Published:Updated:

``19 கேஸ்... அதுல 9 கொலை கேஸ் போட்டீங்க; இப்போ மந்திரியா இருக்கேன்!" - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

அமைச்சர் கே.என்.நேரு

பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ப.குமார் பேசியிருந்த நிலையில், அதற்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

``19 கேஸ்... அதுல 9 கொலை கேஸ் போட்டீங்க; இப்போ மந்திரியா இருக்கேன்!" - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ப.குமார் பேசியிருந்த நிலையில், அதற்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Published:Updated:
அமைச்சர் கே.என்.நேரு

கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சி திருவெறும்பூர் பகுதியில் அ.தி.மு.க சார்பில் மே தினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் திருச்சி எம்.பி-யும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான ப.குமார், தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாகப் பேசியிருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அ.தி.மு.க.,பொதுக்கூட்ட மேடையில் ப.குமார்
அ.தி.மு.க.,பொதுக்கூட்ட மேடையில் ப.குமார்

திருச்சி அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் இந்நாள் மாவட்டச் செயலாளர்கள் என அரை டஜன் சீனியர்கள் இருந்தும், தி.மு.க அமைச்சரான கே.என்.நேரு மீது யாரும் கடுமைகாட்டிப் பேசுவதில்லை. அப்படியிருக்க அ.தி.மு.க மாவட்டச் செயலாளரான ப.குமார், அமைச்சர் கே.என்.நேரு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், நேரு மீதான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் கூறி ப.குமார் அதிரடித்திருந்தார். இந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருச்சி பொன்மலைப்பட்டியில் நடந்த தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்ட மேடையில் பேசினார் அமைச்சர் கே.என்.நேரு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
தி.மு.க சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

மேடையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ``அ.தி.மு.க மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஒருவர் ‘இந்த ஓராண்டிலே நேரு 100 கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டார். காலேஜை கடனிலிருந்து திருப்பிவிட்டார். புதுக்கோட்டை அருகே 200 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார். என்மீது வழக்கு போடட்டும். நான் கோர்ட்டில் சந்திக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். என்னிடம் 200 கோடி இருந்தால் முழுமையாக அரசாங்கத்துக்கு எடுத்துக் கொடுங்கள். எனக்கு அதில் எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. உங்களால முடிஞ்சா உங்க கட்சியில இருக்கற பிரச்னையை முடிச்சிட்டு பேசுனா பரவாயில்லை. எங்களை ஏன் பிராண்டுறீங்க. நீங்கள் ஒரு வழக்கை சந்திக்கத் தயாராக இருக்கும்போது, நாங்கள் சந்திக்க மாட்டோமா... உங்களால முடிஞ்சா நாளைக்கு எங்க மேல கேஸ் போட்டு உள்ளே தள்ளுங்க. ஏற்கெனவே என் மேல ஒரு கேஸ் ரெண்டு கேஸ் இல்லை... 19 கேஸ் போட்டீங்க. அதுல 9 கேஸ் கொலை கேஸ். அதுல இருந்து நாங்க வெளிய வந்து இப்போ மந்திரியாதான் இருக்கோம். ‘நேரு ஒண்ணும் மனிதர்ல புனிதர் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார். மனிதர்ல புனிதராக இருந்தா வாயில வெண்ணெயைத் தடவி, திண்ணையில படுக்கப்போட்டுட்டுப் போயிடுவீங்க. புனிதர்னா நாங்க என்ன சங்கர மடமா நடத்துறோம்... இது அரசியல் சார். யார்தான் அரசியல்ல புனிதராக இருக்காங்க சொல்லுங்க... குற்றம் செய்தால் கோர்ட் இருக்கிறது. தண்டனை கொடுத்தால் நாங்கள் அனுபவிக்கத் தயாராக இருக்கிறோம். எனவே நீங்களெல்லாம் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism