Published:Updated:

`பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை இன்னும் இயற்றாதது ஏன்?' - ஆர்.எஸ்.பாரதி கேள்வி!

ஆர்.எஸ்.பாரதி

`ஒரு காலத்தில் மருத்துவத்துறையில் 95 சதவிகிதம் உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே இட ஒதுகீட்டுக்காக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.' - ஆர்.எஸ்.பாரதி.

2021-2022 -ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சமர்பிக்கப்பட்டதிலிருந்து மக்களவையில் காரசாரமாக விவாதங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, தமிழக எம்.பி-க்கள் தொடர்ந்து நீட் விலக்கு தொடர்பாக வலியுறுத்திவருகின்றனர்.

அந்த வகையில், மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி, ``தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்ப்பட்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசு, பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை இன்னும் இயற்றாதது ஏன்? ஒரு காலத்தில் மருத்துவத் துறையில் 95 சதவிகிதம் உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே இட ஒதுகீட்டுக்காக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

மக்களவை
மக்களவை

தமிழ்நாட்டில் இதுவரை நீட் தேர்வு காரணமக 30 மாணவர்கள் இறந்துவிட்ட நிலையில், இன்னும் அது தொடர்பான கோரிக்கைக்கு பதிலளிக்காதது ஏன்? நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதை இன்னும் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism