Published:Updated:

``2-ஜி வழக்கையே பார்த்தவன்... சொத்துக்குவிப்பு வழக்கு பெரிய விஷயமல்ல!" - ஊட்டியில் ஆ.ராசா பேட்டி

எம்.பி ஆ.ராசா

``5 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 5 கோடி ரூபாய் சொத்து என்னுடையது அல்ல. மற்றவர்களுக்குச் சொந்தமானது." - ஆ.ராசா

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ‌.ராசா தலைமையில் ஊட்டியிலுள்ள தமிழகம் மாளிகையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 'திசா' எனப்படும் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் தலைவர் என்ற முறையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

எம்.பி ஆ.ராசா
எம்.பி ஆ.ராசா

ஆய்வுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எம்.பி ஆ.ராசா, ``5 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 5 கோடி ரூபாய் சொத்து என்னுடையது அல்ல. மற்றவர்களுக்குச் சொந்தமானது. இந்தச் சொத்துகளை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ என அனைத்துத் துறையினரும் ஆய்வுசெய்து இவை ராசாவுக்குச் சொந்தமானது இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசையும், அவர்களின் கொள்கைகளையும் சவால்விடும் வகையில் நான் பேசிவருகிறேன். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தேர்தலைக் குறிவைத்து சொத்துக்குவிப்பு என என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள். 2-ஜி வழக்கையே பார்த்தவன் நான். இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. நான் பார்த்துக்கொள்வேன்" என்றார்.