Published:Updated:

தி.மு.க மேயருக்கு எதிராக, தி.மு.க கவுன்சிலர்கள்! - மதுரை மாநகராட்சி மல்லுக்கட்டு...

மதுரை மாநகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
மதுரை மாநகராட்சி

மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் 1,950 பேர் பணிபுரிவதாகக் கணக்கு காட்டுகிறார்கள். ஆனால், வேலை செய்வதோ 750 பேர்தான்.

தி.மு.க மேயருக்கு எதிராக, தி.மு.க கவுன்சிலர்கள்! - மதுரை மாநகராட்சி மல்லுக்கட்டு...

மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் 1,950 பேர் பணிபுரிவதாகக் கணக்கு காட்டுகிறார்கள். ஆனால், வேலை செய்வதோ 750 பேர்தான்.

Published:Updated:
மதுரை மாநகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
மதுரை மாநகராட்சி

தி.மு.க மேயருக்கு எதிராக, தி.மு.க கவுன்சிலர்களே ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதால் மதுரை அரசியலில் அனல் பறக்கிறது!

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரான இந்திராணி பொன் வசந்த், மதுரை மேயரான திலிருந்தே மதுரை மாவட்ட தி.மு.க-வுக்குள் கடும் அதிருப்தி. கடந்த 23-ம் தேதியன்று நடந்த மாமன்றக் கூட்டத்தில், ‘வார்டு பிரச்னைகள் தீரவில்லை, மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைக்கு வரவில்லை, தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதியம் வழங்குவதில் ஊழல்’ என்று தி.மு.க கவுன்சிலர்களும் மண்டலத் தலைவர்களுமே அடுக் கடுக்காகப் புகார்களைத் தட்டிவிட... பரபரப்பு பற்றிக்கொண்டது.

இந்திராணி பொன் வசந்த்
இந்திராணி பொன் வசந்த்

குறிப்பாக, 58-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ஜெயராம் வைத்த குற்றச்சாட்டுகள் ‘தெறி’ ரகம். இது குறித்து நம்மிடம் பேசிய ஜெயராம், “மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் 1,950 பேர் பணிபுரிவதாகக் கணக்கு காட்டுகிறார்கள். ஆனால், வேலை செய்வதோ 750 பேர்தான். மீதி ஊதியம் எங்கே செல்கிறது... ஒவ்வொரு தொழிலாளருக்கும் 21,000 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 8,000 ரூபாய்தான் வழங்கப் படுகிறது. மீதிப் பணமெல்லாம் எங்கே போகிறது?

எம்.ஜி.ஆரால் 1980-ல் கட்டப்பட்ட மாநகராட்சித் திருமண மண்டபம், 20 வருடங்களுக்கு முன்பு கரிமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வாடகைக்கு விடப்பட்டது. ஆனால், 45 லட்ச ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளது அந்தக் காவல் நிலையம். இதை வசூலிக்க மாநகராட்சியும் நடவ டிக்கை எடுப்பதில்லை. மாநகராட்சியின் மற்றொரு திருமண மண்டபத்திலும் அம்மா உணவகம் அமைத்துவிட்டார்கள். `இந்த மண்டபத்தை என் சொந்தச் செலவில் புதுப்பித்துத் தருகிறேன்... இதையாவது மக்கள் பயன்பாட்டுக்குக்கொண்டு வாருங்கள்’ என்று கோரினேன்... எதற்குமே மேயர் பதில் தெரி விக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகம் மக்கள் பணி ஆற்றாமல், ஊழல் புகார்களுக்கு உள்ளாவது கவலையளிக்கிறது’’ என்றார்.

ஜெயராம்
ஜெயராம்
நாகராஜன்
நாகராஜன்

இதுகுறித்து விளக்கம் கேட்கத் தொடர்புகொண்டால், மேயரின் மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. துணை மேயர் நாகராஜனிடம் (சி.பி.எம்) பேசினோம். ‘‘சமுதாயக்கூடத்தில் போலீஸ் ஸ்டேஷன் இயங்குவதும், அவர்கள் வாடகை பாக்கி வைத்திருப்பதும் உண்மைதான். வாடகையை வசூலிக்கவும், மண்டபத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் ஆலோசித்துவருகிறோம். தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக் கணக்கு வழியாக ஊதியம் வழங்க உத்தரவிட்டிருக்கிறோம். கூடுதல் தொழிலாளர்களை கணக்கு காட்டியிருப்பதாகச் சொல்லப்படுவது குறித்தும் ஆய்வு செய்வோம்’’ என்றார்.