Published:Updated:

``ரூ.5 லட்சம் கோடி சென்றிருக்க வேண்டிய 5ஜி ஏலம் ஏன் ரூ.1.5 லட்சம் கோடியில் நின்றது?" - ஆ.ராசா கேள்வி

ஆ.ராசா

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக எம்.பி ஆ.ராசா குற்றம்சாட்டியிருக்கிறார்.

``ரூ.5 லட்சம் கோடி சென்றிருக்க வேண்டிய 5ஜி ஏலம் ஏன் ரூ.1.5 லட்சம் கோடியில் நின்றது?" - ஆ.ராசா கேள்வி

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக எம்.பி ஆ.ராசா குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
ஆ.ராசா

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக எம்.பி ஆ.ராசா குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``2ஜி அலைக்கற்றையில் குரல் மட்டும்தான் சென்றடையும். 3ஜி அலைக்கற்றை மூலம் வீடியோக்களைப் பார்க்க முடிந்தது. 4ஜி அலைக்கற்றையில் அதன் திறன் இன்னும் அதிகரித்தது. 5ஜி அலைக்கற்றை அதைவிட இன்னும் திறன் வாய்ந்தது. 5ஜி அலைக்கற்றையில் நீங்கள் தேடும் விஷயங்கள் ஒரு நொடியில் வந்துவிடும்.

5ஜி
5ஜி
pixabay

அந்தத் திறன் அடிப்படையில் பார்த்தால் 5ஜி அலைக்கற்றை ஏலம் ரூ.5 லட்சம் கோடி அல்லது ரூ.6 லட்சம் கோடிக்குச் சென்றிருக்க வேண்டும். நான்கைந்து நிறுவனங்களுடன் சேர்ந்து மத்திய அரசு கூட்டுச் சதி செய்துவிட்டதா... இது குறித்து விசாரிக்க வேண்டும். எங்கு தவறு நடந்திருக்கிறது... 2ஜி புகார் ஒரு பெரிய மோசடி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆ.ராசா
ஆ.ராசா

5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம்விடப்படும் என்று மத்திய அரசு கூறிய 5ஜி அலைக்கற்றை 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. மீதிப் பணம் எங்கு சென்றது... ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக வினோத் ராய் என்கிற தனிமனிதனைப் பயன்படுத்தி, சி.ஏ.ஜி என்கிற அரசியல் சட்ட அமைப்பைப் பயன்படுத்தி, அதற்குப் பின்னால் இருந்தவர்கள் மிகப்பெரிய சதியை தீட்டினார்கள் என்பதை என் புத்தகத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். இதுவரை இது குறித்து வினோத் ராயிடமிருந்து எந்த பதிலும் இல்லை" என்றார்.