Published:Updated:

``பிற மொழியைக் கற்க வலியுறுத்த யாருக்கும் உரிமை இல்லை!" - கனிமொழி

கனிமொழி

``நம் வீட்டில் பேச தமிழ் மொழி போதும். பிற மொழியைக் கற்க, வலியுறுத்த யாருக்கும் உரிமை கிடையாது." - கனிமொழி

``பிற மொழியைக் கற்க வலியுறுத்த யாருக்கும் உரிமை இல்லை!" - கனிமொழி

``நம் வீட்டில் பேச தமிழ் மொழி போதும். பிற மொழியைக் கற்க, வலியுறுத்த யாருக்கும் உரிமை கிடையாது." - கனிமொழி

Published:Updated:
கனிமொழி

தூத்துக்குடி எம்.பி-யும், தி.மு.க துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கோவை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எதையும் அழிக்க வேண்டும் என்பதில்லை. உலகத்தோடு தொடர்பு கொள்ள  ஆங்கிலம் தேவை என பேரறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார்.

கனிமொழி
கனிமொழி

நம் வீட்டில் பேச தமிழ் மொழி போதும். பிற மொழியைக் கற்க, வலியுறுத்த யாருக்கும் உரிமை கிடையாது. மொழி என்பது என்னுடைய அடையாளம். என்னைப் பற்றியும், என் வரலாற்றை தெரிந்து கொள்ள உதவுகிறது. நம் மொழி நமக்கு அடையாளமாகவும், சுயமரியாதையாகவும் திகழ்கிறது.

மீண்டும் மொழி போர் வந்துவிடக்கூடாது என்றுதான் முதல்வர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகள் இருக்கக்கூடிய சூழல்தான் தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு.

கனிமொழி
கனிமொழி

இந்தியாவைப் பொறுத்தவரை பட்டியல் 8-ல் மொழிகள் எல்லாம் இணையாக, ஒரே நிலையில் பார்க்க வேண்டும். சில மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, தேசிய மொழியாக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நம்முடைய முதல்வர் மட்டுமல்லாமல், மற்ற மாநில முதல்வர்கள் கூட எதிர்வினை ஆற்றியுள்ளார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்றவரிடம், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பெண்கள் ஆடை அணிவது தொடர்பான கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பெரியார்
பெரியார்

அதற்கு பதில் அளித்த கனிமொழி, “தந்தை பெரியார் குறிப்பிட்டதை போல தனக்கு எது வசதியான உடையோ அலங்காரமோ அதை பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.