Published:Updated:

அதிமுக ஃபார்முலாவில் மாவட்டம் பிரிப்பு... கோவை அதிரடிக்குத் தயாராகும் திமுக!

கோவை மாவட்டத்தில் திமுக கட்சி நிர்வாகத்தில், அதிமுக முறையை ஃபாலோ செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஃபார்முலாவில் மாவட்டம் பிரிப்பு... கோவை அதிரடிக்குத் தயாராகும் திமுக!

கோவை மாவட்டத்தில் திமுக கட்சி நிர்வாகத்தில், அதிமுக முறையை ஃபாலோ செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Published:Updated:

கொங்கு மண்டல அரசியல், திமுக-வுக்கு எப்போதுமே சவாலான ஒரு விஷயம். கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில்கூட திமுக வெற்றிபெற முடியவில்லை. கடந்த சில தேர்தல்களாகவே கோவை அதிமுக-வின் கோட்டையாக இருந்துவந்தது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இதையடுத்து கோவை மாவட்டத்துக்குப் பொறுப்பு அமைச்சராக கரூரிலிருந்து செந்தில் பாலாஜியைக் களமிறக்கினர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது முதலே மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் என்ற தகவல் வட்டமடிக்கத் தொடங்கின. கோவை மாவட்ட திமுக-வில் தற்போது ஐந்து மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளனர். இந்த நிலையில், அதை மூன்றாக மாற்றியுள்ளனர். சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு ஆகிய தொகுதிகள் அடங்கியது கோவை மாநகர் மாவட்டமாகவும்,

கோவை
கோவை

மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், அவிநாசி தொகுதிகள் அடங்கியது கோவை வடக்கு மாவட்டமாகவும், சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி தொகுதிகள் அடங்கியது கோவை தெற்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், கோவையில் அதற்கு ஏற்றாற்போல திமுக-வில் மாவட்டங்களைப் பிரித்து வந்தனர். ஆனால், அது அவர்களுக்குப் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இது குறித்து திமுக-வினர் கூறுகையில், ``செந்தில் பாலாஜி அதிமுக ஸ்டைலில்தான் வேலை செய்கிறார்.

கோவை திமுக கூட்டம்
கோவை திமுக கூட்டம்

கொங்கு மண்டலத்துக்கு அந்த அரசியல்தான் பொருந்தும். நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் அதையும் மனதில் வைத்துத்தான் தற்போது மாவட்டம் பிரிக்கப்பட்டிருக்கிறது.

மாவட்டம் பிரிக்கப்பட்டதிலும் அதிமுக-வின் தாக்கம் இருக்கிறது. கோவை மாவட்ட அதிமுக-விலும் இதேபோல மாநகர், வடக்கு, தெற்கு என்று மூன்றாகத்தான் இருக்கிறது. முக்கியமாக அவிநாசி தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் வந்தாலும், அதிமுக கட்சிரீதியான நிர்வாகத்தில் அது கோவை தெற்கு மாவட்டத்தின் கீழ் வரும்.

கோவை அதிமுக கூட்டம்
கோவை அதிமுக கூட்டம்

அதேபோலத்தான் திமுக-விலும் பிரித்துள்ளனர். அதேபோல மாவட்டச் செயலாளர் தேர்விலும், கடந்தகாலத் தோல்விக்குக் காரணமானவர்களை அதிரடியாக மாற்றவிருக்கின்றனர்.” என்கின்றனர்.