Published:Updated:

``மக்கள்தான் முக்கியமே தவிர, இந்தப் பதவிகள் அல்ல” - புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

``மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், அதிகாரத்துக்கு வந்தாக வேண்டும் என்பதை உணர்ந்ததால், தேர்தலில் குதித்தது திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள்தான் எங்களுக்கு முக்கியமே தவிர, இப்படிப்பட்ட பதவிகள் அல்ல." - முதல்வர் ஸ்டாலின்

``மக்கள்தான் முக்கியமே தவிர, இந்தப் பதவிகள் அல்ல” - புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின்

``மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், அதிகாரத்துக்கு வந்தாக வேண்டும் என்பதை உணர்ந்ததால், தேர்தலில் குதித்தது திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள்தான் எங்களுக்கு முக்கியமே தவிர, இப்படிப்பட்ட பதவிகள் அல்ல." - முதல்வர் ஸ்டாலின்

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த 7-ம் தேதி மதுரைக்கு வந்தார். தொடர்ந்து, 8-ம் தேதி காலை சிவகங்கையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள திருமயம், லேணாவிளக்கு வழியாக புதுக்கோட்டைக்கு வந்தவர், அரசு சுற்றுலா மாளிகையில் தங்கினார். அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் முதல்வரைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு ரூ.370 கோடி மதிப்பீட்டில் 48,868 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதோடு, ரூ.81.31 கோடி செலவில் முடிவுற்ற 140 திட்டப்பணிகள் திறந்துவைக்கப்பட்டன. ரூ.165 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழாவும் நடைபெற்றது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ``சுற்றுச்சூழல்துறை என்பது கொஞ்சம் டெக்னிக்கலான துறை. இன்றைய உலகில் மிக முக்கியமான துறையும்கூட. அதிலும் தனிப்பட்ட ஆர்வத்தைச் செலுத்தி அந்தத் துறையில் சிறப்பாக ஆளுமையை அமைச்சர் மெய்யநாதன் செலுத்திவருகிறார். அதுமட்டுமல்ல, விளையாட்டுத்துறையிலும் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளைப் படைக்க, அவரது உற்சாகம் காரணமாக அமைந்திருக்கிறது.

அரசின் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றுவதிலும், தமிழக அரசின் வழக்குகளைத் திறம்படக் கையாண்டு மாநில உரிமைகளை நிலைநாட்டுவதிலும் அமைச்சர் ரகுபதியின் பங்களிப்பு இன்றியமையாதாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நல்ல அமைச்சர்களைக் கொடுத்த இந்தப் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 7,463 கோரிக்கை மனுக்களில் 3,614 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், அதிகாரத்துக்கு வந்தாக வேண்டும் என்பதை உணர்ந்ததால், தேர்தலில் குதித்தது திராவிட முன்னேற்றக் கழகம். மக்கள்தான் எங்களுக்கு முக்கியமே தவிர, இப்படிப்பட்ட பதவிகள் அல்ல. எத்தகைய திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதை வாக்கு வாங்கக்கூடிய தந்திரம் என்று, கொச்சைப்படுத்தக் கூடியவர்கள் சிலர் இருக்கிறார்கள். வாக்குகளை வாங்குவதற்காகத்தான் இதையெல்லாம் செய்கிறோம் என்று குற்றம்சாட்டக்கூடிவர்கள், விமர்சனம் செய்யக்கூடியவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நான் கேட்கிறேன், பழங்குடியின மக்களுக்கோ, மாற்றுத்திறனாளிகளுக்கோ, திருநங்கைகளுக்கோ வாக்குவங்கி அதிகமா இருக்கிறதா... அவர்களெல்லாம் வாக்குவங்கி உள்ளவர்களா... இப்படி வாக்குவங்கி இல்லாதவர்களுக்கும் வாழ்க்கைக்கும் தேவையான வசதிகளைக் கொடுப்பதுதான் தி.மு.க அரசு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசின் நோக்கம், சிந்தனை, செயல் ஆகிய அனைத்தும் மக்கள் நலம்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதியில் இருக்கும் பிரச்னைகளை, கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர். அவர்களின் கோரிக்கை இங்கு மட்டுமல்ல, சட்டமன்றத்திலும் சரி, மக்கள் மன்றத்திலும் சரி என்ன கோரிக்கை வைத்தாலும், அதில் இருக்கக்கூடிய உண்மையை, நியாயத்தை அரசு புரிந்துகொண்டு கண்டிப்பாக அதற்கு நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

புதுக்கோட்டை சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சோலைமலர் (30) இவரின் கணவர் ஜெகதீசன் (35). இவர் கடந்த 2020-ல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவனை இழந்த இளம்பெண் சோலைமலர் தனது இரண்டு கைக்குழந்தைகளுடன் முதல்வரைப் பார்த்து மனு கொடுப்பதற்காக, முதலமைச்சர் தங்கியிருந்த ரோஜா இல்லத்துக்கு வந்தார். அப்போது, முதல்வரைப் பார்த்து மனு கொடுக்கும் நேரத்தில் அங்கிருந்த பாதுகாவலர்களால் அவர் தள்ளிவிடப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism