Published:Updated:

சென்னை மழை: ``அவர் நேரில் சென்று பார்த்தாரா?" - எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்

சேகர் பாபு

``கடந்த ஆட்சிக்காலத்தில் ஒன்றிய அரசுக்கு அடிமைச் சாசனம் விதித்து, பயந்து பயந்து ஆட்சி நடத்தி, உருப்படியான எந்தத் திட்டத்தையும் அ.தி.மு.க தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரவில்லை." - அமைச்சர் சேகர் பாபு

சென்னை மழை: ``அவர் நேரில் சென்று பார்த்தாரா?" - எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்

``கடந்த ஆட்சிக்காலத்தில் ஒன்றிய அரசுக்கு அடிமைச் சாசனம் விதித்து, பயந்து பயந்து ஆட்சி நடத்தி, உருப்படியான எந்தத் திட்டத்தையும் அ.தி.மு.க தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரவில்லை." - அமைச்சர் சேகர் பாபு

Published:Updated:
சேகர் பாபு

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில்,``இரண்டு நாள் மழைக்கே சென்னை தத்தளிக்கிறது. முதல்வரின் தொகுதியான கொளத்தூரிலேயே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் தண்ணீரெல்லாம் வடிந்துவிட்டதாக மார்தட்டிக்கொள்கிறார்கள்" என குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை திருவிக நகர் மண்டல மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த பிறகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``2015, 2020 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றாத இடங்களே இல்லை. ஆனால், மழை வெள்ள நடவடிக்கைப் பணி முழுமையாக நடைபெறவில்லை எனக் குற்றம்சாட்டும் எடப்பாடி பழனிசாமி இந்த மூன்று, நான்கு நாள்களில் மழை நீர் பாதித்த பகுதிகளை சென்று பார்த்தாரா?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கடந்த பத்தாண்டுக் காலம் தமிழ்நாட்டைச் சீரழித்தார்கள். கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன்... இதை மையப்படுத்தியே கொசஸ்தலை ஆறு பேசின் திட்டத்தை ரூ.3,500 கோடிக்கு டெண்டர்விட்டார்கள். ஆனால், அந்தப் பணி தொடரவே இல்லை. தி.மு.க ஆட்சியில்தான் அந்தப் பணிகளை ஏற்றுக்கொண்டு, நாற்பது சதவிகிதப் பணிகளை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.

அதோடு மட்டுமல்ல, நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், நான்காண்டு காலத்தில் 126 கிலோமீட்டர் அளவுக்கு மழைநீர் கால்வாய் அமைத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு 200 கிலோமீட்டர் நீள டெண்டருக்கு சுமார் ரூ.700 கோடித் திட்டத்தில் இன்றுவரை 156 கிலோமீட்டர் நீளமுள்ள மழைநீர்க் கால்வாய் பணி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதிலிருந்து யார் வாய்ச்சொல் வீரர் எனத் தெரிந்துகொள்ளலாம். சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை தாழ்வான பகுதிகளில் எங்கெல்லாம் மழைநீர் தேங்கி நிற்கிறதோ, அதை அடுத்த முறை மழை வரும்போது மழை நீர் தேங்காத வகையில் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

பாரதியாரின் கவிதையை எடப்பாடி நேற்று மேற்கோள் காட்டியிருந்தார். அதனுடைய நிறைவு வரியில் பாரதியார், `அச்சமும் பேதமையும், அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டாரடி கிளியே...’ எனப் பாடி முடித்திருப்பார். கடந்த ஆட்சிக்காலத்தில் ஒன்றிய அரசுக்கு அடிமைச் சாசனம் விதித்து, பயந்து பயந்து ஆட்சி நடத்தி, உருப்படியான எந்தத் திட்டத்தையும் தமிழகத்துக்குக் கொண்டுவராமல், ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் என்ற தாரக மந்திரத்தைக்கொண்டு செயல்பட்டது கடந்த ஆட்சி.

மக்களின் நல்வாழ்வில் அக்கறைகொண்டு, மக்களுக்காகவே செயல்படுகிற முதல்வர் ஸ்டாலினை, மக்கள் என்றும் போற்றுவார்கள். பத்தாண்டு மேயராக இருந்த ஸ்டாலி,ன் மாநகரத்துக்கு எதையும் செய்யவில்லை என எடப்பாடி குறிப்பிட்டார். ஆனால், அதற்குப் பிறகு பத்தாண்டுகள் எடப்பாடி கட்சிதான் ஆட்சியில் இருந்தது. அதனால்தான் இவ்வளவு குழப்பங்களும். அந்தப் பத்தாண்டுகள் இவர் முழுமையான திட்ட பணிகளை நிறைவேற்றியிருந்தால், இன்றைக்கு மாநகர மக்களுக்கு எந்த பாதிப்பும் இருந்திருக்காது.

சேகர் பாபு ஆய்வு
சேகர் பாபு ஆய்வு

தேர்தல் பரப்புரையில் சிங்கப்பூரைப்போல சென்னையை மாற்றியிருக்கிறோம். ரூ.1,000 கோடி மதிப்பில் கால்வாய்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். எப்படிப்பட்ட மழை வந்தாலும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இருக்காது எனக் கூறியிருந்தார். அவர் சொல்லி முடித்த ஆறு மாத காலத்தில் சென்னை அந்த ஆண்டே தத்தளித்தது. அந்த மக்களைக் காப்பாற்றியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவர் எத்தனை பேட்டி கொடுத்தாலும், அறிக்கை வெளியிட்டாலும் மக்கள் அதை நம்புவதற்குத் தயாராக இல்லை'' என்ப் பேசினார்.