Published:Updated:

சேலம்: காங்கிரஸ் துணை மேயரைத் தூக்க, கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்கிய திமுக மேயர் - நடந்தது என்ன?

சேலம் மாநகராட்சி

காங்கிரஸ் துணை மேயரைtஹ் தூக்க, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கையிலெடுத்த சேலம் தி.மு.க மேயர். சேலம் மாநகராட்சியில் நடந்தது என்ன?

சேலம்: காங்கிரஸ் துணை மேயரைத் தூக்க, கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்கிய திமுக மேயர் - நடந்தது என்ன?

காங்கிரஸ் துணை மேயரைtஹ் தூக்க, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கையிலெடுத்த சேலம் தி.மு.க மேயர். சேலம் மாநகராட்சியில் நடந்தது என்ன?

Published:Updated:
சேலம் மாநகராட்சி

தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாகத் தற்போது தேர்வுசெய்யப்பட்டு, முதல்வர் கரங்களில் விருது பெற்ற சேலம் மாநகராட்சியில், அதிகாரிகளுக்கிடையேயும், அரசியல்வாதிகளுக்கு மத்தியிலும் பெரும் குழப்பங்கள் நிலவிவருகின்றன.

தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுக்கு சில இடங்களில் மேயர் பதவிகளையும், பெரும்பாலான இடங்களில் துணை மேயர் அந்தஸ்தையும் கொடுத்திருக்கிறது. அந்த வகையில், சேலம் மாநகராட்சியில் துணை மேயர் பதவியைத் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு வழங்கியிருக்கிறது தி.மு.க. அதன் மூலம் சேலம் மாநகராட்சியின் துணை மேயராக இருந்துவருபவர் சாரதாதேவி. தி.மு.க-வைச் சேர்ந்த மேயர் ராமச்சந்திரனுக்கும், துணை மேயர் சாரதாதேவிக்கும் முட்டலும் மோதலுமாக இருந்துவருவதாக மாநகராட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபட்டுவருகிறது.

துணை மேயர் சாரதாதேவி
துணை மேயர் சாரதாதேவி

மேலும், மேயர் கலந்துகொள்ளும் மாநகராட்சி நிகழ்ச்சிகளுக்கு துணை மேயருக்கு அழைப்பு விடுப்பதில்லை என்றும், துணை மேயருக்கு வழங்கப்படக்கூடிய அதிகாரங்கள் அனைத்தையும் தட்டிப்பறித்துவிட்டதாகவும், இதனால் துணை மேயரை டம்மியாக மேயர் வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் பல தினம் தினம் வெடித்துவருகின்றன.

துணை மேயர் சாரதாதேவியும், தான் படித்தவர் என்றும் தனக்கு எல்லாம் தெரியும் என்று வலம்வருவதால், மாநகராட்சிக் கூட்டங்களில் இவர்களது பிரச்னைகளைச் சரிசெய்வதற்கே அதிகாரிகளுக்கு பெரும்பாடாக இருக்கிறது.

கடந்த நான்கு மாதத்ங்களுக்கு முன்பு துணை மேயர் சாரதாதேவி மாமன்றக் கூட்டங்களில் தொடர்ந்து தான் கீழே அமர வைக்கப்பட்டிருப்பதாகவும், மாநகராட்சி நிர்வாகம் தன்னை அவமதிப்பதாகவும் குற்றம்சாட்டினார். அதனடிப்படையில் துணை மேயர், மேயருக்கு அருகில் நாற்காலியில் அமர தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமரவைக்கப்பட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் கோபத்தின் எல்லைக்கு மேயர் ராமச்சந்திரன் சென்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர்களிடம் எந்தவித அறிவிப்பும் இன்றி கையெழுத்து வாங்கியிருக்கிறாராம் மேயர் ராமச்சந்திரன். அதன் மூலம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து துணை மேயரை பதவிநீக்கம் செய்ய திட்டம் வகுத்ததாகவும், இந்தத் தகவல் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான கே.என்.நேருவின் காதுக்குச் செல்ல, மேயரை அழைத்துப் பேசி அதைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மேயர் ராமச்சந்திரன்
மேயர் ராமச்சந்திரன்

இது தொடர்பாக மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவியிடம் பேசியபோது, “இந்தத் தகவல் என்னுடைய காதுக்கும் வந்தது. இது தொடர்பாக நான் யாரிடமும் கேட்கவில்லை. கூட்டணி தர்மத்தை நிலைநாட்டிவரும் தி.மு.க அரசு இது போன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுப்படுவதற்கு வாய்ப்பில்லை என நம்புகிறேன்” என்றார்.

மேலும் துணை மேயரை நீக்குவதற்காகக் கையெழுத்து வாங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனிடம் பேசியபோது, “கையெழுத்து பெற்றது உண்மைதான். ஆனால் தலைமையின் உத்தரவு இல்லாமல் பதவிநீக்கம் செய்ய முடியாது. துணை மேயரின் செயல்பாடுகள் மேயரான எனது பணியைத் தடுத்து நிறுத்துகின்றன. எதற்கெடுத்தாலும் மேயருடன் போட்டி போடுகிறார். அதனால் ஒரு வார்னிங்காக அது மாதிரி கையெழுத்து வாங்கப்பட்டது’ என்றார்.