Published:Updated:

``மத்திய அரசு மக்களுக்கு பணியாற்றுவதை மறந்துவிட்டது" - திருச்சி சிவா காட்டம்!

திருச்சி சிவா

`குடியரசுத் தலைவரின் உரையில் திருக்குறள் உள்ளிட்ட ஒரு சில அம்சங்களைத் தவிரப் பாராட்டக்கூடிய எதுவும் இல்லை. மத்தியக் கொள்கைகள் அனைத்தும் கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது.' - திருச்சி சிவா

Published:Updated:

``மத்திய அரசு மக்களுக்கு பணியாற்றுவதை மறந்துவிட்டது" - திருச்சி சிவா காட்டம்!

`குடியரசுத் தலைவரின் உரையில் திருக்குறள் உள்ளிட்ட ஒரு சில அம்சங்களைத் தவிரப் பாராட்டக்கூடிய எதுவும் இல்லை. மத்தியக் கொள்கைகள் அனைத்தும் கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது.' - திருச்சி சிவா

திருச்சி சிவா

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று காலை மாநிலங்களவை மத்திய பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நடைபெற்றது. மாநிலங்களவை கூடியதும், அவையின் உறுப்பினர்கள் மலேசியா வெள்ளத்திலும், டோங்கோ எரிமலை வெடிப்பிலும் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து வழக்கமான அவை நடவடிக்கைகள் தொடங்கின.

பின்னர், நாட்டின் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார். குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடத்த 12 மணி நேரமும், மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்கென 11 மணி நேரமும் ஒதுக்கி முடிவுசெய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் உரைக்குப் பின்பு, மாநிலங்களவையில் பேசிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா, ``குடியரசுத் தலைவரின் உரையில் திருக்குறள் உள்ளிட்ட ஒரு சில அம்சங்களைத் தவிரப் பாராட்டக்கூடிய எதுவும் இல்லை. மத்தியக் கொள்கைகள் அனைத்தும் கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது.

மாநிலங்களவை
மாநிலங்களவை
கோப்புப் ப்டம்

5 மாநிலத் தேர்தலைக் கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு பணியாற்றுவதை மறந்துவிட்டது. ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லை.

மேலும், பல மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதை வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மீனவர்களின் விவகாரங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் அங்கீகரிக்க வேண்டும்" என்றார்.