Published:Updated:

``உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்!" - வீடியோ கான்ஃபரன்ஸில் என்ன பேசினார் மு.க.ஸ்டாலின்?

பொருள்களை வழங்கும் மு.க.ஸ்டாலின்
பொருள்களை வழங்கும் மு.க.ஸ்டாலின்

''உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்'' என்று வீடியோ கான்பரன்ஸில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினரிடம் கூறியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய ‘ஒன்றிணைவோம் வா’ என்ற செயல்திட்டத்தை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ -க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி, தொகுதி, மாவட்ட நிலவரங்களை மு.க.ஸ்டாலின் கேட்டறிந்துவருகிறார்.

மு.க.ஸ்டாலின் என்ன பேசினார் என்று தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்ய, கட்சித் தலைமை 9073090730 என்ற செல்போன் நம்பர் ஒன்றை அறிவித்துள்ளது.

`கோயம்பேட்டில் நேரடிக் கொள்முதல்; வீட்டுக்கு வீடு உதவி!' - நெகிழவைத்த பட்டுக்கோட்டை தி.மு.க பிரமுகர்
ரங்கநாதன் எம்.,எல்.ஏ - வின் பதிவு
ரங்கநாதன் எம்.,எல்.ஏ - வின் பதிவு
மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து, ரேஷன் கார்டுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு 1,000 ரூபாய் கொடுத்துள்ளது. இது, யானைப் பசிக்கு சோளப்பொரி என்றுதான் சொல்ல வேண்டும்
ரங்கநாதன் எம்.எல்.ஏ

அந்த செல்போன் நம்பருக்கு வரும் அழைப்புகள் அடிப்படையில் பொதுமக்களுக்கு கட்சியினர் உதவி செய்துவருகின்றனர். இந்த உதவி செய்வதில் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியதுள்ளது. அதையெல்லாம் கடந்துதான் உதவிகளைச் செய்துவருகிறோம். அரிசி, மளிகைப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவினாலும், எங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறோம். அதை வீடியோ கான்ஃபரன்ஸின் போது மு.க.ஸ்டாலினிடம் சில நிர்வாகிகள் கூறினர். அதற்கு மு.க.ஸ்டாலின், இந்த இக்கட்டான நேரத்தில் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள் என்று கூறியதோடு, சிறப்பாகச் செயல்பட்ட நிர்வாகிகளை ஸ்டாலின் பாராட்டினார்" என்றனர்.

இதுகுறித்து வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பா.ரங்கநாதனிடம் பேசினோம்.``கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மு.க.ஸ்டாலின் எங்களுடன் ஆலோசனை நடத்தினார். ஊரடங்கு காரணமாக தினக்கூலி தொழிலாளர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

பா.ரங்கநாதன் எம்.எல்.ஏ
பா.ரங்கநாதன் எம்.எல்.ஏ

வேலைக்குச் சென்றால்தான் சாப்பாடு என்ற நிலைமையில் இருப்பவர்கள் வறுமையில் வாடுகின்றனர். சாப்பிடக்கூட வழியில்லாமல் சிரமப்பட்டுவருகின்றனர். அவர்களுக்கு முடிந்த அளவுக்கு உதவி செய்துவருகிறோம். கட்சித் தலைமை அறிவித்த செல்போன் நம்பரில் உதவி தேவைப்படுவோர் தொடர்பு கொண்டால், அவர்களின் முகவரிகள் பெறப்படுகின்றன. பின்னர் அவை உடனடியாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. கட்சியினர், சம்பந்தப்பட்ட முகவரிக்குச் சென்று பொதுமக்களுக்கு உதவிகளைச் செய்துவருகிறோம்" என்றவரிடம், தமிழக அரசு வழங்கிய கொரோனா நிவாரண நிதி போதுமானதாக இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே? என்று கேட்டதற்கு, `மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து ரேஷன் கார்டுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு 1,000 ரூபாய்தான் கொடுத்துள்ளது. இது, யானைப் பசிக்கு சோளப்பொரி என்றுதான் சொல்ல வேண்டும்'என்றார்.

வில்லிவாக்கம் தொகுதி எப்படியிருக்கிறது? என்று கேட்டதற்கு, `தொகுதியில் இதுவரை 2 பேருக்கு மட்டும்தான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதி சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க சுகாதாரத்துறையினரும் காவல்துறையினரும் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்துவருகின்றனர். அவர்களுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இன்ஸ்பெக்டரை கையெடுத்து கும்பிடும் எம்.எல்.ஏ
இன்ஸ்பெக்டரை கையெடுத்து கும்பிடும் எம்.எல்.ஏ

வில்லிவாக்கம் தொகுதியில், உதவி எனக் கேட்பவர்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறேன், தேவைக்கேற்ப உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்யும் பணியும் நடந்துவருகிறது. காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள் சிறப்பாகப் பணியாற்றிவருகின்றனர். அதனால்தான், பணியில் ஈடுபட்டிருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டரை கையெடுத்து நான் கும்பிட்டேன்' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு