Published:Updated:

அண்ணாமலையின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது! - தி.மு.க எம்.பி அப்துல்லா ஆவேசம்

எம்.பி அப்துல்லா
பிரீமியம் ஸ்டோரி
எம்.பி அப்துல்லா

இந்தப் பயணத்தில், நிதியமைச்சரையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. நிதியமைச்சர் என்பவர் வரவு-செலவுகளைப் பார்க்கக்கூடியவர்தான்.

அண்ணாமலையின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது! - தி.மு.க எம்.பி அப்துல்லா ஆவேசம்

இந்தப் பயணத்தில், நிதியமைச்சரையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. நிதியமைச்சர் என்பவர் வரவு-செலவுகளைப் பார்க்கக்கூடியவர்தான்.

Published:Updated:
எம்.பி அப்துல்லா
பிரீமியம் ஸ்டோரி
எம்.பி அப்துல்லா

தமிழக முதல்வரின் துபாய் பயணத்தை, வெற்றிப் பயணமாக அறிவிக்கிறது தி.மு.க. ஆனால், ‘தனி விமான சர்ச்சையில் ஆரம்பித்து, அரசுமுறைப் பயணத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஏன், முதல்வருக்கு முன்பே அவரது மருமகன் ஏன் துபாய்க்குச் சென்றார்...’ என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து தி.மு.க அரசுக்கு எதிராகக் குடைச்சல் கொடுத்துவருகின்றன எதிர்க்கட்சிகள். இந்த நிலையில், முதல்வரோடு துபாய் பயணம் மேற்கொண்ட தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவிடம் பேசினோம்...

“கடந்தகாலத்தில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கச் சென்ற அ.தி.மு.க-வினரை ‘சுற்றுலா அமைச்சரவை’ என்று விமர்சித்த மு.க.ஸ்டாலின் இன்று மனைவி, மகன், பேரக் குழந்தைகளோடு துபாய்க்குச் சென்று வந்திருப்பதை என்னவென்று சொல்வது?’’

“தனக்கு வேண்டப்பட்ட, தன்னை ஆதரிக்கிற பத்து அமைச்சர்களைக் கூட்டிக்கொண்டு சுற்றுலா செல்வதுபோல் வெளிநாடு சென்றார் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தொழில் முதலீடுகளை ஈர்க்க எந்த அமைச்சர் தேவையோ, அந்தத் தொழில்துறை அமைச்சரை மட்டும் அழைத்துக்கொண்டு துபாய் பயணம் மேற்கொண்டார் இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் 24 மணி நேரமும் வேலையில் இருப்பவர்கள். எங்களுக்கென்று தனிப்பட்ட நேரமோ, சனி, ஞாயிறு லீவோ கிடையாது. எனவே, அரசு சார்பிலான பயணத்தினூடேதான் நாங்களும் எங்கள் குடும்பத்தினரோடு நேரம் செலவழித்துக்கொள்ள வேண்டும். எம்.பி-யாக இருக்கும் நாங்களே அரசுமுறைப் பயணமாக அகில இந்திய அளவில் சுற்றுலா செல்லும்போது, தனிப்பட்ட வகையில் நாங்களே செலவுசெய்து எங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்வோம். அங்கேயும்கூட, குடும்பத்தினர்தான் சுற்றிப் பார்த்துக்கொண்டிருப்பார்களே தவிர, நாங்கள் எங்கள் வேலைகளைத்தான் பார்த்துக் கொண்டிருப்போம். துபாயிலும் இதுதான் நடந்தது. எனவே, குடும்ப உறுப்பினர்களை அரசாங்கப் பணத்தில் அழைத்துப் போயிருந்தால்தான் கேள்வி கேட்க வேண்டும்.’’

அண்ணாமலையின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது! - தி.மு.க எம்.பி அப்துல்லா ஆவேசம்

“தொழில் முதலீட்டை ஈர்க்கும் பயணத்தில், நிதியமைச்சரைக்கூட அழைத்துச் செல்லவில்லையே..?’’

“இந்தப் பயணத்தில், நிதியமைச்சரையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. நிதியமைச்சர் என்பவர் வரவு-செலவுகளைப் பார்க்கக்கூடியவர்தான். தொழிலதிபர்கள் மூலம் தமிழ்நாட்டுக்குள் கொண்டுவரப்படும் பணத்தை முறைப்படி செலவு செய்வதில்தான் நிதியமைச்சரின் பங்கு முக்கியத்துவம் பெறும். எனவே, தொழில்துறை அமைச்சர் நிதியை, தமிழகத்துக்குக் கொண்டுவருகிறார். அந்த நிதியை நிர்வாகம் செய்கிற வேலையை நிதியமைச்சர் பார்த்துக்கொள்வார். அவ்வளவுதான். இதில் ரொம்பக் குழப்பிக்கொள்ள வேண்டாம்!’’

“தனி விமான பயணச் செலவு குறித்தும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிய பிறகுதானே, ‘விமானச் செலவை தி.மு.க ஏற்றுக்கொண்டிருக்கிறது’ என பதிலளித்திருக்கிறீர்கள்?’’

“பொதுவாக விமானப் பயணத் திட்டத்தை, கடைசி நேரத்தில் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறெல்லாம் தனிநபர்கள் மாற்றியமைத்துக் கொள்ள முடியாது. குறைந்தது பத்து நாள்களுக்கு முன்பே விமானக் கட்டணம் செலுத்தி, உறுதிசெய்த பிறகுதான் பயணமே ஆரம்பமாகும். எனவே, ‘இது அரசு செலவிலான பயணமா’ என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியே நீங்கள்கூட எளிதாகக் கேட்டுப் பெற்றுவிட முடியும். எனவே, இந்த விஷயத்தில் எந்த ஒளிவுமறைவும் இல்லை.’’

“கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்றுவந்த கண்காட்சியில், கடைசி ஒரு வாரத்துக்கு முன்பாக ‘தமிழக அரங்கை’த் திறந்துவைக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது?’’

“தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், கொரோனா ஒழிப்புப் பணியிலேயே முழு கவனம் செலுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. அடுத்த சில மாதங்களும்கூட, கடந்த ஆட்சிக்கால நிர்வாகச் சீர்கேடுகளைச் சரிசெய்வதிலேயே ஓடிவிட்டன. அமல்படுத்தப்பட்டிருந்த போக்குவரத்துத் தடையெல்லாம் விலகி, தற்போதுதான் பயணங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. எனவே, இத்தனை மாதங்களாக இல்லாத வகையில், கண்காட்சி முடியவிருக்கும் கடைசி தருணத்தில்தான் 90% பேர் வந்திருக்கிறார்கள். எனவே, தேவையான நேரத்தில்தான் ‘தமிழக அரங்கு’ திறக்கப்பட்டிருக்கிறது.’’

“ `5,000 கோடி ரூபாயுடன் முதல்வர் ஸ்டாலின் துபாய்க்குச் சென்ற மர்மம் என்ன...’ என்று அண்ணாமலை கேட்கிறாரே?’’

“பிரதமர் மோடி ஒவ்வொரு முறை வெளிநாட்டுப் பயணம் செல்லும்போதும், 5 லட்சம் கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு போய் முதலீடு செய்தார்’ என்று நான் சொன்னால், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ... அதைப் போன்ற முட்டாள்தனமான குற்றச்சாட்டுதான் இது!’’

“ஆனால், கடந்த பிப்ரவரி மாதமே முதல்வரின் மகன், மருமகன் உள்ளிட்டோர் துபாய்க்குச் சென்று, பெரு முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசியதை ஆதாரமாகக் காட்டுகிறாரே அண்ணாமலை?’’

“தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியினாலும், அரசியல் காரணங்களுக்காகவும் அண்ணாமலை ஆயிரம் சொல்லிக்கொண்டிருப்பார். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது!’’

“ `அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களை மிரட்டிப் பணம் பறித்தார்’, `மின்வாரிய ஒப்பந்தம் குறித்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை’ என்றெல்லாம் சொல்கிற தி.மு.க அரசு, அண்ணாமலையைக் கைதுசெய்யத் தயங்குவது ஏன்?’’

“ `என் ஏரியாவில் வந்து என்னை அடிடா...’ என்று ஒரு படத்தில் வடிவேலு சொல்வார். அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு வடிவேலுவின் பின்னாலேயே செல்வார் சுந்தர் சி. ஆனால், இறுதியில், வடிவேலுவை அடிக்காமலேயே விட்டுவிட்டு வந்துவிடுவார். அந்தக் காட்சியில் வடிவேலுவை அவர் அடிக்காமல் விட்டுவிட்டுச் செல்வதற்குக் காரணம் ‘வடிவேலு பெரிய ஆள்’ என்பதால் அல்ல... அதற்குக் காரணம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்!’’