Published:Updated:

``மதுக்கடைகளை மூடுவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை..!" - கனிமொழி எம்.பி

கனிமொழி எம்.பி

`தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகளை முழுவதுமாக மூடுவோம் என்று எதுவும் கூறவில்லை. ஆனால் கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.' - கனிமொழி

``மதுக்கடைகளை மூடுவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை..!" - கனிமொழி எம்.பி

`தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகளை முழுவதுமாக மூடுவோம் என்று எதுவும் கூறவில்லை. ஆனால் கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.' - கனிமொழி

Published:Updated:
கனிமொழி எம்.பி

கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரியில் மாணவ மாணவியர் திறமைகளை முன்னேற்றம் குறித்த கலந்துரையாடலில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று கலந்துகொண்டார். கனிமொழி எம்.பி மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடியபோது மாணவிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் பல துறைகள் சம்பந்தமான கேள்விகளை எழுப்பினர். அதில் ஒரு மாணவி, ``எலக்‌ஷன் நேரத்தில மதுவை ஒழிப்போம்'னு சொல்லியிருந்தீங்க. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? மதுவின் காரணமாக அப்பா, அண்ணன், தம்பியை இழந்து பல குடும்பங்கள் சீர்குலைந்து உள்ளன. மேலும் காவல்துறையினரே மது பழக்கத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் மது விற்பனை நிறுத்தபடுமா?" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி, ``தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகளை முழுவதுமாக மூடுவோம் என்று எதுவும் கூறவில்லை. ஆனால் கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

கேள்வி கேட்கும் மாணவி
கேள்வி கேட்கும் மாணவி

ஆனாலும், விடாத மாணவிகள் மதுவிலக்கு காவல்துறையினரே மதுக்கடைகளில் இருந்து பறிமுதல் செய்து கொண்டு வரும் மது பாட்டில்களை எடுத்துவந்து பயன்படுத்தி வருவதாகவும், மதுக் கடைகளில் காவல்துறையினருக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் கூறிய கனிமொழி எம்.பி, "மதுக்கடைகளில் 18 வயது ஆகிவிட்டதா என பார்த்துதான் மது கொடுக்கிறார்கள். ஆனால் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் எனப் பார்த்து மது வழங்குவது இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மாணவிகளுடன் கனிமொழி எம்.பி
மாணவிகளுடன் கனிமொழி எம்.பி

அதனால் காவல் துறையினர் என்று தனியாக தரம்பிரித்து மது வழங்காமல் இருக்க முடியாது. அதே நேரத்தில் பணியில் இருக்கும் காவலர்கள் மது அருந்தி வந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் கனிமொழி எம்.பி-யை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள் மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்தும், மின்வெட்டு பற்றியும் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர் பேட்டி கொடுக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism