எங்கள் பின்னால் அ.தி.மு.க நின்றால், தமிழ்நாட்டு மக்கள் ஓரளவுக்கு கடந்தகாலத்தில் அவர்கள் செய்த பாவங்களையெல்லாம் மன்னிப்பார்கள். நாளைய தினம் ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். அந்தக் கூட்டத்தின் முடிவையடுத்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்டு அரசாங்கம் முடிவெடுக்கும்" என்று கூறினார்.