Published:Updated:

ஒன் பை டூ... தொடரும் ரெய்டுகள்... நியாயமான நடவடிக்கையா, பழிவாங்கலா?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - செல்வராஜ்

கடந்த ஆட்சியில் ஊழல் செய்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

ஒன் பை டூ... தொடரும் ரெய்டுகள்... நியாயமான நடவடிக்கையா, பழிவாங்கலா?

கடந்த ஆட்சியில் ஊழல் செய்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Published:Updated:
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - செல்வராஜ்

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்பாளர், தி.மு.க.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

“தி.மு.க அரசின் ரெய்டுகள் நியாயமான நடவடிக்கைகள்தாம். `ஊழல் அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுப்போம்’ என மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதியைத்தான் தற்போது நிறைவேற்றிவருகிறோம். பட்ஜெட் முடிந்த பிறகு, பொறுமையாக நடவடிக்கை எடுக்கலாம் என்றிருந்தோம். ஆனால், ‘வாக்குறுதிகளை வேகமாக நிறைவேற்றுங்கள்’ என்று எங்களுக்கு எடப்பாடியும், பன்னீரும்தான் அழுத்தம் கொடுத்தார்கள்! அதேசமயம், யாரையும் பழிவாங்கவேண்டிய அவசியம் தி.மு.க-வுக்குக் கிடையாது. 2019-ம் ஆண்டு நாங்கள் தொடர்ந்த வழக்கில் வேலுமணி தவறு செய்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. அவருக்குத் தொடர்புடைய நிறுவனங்கள், 2013-14-ம் ஆண்டில் எந்த நிலையில் இருந்தன, 2018-19-ல் எந்த அளவுக்கு இமாலய வளர்ச்சியடைந்தன என்பதற்கான தரவுகள் இருக்கின்றன. வெறும் 240 ரூபாய்க்கு வாங்கக்கூடிய எல்.இ.டி பல்ப் செட்டை 2,400 ரூபாய்க்கு வாங்கியவர்தான் வேலுமணி. இப்படி அவர் பல மடங்கு அதிக விலைக்குக் கொள்முதல் செய்த பொருள்களின் மிக நீண்ட பட்டியலையே கொடுக்க முடியும். அவர் செய்த ஊழலுக்குத்தான் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. வேலுமணி மீது மட்டுமல்ல... கடந்த ஆட்சியில் ஊழல் செய்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

கோவை செல்வராஜ், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க.

“அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கல் மட்டுமே. அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாராவது அரசுப் பணிகளை எடுத்துச் செய்தால் கேள்வி கேட்கலாம். ஆனால், தனியார் நிறுவனங்கள் அரசுப் பணிகளை எடுத்துச் செய்வதைக் கேள்வி கேட்க யாருக்கும், எந்த உரிமையும் கிடையாது. அதுமட்டுமல்ல... தனியார் நிறுவனங்கள் தங்கள் வரவு செலவுக் கணக்குகளை ஒவ்வோர் ஆண்டும் வருமான வரித்துறையில் தாக்கல் செய்ய வேண்டும்; ஜி.எஸ்.டி வரியையும் கட்டியாக வேண்டும். அப்படிச் சரியாக வரி செலுத்தக்கூடிய எந்தவொரு நிறுவனமும் நல்ல லாபம் ஈட்டுவதாகத்தான் அர்த்தம். ஆனால், அதையே ஒரு குற்றமாகக் கருதி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிகாரம் கிடையாது. வேலுமணியின் ரத்த சொந்தங்கள் யாரும் அரசுப் பணிகளை எடுத்துச் செய்யவில்லை. வேலுமணியைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே அவருக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களில் சோதனை செய்வது, அதிகாரிகள் மீது வழக்கு போடுவது ஆகிய நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள். இப்படித் தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கடி கொடுப்பது இந்த அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது.’’