Published:Updated:

`நான்கைந்து முறை ஜெயிச்சி மக்களை ஏமாத்திட்டேன்!’ - கலகலத்த தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன்

ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன்

``நான்கைந்து முறை ஜெயிச்சி மக்களை ஏமாத்திட்டேன். இன்னைக்கு வந்த பையன் எம்.பி அலுவலகத்தை திறந்திட்டான்’’ என்று நகைச்சுவையாகப் பேசினார், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன்.

தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவராக வலம்வரும் அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், கவிதையில் நகைச்சுவையைப் புகுத்தி பேசக்கூடிய வல்லமை மிக்கவர். ஆன்மிகவாதியான ஜெகத், கோயில்களுக்குச் சென்றால் சாமிக்குத் தன் கையால்தான் தீபாராதனை காட்டுவார். அவ்வளவு கடவுள் பக்தி.

ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன்

ஆனால், `தொகுதி மக்களுக்கு மட்டும் தரிசனம் கொடுக்க மாட்டார். எம்.பி-யை நேரில் சந்தித்து குறைகளைக் கொட்ட முடியாதா...?’ என்ற தவிப்பிலேயே இருக்கிறார்கள் அரக்கோணம் மக்கள். அரக்கோணத்தில் ஏற்கெனவே இரண்டு முறை வெற்றிபெற்ற அவர், எம்.பி அலுவலகத்தைத் திறக்காததால், மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இம்முறையாவது,`எம்.பி அலுவலகத்தைத் திறப்பார், தங்கள் குறைகளைச் சொல்லலாம்’ என்று அரக்கோணம் மக்கள் மத்தியில் பேச்சு இருந்தது. ஆனால், அவர்களின் ஆசையை, `இந்த முறையும் நிறைவேற்றாமல் 5 ஆண்டுகளைக் கடந்துவிட நினைக்கிறாரோ’ என்று எண்ணக்கூடிய அளவுக்குப் பேசியிருக்கிறார், ஜெகத்ரட்சகன்.

ஸ்டாலினுடன் ஜெகத்ரட்சகன்
ஸ்டாலினுடன் ஜெகத்ரட்சகன்

வேலூர் எம்.பி-யான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தனக்கான அலுவலகத்தை 27-ம் தேதி, வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில் திறந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜெகத்ரட்சகன், ``நான் கிட்டத்தட்ட நான்கைந்து தடவை எம்.பி-யாக இருந்திருக்கிறேன்.

இந்த மேடையில் உட்காருவதற்குச் சங்கடமாக இருக்கிறது. என்னடா, இந்த மாதிரி ஓர் ஆபீஸை நாம திறக்கலையே? நான்கைந்து முறை நின்று மக்களை ஏமாத்திட்டேன். `இன்னைக்கு வந்த பையன் ஆபீஸைத் திறந்திட்டானே'னு ஒரே சங்கடமாகப் போச்சு.

வேலூர் நிகழ்ச்சியில் ஜெகத்ரட்சகன்
வேலூர் நிகழ்ச்சியில் ஜெகத்ரட்சகன்

நாடாளுமன்றத்தின் 39 தொகுதிகளில் முதல்முறையாக இப்படியொரு அலுவலகத்தைத் திறந்து மீட்டிங் நடத்தியிருக்கிற வரலாற்றைப் பதித்திருக்கிறார் கதிர் ஆனந்த்’’ என்று ஜாலியாகப் பேசினார். இந்தப் பேச்சைக்கேட்ட தி.மு.க தொண்டர்கள் சிலரே, `ஆக, இந்த முறையும் அரக்கோணத்தில் எம்.பி அலுவலகத்தை ஜெகத், திறக்கமாட்டார்’ என்று கமென்ட் அடித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு