Published:Updated:

வீடியோ எடுத்த ஆளுநர் ரவியின் விருந்தினர்; உரிமை மீறல் குழுவின் விசாரணைக்கு சபாநாயகர் ஒப்புதல்!

ஆர்.என். ரவி - அப்பாவு

ஆளுநருடன் வந்திருந்த விருந்தினர் ஒருவர், அவையில் வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக, சட்டமன்றக் கூட்டத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

வீடியோ எடுத்த ஆளுநர் ரவியின் விருந்தினர்; உரிமை மீறல் குழுவின் விசாரணைக்கு சபாநாயகர் ஒப்புதல்!

ஆளுநருடன் வந்திருந்த விருந்தினர் ஒருவர், அவையில் வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக, சட்டமன்றக் கூட்டத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஆர்.என். ரவி - அப்பாவு

ஜனவரி 9-ம் தேதியன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உரையின்போது, அரசு தயார்படுத்திக்கொடுத்த உரையிலிருந்து சிலவற்றை வாசிக்காமல் தவிர்த்துவிட்டு உரையாற்றினார்.

ஆளுநர் வெளிநடப்பு
ஆளுநர் வெளிநடப்பு

இது அவையில் சலசலப்பை ஏற்படுத்த, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக அவை மரபை மீறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையை அவைக்குறிப்பிலிருந்து நீக்க தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது திடீரென ஆர்.என்.ரவி, தேசியகீதம் இசைக்கப்படும் முன்பே அவையிலிருந்து கிளம்பிவிட்டார்.

இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில், ஆளுநருடன் வந்திருந்த விருந்தினர் ஒருவர், அவையில் வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக... சட்டமன்றக் கூட்டத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

ஆர்.என். ரவி - அப்பாவு
ஆர்.என். ரவி - அப்பாவு

இன்றைய கூட்டத்தில் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா, ``9-ம் தேதி நடந்த கூட்டத்தில் ஆளுநர் உரையின்போது அவருடன் வந்த விருந்தினர் ஒருவர், பார்வையாளர் மாடத்திலிருந்து வீடியோ எடுத்தார்" என்று தெரிவித்து, அந்த நபர்மீது உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அப்பாவு, அவையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டி, ஆளுநரின் விருந்தினர் மீதான தீர்மானத்தை உரிமை மீறல் குழுவின் விசாரணைக்கு அனுப்புவதாக அறிவித்தார்.