தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதன் காரணமாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய அரசியல் கட்சித் தலைவர்கள் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனால் அவற்றைப் பின்பற்றி , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பரப்புரை, பொதுக்கூட்டங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் வீடு வீடாகப் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். வேட்புமனுத் தாக்கல் முடிந்ததும், பிரசாரப் பணிகள் வேகம் பெறும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism