சமூகம்
அலசல்
அரசியல்
Published:Updated:

ஆர்.எஸ்.எஸ் ரவி-க்கு பதில் சொல்லவேண்டியது அவசியம்! - தடதடக்கும் தமிழன் பிரசன்னா

தமிழன் பிரசன்னா
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழன் பிரசன்னா

தேவையில்லாத இடத்தில் மூக்கை நுழைத்து மூக்கறுபடுவதே அக்காவுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. அவரின் பேச்சைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே கண்டித்திருக்கிறது

ஆளுநர் எதிர்ப்பில் ஆரம்பித்து இரண்டாண்டு சாதனை, அமைச்சரவை மாற்றம் என தி.மு.க அரசைச் சுற்றிச் சுழன்றடிக்கும் ‘ஹாட்’ கேள்விகளோடு அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னாவைச் சந்தித்தேன்...

“இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திலும்கூட, ஆளுநருக்கு பதிலளித்து நீண்டநேரம் பேசியிருக்கிறாரே தமிழக முதல்வர்... ஆளுநர் எதிர்ப்பு மட்டும்தான் இந்த அரசின் பெரிய சாதனையா?”

“சமூகநீதி, சமத்துவம், திராவிடம், சுயாட்சி என்பதை உயிர்நாடியாகக்கொண்ட தி.மு.க ஆட்சி செய்துவரும் மண்ணில் நின்றுகொண்டு, ‘ரிஷிகளாலும் முனிகளாலும் கட்டமைக்கப்பட்டதுதான் இந்த நாடு, திராவிட மாடல் காலாவதியானது, நீர்த்துப்போனது’ என்றெல்லாம் பேசுகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆக, ஆளுநர் என்ற தகுதியை மீறிய, ஆர்.எஸ்.எஸ் ஆர்.என்.ரவிக்கு பதில் சொல்லவேண்டியது அவசியமே.”

தமிழன் பிரசன்னா
தமிழன் பிரசன்னா

“ஆனால், ‘வாரிசை உருவாக்கிய ஈராண்டு சாதனை’ என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மிகக் கடுமையாக விமர்சிக்கிறாரே?”

“தேவையில்லாத இடத்தில் மூக்கை நுழைத்து மூக்கறுபடுவதே அக்காவுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. அவரின் பேச்சைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே கண்டித்திருக்கிறது. ‘தி.மு.க அரசு, இந்த இரண்டு ஆண்டுகளில் என்ன சாதித்தது?’ என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசே புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டிருக்கிறது. அப்படியென்றால், ஒன்றிய அரசு பொய் சொல்கிறது என்கிறாரா அக்கா?”

“பால்வளத்துறை சர்ச்சையில் நாசர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். `ஆடியோ சர்ச்சை’ பி.டி.ஆரின் துறையும் பறிக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையா?”

“இளைஞரணி காலத்திலிருந்து தளபதியுடன் பயணிப்பவர் நாசர். முதல்வரின் நெருங்கிய நண்பர். ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. முதல்வர் சில துறைகளில் மாற்றம் செய்திருக்கிறார். மேலும், புதிதாக ஒருவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மற்றபடி இந்தத் துறை மாற்றத்துக்கு, குற்றச்சாட்டுகள்தான் காரணம் என்பது தவறான கருத்து.”

“ `புதிய தலைமைச் செயலகம் வேண்டும்’ என்ற கோரிக்கை மறுபடியும் எழுந்திருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க மோதலில் இப்படி மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது சரிதானா?”

“இதை தி.மு.க., அ.தி.மு.க பிரச்னை என்று சொல்வது தவறு. கலைஞர் வருங்காலத்தைத் திட்டமிட்டு பல நூறு கோடி ரூபாய் செலவில், ‘புதிய தலைமைச் செயலகம்’ என்ற ஓர் அருமையான தலைமைச் செயலகத்தைக் கட்டினார். ஆனால், அம்மையார் ஜெயலலிதாதான், காழ்ப்பு காரணமாக, ‘கால்வைக்க மாட்டேன்’ என்று சொல்லி, அந்த வளாகத்தையே நாசம் செய்தார். இந்த நிலையில், மீண்டும் சட்டசபை அங்கு மாற்றப்படுமா என்ற முடிவை முதல்வர் எடுப்பார்.

கண்டிப்பாக மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசாவைக்கூட தி.மு.க அரசு வீணடிக்காது.”