Published:Updated:

நாகர்கோவில் மாநகராட்சி: களத்தில் குதித்த பாஜக... அந்த `4 வாக்குகள்?!’ - ஷாக் ஆன திமுக

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்

மறைமுகத் தேர்தலில் திமுக வேட்பாளர் மகேஷ் 28 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். அதேசமயம், பா.ஜ.க மேயர் வேட்பாளர் மீனாதேவ்-க்கு 24 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

நாகர்கோவில் மாநகராட்சி: களத்தில் குதித்த பாஜக... அந்த `4 வாக்குகள்?!’ - ஷாக் ஆன திமுக

மறைமுகத் தேர்தலில் திமுக வேட்பாளர் மகேஷ் 28 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். அதேசமயம், பா.ஜ.க மேயர் வேட்பாளர் மீனாதேவ்-க்கு 24 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

Published:Updated:
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்

நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள். அவ்ற்றில் தி.மு.க 24, காங்கிரஸ் 7, ம.தி.மு.க -1 என திமுக கூட்டணியில் 32 கவுன்சிலர்கள் உள்ளனர். அதேசமயம் பா.ஜ.க -11, அ.தி.மு.க 7, சுயேச்சையாக 2 கவுன்சிலர்கள் வெற்றிபெற்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க., சுயேச்சைகளுடன் பா.ஜ.க பக்கம் 20 கவுன்சிலர்கள் இருந்தனர்.

இன்று நடைபெற்ற மேயர் தேர்தலுக்கான மறைமுகத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் மகேஷ் 28 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். அதேசமயம் பா.ஜ.க மேயர் வேட்பாளர் மீனாதேவ்-க்கு 24 ஓட்டுகள் கிடைத்துள்ளன. இதனால் பா.ஜ.க தரப்பு, தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த 4 கவுன்சிலர்களை வளைத்திருப்பது தி.மு.க தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேயராகப் பதவியேற்ற மகேஷ்
மேயராகப் பதவியேற்ற மகேஷ்

நாகர்கோவில், மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் மேயராக மகேஷ் பொறுப்பேற்றுக்கொண்டார். மேயர் தேர்தலில் வெற்றிபெற்ற மகேஷுக்கு சான்றிதழையும் செங்கோலையும் மாநகராட்சி கமிஷனர் ஆஷா அஜித் வழங்கினார். மேயர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் மனோதங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில் மதியம் துணை மேயருக்கான தேர்தல் நடைற்றது. தி.மு.க-வின் துணை மேயர் வேட்பாளராகக் கட்சி தலைமை மேரி பிரின்சி லதா-வை அறிவித்துள்ளது. மேரி பிரின்சி லதாவுக்கு எதிராக தி.மு.க-வைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் போட்டி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இதனால் தி.மு.க-வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism