Published:Updated:

`யானைகள் ஊருக்குள் வருவதற்கு இதுதான் காரணம்!’ -கோவை தி.மு.க பிரமுகர் அடடே கருத்து

கொசுக்கள் அதிகமானதால்தான், யானைகள் ஊருக்குள் வருவதாக கோவை தி.மு.க பிரமுகர் சி.ஆர்.ராமசந்திரன் கூறியுள்ளார்.

சி.ஆர்.ராமசந்திரன்
சி.ஆர்.ராமசந்திரன்

கோவை, சின்னத்தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிறுவனங்கள் அரசிடம் உரிய அனுமதி பெறாமல், புறம்போக்கு நிலங்கள், நீர்வழிப்பாதை, வனப்பகுதி போன்ற இடங்களில் அத்துமீறி பல நூறு அடிகளுக்கு மண் எடுத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

`யானைகள் ஊருக்குள் வருவதற்கு இதுதான் காரணம்!’ -கோவை தி.மு.க பிரமுகர் அடடே கருத்து

இதனால், சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், அந்தப் பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர் அப்பகுதியில் வசிக்கும் மக்கள்.

அதேபோல, யானை வழித்தடத்தை மறித்து, பல நூறு அடிக்கு மண் எடுத்து வருகின்றனர். இதனால், யானைகள் வழிமாறி ஊருக்குள் வருகின்றன.

`யானைகள் ஊருக்குள் வருவதற்கு இதுதான் காரணம்!’ -கோவை தி.மு.க பிரமுகர் அடடே கருத்து

எனவே, ``அங்கு இயங்கிவரும் செங்கல் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க வேண்டும்” என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில், தி.மு.க கோவை வடக்கு மாவட்டச் செயலாளரும், கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்க கௌரவ தலைவருமான சி.ஆர்.ராமசந்திரன், ``கடந்த 50 ஆண்டுகளாக இங்கு செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. முன்பு யானை வழித்தடம் எல்லாம் இங்கில்லை. கடந்த 10 ஆண்டுகளாகத்தான் யானைகள் வனத்திலிருந்து வெளியில் வருகின்றன. முன்பு, விறகுக்காக மலைப்பகுதியில் மரம் வெட்டுவார்கள்.

சி.ஆர்.ராமசந்திரன்
சி.ஆர்.ராமசந்திரன்

தற்போது அது நடப்பதில்லை. இதன்காரணமாக, வனம் முழுவதும் மரம், செடி, கொடிகள் அதிகரித்துவிட்டன. இதனால், கொசுத் தொல்லை அதிகமாகி யானைகள் ஊருக்குள் வருகின்றன. அதுதான் பிரச்னைக்குக் காரணம்” என்று கூறியுள்ளார். சி.ஆர்.ராமசந்திரன் முன்னாள் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.