Published:Updated:

"கைத்தறி பொருள்கள் மீது 5% ஜிஎஸ்டி; மகாத்மா காந்தியை பாஜக அவமதித்துவிட்டது" - திமுக எம்.பி அப்துல்லா

திமுக எம்.பி அப்துல்லா

``தற்போதைய மத்திய அரசு நெசவாளர் நலத்திட்டங்களைப் புறக்கணித்து, இந்திய வரலாற்றில் முதன்முறையாக கைத்தறி பொருள்களுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதித்திருக்கிறது." - திமுக எம்.பி அப்துல்லா

"கைத்தறி பொருள்கள் மீது 5% ஜிஎஸ்டி; மகாத்மா காந்தியை பாஜக அவமதித்துவிட்டது" - திமுக எம்.பி அப்துல்லா

``தற்போதைய மத்திய அரசு நெசவாளர் நலத்திட்டங்களைப் புறக்கணித்து, இந்திய வரலாற்றில் முதன்முறையாக கைத்தறி பொருள்களுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதித்திருக்கிறது." - திமுக எம்.பி அப்துல்லா

Published:Updated:
திமுக எம்.பி அப்துல்லா

கைத்தறி பொருள்களுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதித்ததன் மூலம் மகாத்மா காந்தியை மத்திய பாஜக அரசு அவமதித்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய தி.மு.க எம்.பி அப்துல்லா, உடனடியாக அத்தகைய வரியை ரத்து செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கைத்தறி பொருள்கள் மீதான வரி குறித்துப் பேசிய தி.மு.க எம்.பி அப்துல்லா, ``விவசாயமும், கைத்தறி தொழிலும் இந்தியாவின் இரு விழிகள் என்று நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். வேலைவாய்ப்பில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கைத்தறி தொழில் இருக்கிறது. குடியரசு இந்தியாவில் 2017-ம் ஆண்டுவரையில் எந்த அரசாங்கமும் கைத்தறி பொருள்களுக்கு வரி விதிக்கவில்லை. அதோடு கைத்தறி தொழிலை ஊக்குவிக்க சிறப்பு நலத்திட்டங்கள் இருந்தன.

திமுக எம்.பி அப்துல்லா
திமுக எம்.பி அப்துல்லா

ஆனால் தற்போதைய மத்திய அரசு நெசவாளர் நலத்திட்டங்களைப் புறக்கணித்து, இந்திய வரலாற்றில் முதன்முறையாக கைத்தறி பொருள்களுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதித்திருக்கிறது. பாரிஸ் காலநிலைமாற்ற மாநாட்டில் குறைந்தது 2 டிகிரி வெப்பத்தைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோல கைத்தறி தொழில் மீதான நிலைமையினை சரிசெய்யவும், அதன் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் நம்மிடம் வழிகள் இருக்கின்றன. ஏனெனில் கைத்தறி ஜவுளி உற்பத்தி நிலையிலிருந்தே சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. அதோடு எந்த மின்சார சக்தியையும் பயன்படுத்த வேண்டியதில்லை. கைத்தறி தொழிலில் பயன்படுத்தப்படும் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான வளங்கள் சுற்றுச்சூழலுக்கு நெருக்கமானவை. ஆனால், கைத்தறி துறையை மேம்படுத்தாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஆயிரம் கோடி ரூபாயை அரசு செலவிடுவது வருத்தமளிக்கிறது.

கைத்தறி நெசவாளர்கள்
கைத்தறி நெசவாளர்கள்

கைத்தறி நெசவாளர்களில் கிட்டத்தட்ட 67 சதவிகிதம் பேர், மாதம் ஐந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர். கைத்தறி பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்துசெய்து, ஊக்கத்தொகை வழங்க அரசு முன்வராவிட்டால் கைத்தறி ஆடைகள் எதிர்காலத்தில் அழிந்துவிடும். எனவே மத்திய அரசிடம், மனிதாபிமான அடிப்படையில் கைத்தறி பொருள்கள் மீதான வரியை ரத்து செய்து, கைத்தறி நெசவாளர்களின் நலனுக்கான ஊக்கத்தொகையை அறிவிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.