Published:Updated:

சட்டப்பேரவையில் உதயநிதியைப் புகழ்ந்து தள்ளும் அமைச்சர்கள்... திமுகவினரின் ரியாக்‌ஷன் என்ன?

சட்டப் பேரவையில் உதயநிதி

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் யாரையும் புகழ வேண்டாம். என்ன கேள்வியோ என்ன விளக்கமோ அதை மட்டும் தந்தால் போதும் என முதல்வர் ஸ்டாலின் சொன்ன பிறகும் உதயநிதியையும் முதல்வரையும் புகழ்வது தொடர்கிறது... என்ன சொல்கிறார்கள் தி.மு.க-வினர்.

சட்டப்பேரவையில் உதயநிதியைப் புகழ்ந்து தள்ளும் அமைச்சர்கள்... திமுகவினரின் ரியாக்‌ஷன் என்ன?

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் யாரையும் புகழ வேண்டாம். என்ன கேள்வியோ என்ன விளக்கமோ அதை மட்டும் தந்தால் போதும் என முதல்வர் ஸ்டாலின் சொன்ன பிறகும் உதயநிதியையும் முதல்வரையும் புகழ்வது தொடர்கிறது... என்ன சொல்கிறார்கள் தி.மு.க-வினர்.

Published:Updated:
சட்டப் பேரவையில் உதயநிதி

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் மார்ச் 18-ம் தேதி தொடங்கித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து வருகின்றன. சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாத இந்த மானியக் கோரிக்கை விவாதத்தில் பல்வேறு வார்த்தை ஜால காட்சிகளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இதில், தொடக்கம் முதல் யாரையும் புகழ்ந்து பேசக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை செய்தும் முதல்வரையும், சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் உதயநிதியையும் புகழ்ந்து பேசும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் உச்சமாகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வணிக வரித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்றது.

அப்போது பேசிய அத்துறையின் அமைச்சர் மூர்த்தி, ``அன்புக்கு இலக்கணமாம் ஆருயிர் உதயநிதி அவர்களே... நீங்கள் நடித்ததோ ஒரு கல், ஒரு கண்ணாடி. ஆனால், நீங்கள் வீசிய ஒரு செங்கல் கடந்த ஆட்சியை அல்லவா உடைத்து வீழ்த்தியது? நீங்கள் நடித்ததோ கெத்து'... நீங்கள்தான் தமிழ்நாட்டின் சொத்து. எதிரிகளைத் தனது சிரிப்பால் நண்பேண்டா என்று சொல்ல வைக்கும் அன்பன் நீங்கள்! உங்கள் நடிப்பில் உருவானதோ மனிதன். நிஜத்தில் நீங்கள்தான் மாமனிதன். நீங்கள் நிமிர்ந்தபோது தமிழ்நாட்டில் இளைஞர்கள் நிமிர்ந்தார்கள். இப்படை வெல்லும் என்றீர்கள். இப்படைதான் எப்போதும் வெல்லும் என்பதை நித்தமும் காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.

உதயநிதி - ஸ்டாலின்
உதயநிதி - ஸ்டாலின்

பொதுவாக எப்போதும் உங்கள் மனசுதான் தங்கம். தங்கம்தான்! சரவணன் இருக்க பயமேன்' என்பது நீங்கள் நடித்த படம். உதயநிதி இருக்க பயமேன் என்பது தமிழகத்து இளைஞர்களின் எண்ணம். நெஞ்சுக்கு நீதியின்' பாத்திரம் ஏற்ற நடிகர் மட்டுமல்ல நீங்கள். நெஞ்சுக்கு நீதியின் அடுத்த பாகமாகவே வாழ்கிறீர்கள். மாமன்னன்' படம் அல்ல. தமிழ்நாட்டின் வருங்கால மாமன்னன் தாங்கள்தான். எங்களின் இதயம் கவர்ந்த உதயமும் நிதியுமான இளைஞரணி செயலாளரே! உங்களை வணங்குகிறேன்” எனப் புகழ்ந்து தள்ளினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமைச்சர் மூர்த்தி இப்படிப் பேசியதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் அமைச்சர் செந்தில் பாலாஜி, “பூவைப் போன்ற எழில் முகம். எப்போதும் நெஞ்சத்துப் பசுமை காட்டும் பொழில் முகம். தேனினும் இனிய குணம். வானினும் பெரிய மனம். பொல்லாத மனிதர்கள் வீசிடும் விமர்சன முட்கள் கூட பொன்னான உங்கள் முகத்தினால் புற்களாய் மாறி கம்பளம் விரிக்கும். வில்லேந்தி ஆயிரம் பேர் களத்தில் நின்றாலும், இனிமையான சொல்லேந்தி வென்று வரும் எங்கள் சின்னவரே! உள்ளங்களை வெல்வதையே கொள்கையாகக் கொண்டவரே! நீங்கள் கலைஞரும் தலைவரும் கலந்தெடுத்த வார்பு. அதனால்தான் தமிழகம் முழுவதும் உங்களின் மேல் ஈர்ப்பு. சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை... திருவல்லிக்கேணியின் தங்கப்பிள்ளை... மாண்புமிகு அண்ணன் உதயநிதி அவர்களை வணங்குகிறேன்.” எனப் புகழ்ந்து பேசினார். மற்ற அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் உதயநிதியைப் புகழ்ந்தார்கள் என்றாலும் இந்தளவுக்கு அவை பேசு பொருளாகவில்லை.

அமைச்சர்கள் மூர்த்தி, செந்தில் பாலாஜி
அமைச்சர்கள் மூர்த்தி, செந்தில் பாலாஜி

கடந்த காலத்தில் அ.தி.மு.க உறுப்பினர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசிய போதெல்லாம் அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர்கள், முதல்வர் வேண்டாம் எனக் கூறியும் தி.மு.க உறுப்பினர்கள் புகழ்வதைத் தொடர்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியை அமைச்சர்கள் புகழ்வதற்கு தி.மு.க-வினரின் ரியாக்‌ஷன் என்ன என்பதை அறிந்துகொள்ள அக்கட்சியின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தியிடம் பேசினோம். ``கன்னிப் பேச்சைத் தொடங்கும் சட்டமன்ற உறுப்பினர்களும், மானியக் கோரிக்கையில் தங்களின் விவாதத்தை எடுத்து வைக்கும் போது அமைச்சர்களும் தன்னுடைய கட்சியின் இளைஞரணிச் செயலாளராகவும் அடுத்த தலைமுறைத் தலைவராகவும் பார்க்கப்படும் ஒருவர் குறித்துப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை. சட்டமன்றத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கே இரண்டு முறை அல்லது ஒரே ஒரு முறைதான் வாய்ப்புக் கிடைக்கும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன்னுடைய இயக்கத் தலைவர்களின் பெயர்களைச் சொல்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு பதிலுக்கும் இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர்களது தலைவரின் பெயரைச் சொன்னார்கள். அமைச்சர் மூர்த்தி பேசினார் என்றால் தனது மானியக் கோரிக்கை விவாதத்தில் தனக்கு வாய்ப்பளித்த தலைவர்களின் பெயரைச் சொல்கிறார். அவர் தினந்தோறும் அப்படிச் சொல்வதில்லை.

ராஜீவ் காந்தி - தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்
ராஜீவ் காந்தி - தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்

அ.தி.மு.க-வுக்கும் எங்களுக்கும் இருக்கும் வித்தியாசமே நாங்கள் அவர்களைப் போலத் துணைக் கேள்வியில் கூட அம்மா... அம்மா என அரற்றவில்லை. தொடக்கத்தில் மட்டுமே பேசுகிறோம். இதைத் தவறு என்று சொல்ல முடியாது.” என்றவர்...

“தமிழ்நாடு முதல்வர் தளபதி இதுவே இல்லை எனச் சொல்லியிருக்கிறார். இளைஞர்களின் நம்பிக்கையாக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை நம்பி பல இளைஞர்கள் இப்போது கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் நான் கட்சிக்குள் வந்தேன். என்னைப் பின் தொடர்ந்து இன்றைக்குப் பல ஆயிரம் இளைஞர்கள் கட்சிக்குள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார். இனியும் இணையப் போகிறார். இப்படி ஒரு கட்சிக்கே நம்பிக்கை ஊட்டக் கூடிய ஒருவரின் பெயரைச் சொல்வதில் என்ன தவறு. அவர்களைப் போல அஞ்சி நடுங்கி நாங்கள் தலைவர்களின் பெயரைச் சொல்லவில்லை. எந்தளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் அவர்களின் பெயரைச் சொல்கிறோம். இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. தஞ்சாவூர் துயரத்தைக் கேள்விப்பட்டு உடனடியாக அங்கு சென்று ஆறுதல் சொன்ன தலைவர் தளபதி குறித்துப் பேசும்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு துயரத்தை டி.வியில் பார்த்து தெரிந்து கொண்டேன் எனச் சொன்ன கூவத்தூர் முதல்வருக்கு ஏன் கோவம் வருகிறது என்று தெரியவில்லை.

சட்டப்பேரவையில் உதயநிதியைப் புகழ்ந்து தள்ளும் அமைச்சர்கள்... திமுகவினரின் ரியாக்‌ஷன் என்ன?

உதயநிதியைப் பாராட்டியதாலேயே மக்கள் மன்றத்தில் அங்கீகாரம் கிடைத்துவிடாது. ஆனால், நம்பிக்கையைக் கொடுக்கும் ஒரு தலைமை குறித்துப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்றுதான் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புவது” என விளக்கமளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism