Published:Updated:

எடப்பாடி ஓர் அரசியல் விபரீதம்... சீமான் என்டர்டெய்னர்... அண்ணாமலை பொய் மூட்டை...

மனுஷ்ய புத்திரன்
பிரீமியம் ஸ்டோரி
மனுஷ்ய புத்திரன்

- போட்டுத்தாக்கும் மனுஷ்ய புத்திரன்

எடப்பாடி ஓர் அரசியல் விபரீதம்... சீமான் என்டர்டெய்னர்... அண்ணாமலை பொய் மூட்டை...

- போட்டுத்தாக்கும் மனுஷ்ய புத்திரன்

Published:Updated:
மனுஷ்ய புத்திரன்
பிரீமியம் ஸ்டோரி
மனுஷ்ய புத்திரன்

‘மின் கட்டண உயர்வு, கருணாநிதியின் பேனாவுக்கு கடலுக்கு நடுவே சிலை, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தைப் பயன் படுத்தாதது’ என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறது தி.மு.க அரசு. இந்தப் பின்னணியில் தி.மு.க ஐடி விங் ஆலோசகரும், செய்தித் தொடர்பு இணைச் செயலாளருமான கவிஞர் மனுஷ்ய புத்திரனிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்…

“செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்காதது சர்ச்சையாகியிருக்கிறதே?”

“செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது முழுக்க முழுக்கத் தமிழ்நாடு அரசு. அதனால் மாநில முதல்வரின் புகைப்படம் இடம்பெற் றிருக்கிறது. பிரதமருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரை அழைத்து நிகழ்ச்சியைத் தொடங்கியிருக்கிறோம். இதையும் தாண்டி படம் இடம்பெறவில்லை என்பதெல்லாம் தேவையில்லாத சர்ச்சை.”

எடப்பாடி ஓர் அரசியல் விபரீதம்... சீமான் என்டர்டெய்னர்... அண்ணாமலை பொய் மூட்டை...

“பிறகு ஏன் அடுத்து வந்த விளம்பரங்களில் மோடியின் புகைப்படம் இடம்பெற்றது?”

“மோடியின் படம் இடம்பெற வேண்டுமென பா.ஜ.க-வினர் ரொம்ப ஆசைப்படுகிறார்கள். தமிழ்நாடு வந்து பார்க்கும்போது தன்னுடைய படத்தைக் காணவில்லையே என மோடிக்கும் மன வேதனையைக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக விளம்பரத்துறையில் இருக்கும் ஏதாவது ஓர் அதிகாரி அவர் படத்தைச் சேர்த் திருக்கலாம். படத்தைப் போடாததற்கு எப்படி எந்த உள்நோக்கமும் இல்லையோ, அப்படித்தான் பயன்படுத்தியதிலும் எந்த உள்நோக்கமும் இல்லை.”

“புகைப்பட விவகாரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரைப் பிடித்து விசாரித்த காவல்துறை, பிரச்னையைத் தொடங்கிவைத்த பா.ஜ.க-வினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?”

“புகைப்படம் ஒட்டியவர்களையும் அழைத்து விசாரித்திருக்கிறார்கள். சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றவேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கிறது. எனவே, தி.மு.க சொல்லித்தான் காவல்துறை செயல்படுகிறது என்பது அபத்த மான வாதம். காவல்துறை நடுநிலையோடுதான் நடந்துகொண்டிருக்கிறது. நானே நாளை, சட்டம் - ஒழுங்கைச் சிதைக்கும் விதமாகச் செயல்பட்டால் என்னையும் கைது செய்வார்கள். அப்படி இல்லையென்றால் முதல்வர் நிச்சயம் தட்டிக் கேட்பார்.”

“ஆனால், ‘பா.ஜ.க-வைப் பார்த்து தி.மு.க பயப்படுகிறது’ என அக்கட்சியினர் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினரும் சொல்கிறார்களே?”

“பா.ஜ.க-வின் கொள்கைகளுக்கு எதிராக, தி.மு.க அளவுக்குத் தொடர்ச்சியாகப் போராடும் ஏதாவது ஒரு கட்சியை இந்தியாவில் காட்டுங்கள் பார்க்கலாம். ‘பா.ஜ.க-வுடன், ஒன்றிய அரசுடன் சமரசமாகச் சென்றோம்; எங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுத்தோம்; கருத்துகளை மாற்றிக் கொண்டோம்’ என ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தைச் சுட்டிக்காட்டுங்கள். கொள்கைரீதியில் எதிராக இருந்தாலும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே சில விவகாரங்களில் இணக்கமாகச் செல்லவேண்டியது அவசியமாகிறது. அதைப் பார்த்துப் பயப்படுகிறோம் என்று சொல்பவர் களுக்கே தெரியும், அது ஒரு பொய் என்று.”

எடப்பாடி ஓர் அரசியல் விபரீதம்... சீமான் என்டர்டெய்னர்... அண்ணாமலை பொய் மூட்டை...

“கருணாநிதியின் பேனாவுக்குச் சிலை அமைப்பதும் சர்ச்சையாகியிருக்கிறதே?”

“கலைஞரின் பேனா என்பது பாலின சமத்துவம், சாதிய ஒடுக்குமுறை, சமூகநீதி, சமூக நலன், மாநில சுயாட்சி எனப் பல நூறு சமூக மாற்றத்துக்கான அடையாளம். இதை எதிர்காலச் சந்ததியினர் அறிந்துகொள்ளக் கூடாது, கலைஞரின் ஆளுமை தமிழ்நாட்டில் நிலைபெற்று விடக்கூடாது எனப் பலரும் வேலை பார்க்கிறார்கள். அதையொட்டித்தான் பேனா சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டின் வரலாறு என்பது கலைஞரின் வரலாறு. நவீன தமிழ்நாட்டின் தந்தை கலைஞருக்கு வரலாற்றில் இடமில்லையென்றால் வேறு யாருக்கும் இடமில்லை.”

“ ‘சிலையை ஏன் கடலுக்கு நடுவில், அதுவும் 137 அடியில் வைக்க வேண்டும்’ என்றுதானே கேட்கிறார்கள்?”

“ஒரு விஷயத்தை எப்படி, எங்கு செய்ய வேண்டும் என்பது அரசு எடுக்கவேண்டிய முடிவு. இப்போது சிலையைக் கரையில் வைக்க வேண்டியதுதானே என்பார்கள், அடுத்து அந்தச் சிலை எப்படி இருக்க வேண்டும், யார் அதை வடிக்க வேண்டும், யாருக்கு டெண்டர் கொடுக்க வேண்டும் என எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பார்கள். கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர் தலைவர் கலைஞர். எனவே, அவருக்கான இடம் எது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி முடிவுசெய்யும். உயரத்தைப் பொறுத்த வரை எத்தனை அடியில் வைத்தாலும் அதையும் கேள்வி கேட்பார்கள்.”

“சிலைவைக்கும் முடிவைக் கைவிடும்வரை விட மாட்டேன் என சீமான் சொல்லியிருக்கிறாரே?”

“இதுவரை தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக சீமான் நடத்திய போராட்டம் என்ன... அதனால் விளைந்த நன்மைகள் என்னென்ன... அண்ணா மலை மாதிரி சீமான் ஓர் அரசியல் என்டர் டெய்னர். ஹீரோக்களும் வில்லன்களும் இருக்கும் அரசியல் களத்தில் சீமான், அண்ணாமலை மாதிரி காமெடியன்களும் வேண்டும்தானே... காமெடியன்களை ரசிக்க வேண்டுமே தவிர சீரியஸா எடுத்துக்கொண்டு பதில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.”

எடப்பாடி ஓர் அரசியல் விபரீதம்... சீமான் என்டர்டெய்னர்... அண்ணாமலை பொய் மூட்டை...

“அண்ணாமலையைப் பார்த்து ‘ஆம்பளையாக இருந்தால் நீதிமன்றத்தில் புகார் கொடு’ என அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியிருப்பது சரியா?”

“ ‘இவ்வளவு பேசுகிறீர்களே... தைரியம் இருந்தா நீதிமன்றம் போங்கள்...’ என்ற அர்த்தத் தில்தான் அந்த வார்த்தையை அமைச்சர் பயன் படுத்தியிருக்கிறார். நீங்கள் அண்ணாமலையிடம் சென்று, ‘செந்தில் பாலாஜி இப்படிப் பேசியிருக் கிறாரே... நீங்கள் நீதிமன்றம் செல்வீர்களா?’ என்றுதான் கேட்க வேண்டும். அண்ணாமலை இதுவரை எங்கள்மீது 25 குற்றச்சாட்டுகளுக்கு மேல் சுமத்தியிருக்கிறார். அவை எல்லாவற்றுக்கும் புள்ளிவிவரத்தோடு பதிலடி கொடுத்திருக்கிறோம். வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக்கொண்டிருக் கும் அண்ணாமலை ஒரு பொய் மூட்டை. அதை நாங்கள் மக்களிடம் அம்பலப்படுத்தவில்லை யென்றால் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.”

“ `அ.தி.மு.க-வைப் பார்த்து தி.மு.க நடுங்குகிறது’ என எடப்பாடி சொல்லியிருக்கிறாரே?”

“எடப்பாடி ஓர் அரசியல் விபரீதம். தோற்றுக் கொண்டிருப்பவர்கள், மீளவே முடியாமல் மூழ்கிக்கொண்டிருப்பவர்கள்தான் தைரியமாக இருப்பதாகவும் மற்றவர்கள் தன்னைப் பார்த்து பயப்படுவதாகவும் சொல்லிக்கொண்டிருப் பார்கள். எடப்பாடிக்கு தைரியம் சொல்ல யாருமே இல்லாததால் தனக்குத் தானே தைரியம் சொல்லிக்கொண்டிருக்கிறார். எடப்பாடியைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.”