Published:Updated:

'இந்து' அரசியலைக் கையிலெடுக்கும் தி.மு.க... சாதிக்குமா, சறுக்குமா?#TNElection2021

ஸ்டாலின் - கனிமொழி

``தி.மு.க இந்துக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய கட்சி, கருணாநிதியும், ஸ்டாலினும் இந்துக்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள்'' என்று கனிமொழி பேசியிருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாபிக்!

'இந்து' அரசியலைக் கையிலெடுக்கும் தி.மு.க... சாதிக்குமா, சறுக்குமா?#TNElection2021

``தி.மு.க இந்துக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய கட்சி, கருணாநிதியும், ஸ்டாலினும் இந்துக்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள்'' என்று கனிமொழி பேசியிருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாபிக்!

Published:Updated:
ஸ்டாலின் - கனிமொழி
``இந்துக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய ஒரே இயக்கம் தி.மு.க-தான். கலைஞருக்கு அடுத்ததாக ஸ்டாலின் குரல்கொடுத்துவருகிறார். இட ஒதுக்கீட்டுக்காகக் குரல் கொடுத்து இந்துக்களுக்கு நல்லது செய்தவர் கலைஞர். எங்களைப் பிரிக்க நீங்கள் எப்படி முயன்றாலும் முடியாது. நாங்கள் தமிழால் இணைந்தவர்கள். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காகவே உழைக்கும் ஸ்டாலினின் ஆட்சியை உருவாக்குவோம்!"

'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி பேசிய வார்த்தைகள் இவை. `தி.மு.க இந்துக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய கட்சி, கருணாநிதியும் ஸ்டாலினும் இந்துக்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள்' என்று கனிமொழி பேசியிருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாபிக்.

நாகர்கோவிலில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி
நாகர்கோவிலில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போது மட்டுமல்ல... கடந்த வருடம் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து, ராமநாதபுரம் சந்தைத் திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி ``பெரும்பான்மை இந்துக்கள் கோயிலுக்கு உள்ளே செல்ல முடியாது. வெளியிலேயே நிறுத்தப்படுகிறார்கள் என்று அவர்களுக்காகக் குரல் கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். இந்துக்களின் பாதுகாவலர் பெரியார்தான்'' எனப் பேசினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல, திருவள்ளூர் மாவட்டம், கோணாம்பேடு கிராமத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``என்னுடைய துணைவியார் போகாத கோயிலே கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய பல மாவட்டச் செயலாளர்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார்கள். அந்த பக்தியை நாங்கள் குறை சொல்லத் தயாராக இல்லை. அது அவர்களுடைய விருப்பம். `ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது பேரறிஞர் அண்ணாவின் உறுதிமொழியாக இருந்தது. அதைத்தான் இன்று நாமும் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம்’’ எனப் பேசினார். இப்போது மட்டுமல்ல... கடந்த காலங்களிலும், `தி.மு.க-வில் இருப்பவர்களில் 90 சதவிகிதத்தினர் இந்துக்கள்தான்’ என ஸ்டாலின் பேசியது மிகப்பெரிய விவாதப் பொருளானது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தலைவர் இப்படியென்றால், அந்தக் கட்சியின் நிர்வாகிகள், ``கடந்த நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றிபெற்றது. அந்த வாக்குகளை அளித்தவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். தி.மு.க என்பது அதிகமான இந்துக்களால் ஆதரிக்கப்படும் கட்சி'' என்று பேசி அதிர்ச்சி கொடுத்தனர். மேற்கண்ட அனைத்தும், `தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி’ என முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலாகத்தான் பேசப்பட்டன. ஆனாலும் தமிழர்கள், திராவிடர்கள் எனப் பேசிவந்த தி.மு.க-வில் திடீரென `இந்துக்கள்’ என்ற வார்த்தை அடிக்கடி உச்சரிக்கப்படுவது தமிழக அரசியல் களத்தில் விநோதமாகப் பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், ``தமிழகத்தில் பா.ஜ.க தீவிரமாகக் களமிறங்கியிருக்கும் இந்த நேரத்தில், `இந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க’ என தொடர்ச்சியாகக் குற்றமும் சுமத்திவரும் இந்த நேரத்தில், பெரும்பான்மை மக்களின் வாக்குவங்கியைத் தக்கவைக்க இப்படிப் பேசித்தான் ஆக வேண்டும்’’ என தி.மு.க-வுக்கு ஆதரவாகச் சிலர் பேசினாலும், ``தமிழ்நாட்டில் பா.ஜ.க-வினர் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ, அதற்கான வலையை வீசுகிறார்கள். தி.மு.க-வும் அதில் சரியாகப் போய்ச் சிக்கிக்கொள்கிறது. இப்போது இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் பா.ஜ.க-வுக்கே இது பயனளிக்கும்'' என்கிற கடுமையான எதிர் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்து விரிவாகப் பேசும் அரசியல் வல்லுநர்கள்,

அண்ணா - பெரியார்
அண்ணா - பெரியார்

``தி.மு.க-வில் இருப்பவர்களில் 90 சதவிகிதத்தினர் இந்துக்கள் என கடந்த காலங்களில் ஸ்டாலின் பேசினார். தி.மு.க தொடங்கப்பட்ட காலத்தில், தமிழ் மொழிப்பற்று, இனப்பற்று, சமூகநீதிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வந்தார்கள். சமீப காலங்களில் பதவிகளுக்காகக் கட்சியில் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், தி.மு.க-வில் இணைந்தவர்கள் யாரும் தாங்கள் இந்து என்பதால் அந்தக் கட்சியில் இணையவுமில்லை; இருக்கவுமில்லை. கூடுதலாக, தங்கள் கட்சி உறுப்பினர்களையே இந்துக்கள், முஸ்லிம்கள் எனப் பிரிப்பதென்பது தி.மு.க-வுக்கு வேண்டாத வேலை. ஸ்டாலின் இப்படியென்றால், கனிமொழி அவரைவிட ஒருபடி மேலே பேசுகிறார். `இந்துக்களின் பாதுகாவலர் பெரியார்' என முன்பு ஒருமுறை பேசினார். பெரியாரை `இந்துக்களின் காவலர்’ என்கிற வகைமைக்குள் கொண்டு வருவதெல்லாம், பெரியாரின், திராவிட இயக்கத்தின் கொள்கைக்கே நேர் எதிரானது. பெரியார் சாதிரீதியாக வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதற்கு எதிராகப் போராடினாரே தவிர, அவர்கள் இந்துக்கள் என்பதற்காகப் போராடவில்லை. அதை நன்றாக உணர்ந்தவர்தான் கனிமொழியும். ஆனால், தேர்தல் அரசியலுக்காக இப்படிப் பேசுகிறார்.

வட இந்திய மக்களைப்போல, மதரீதியான பிரசாரங்களுக்கோ, தூண்டுதலுக்கோ எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் அல்ல தமிழக மக்கள். தமிழ்நாட்டில் இந்து வாக்குவங்கி என்கிற ஒன்று இல்லவே இல்லை. அப்படி இருந்திருந்தால், அதை முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலத்த வெற்றி பெற்றிருக்கும்.

கந்த சஷ்டி விவகாரம், ரஜினி கிளப்பிய பெரியார் விவகாரம், மனுஸ்மிருதி விவகாரம் என்று ஏதாவது ஒரு மதம் சார்ந்த விவகாரத்தை மையப்படுத்தி, அதில் ஸ்டாலினை ரியாக்ட் செய்யவைத்து, மத அரசியலுக்குள் தி.மு.க-வை லாகவமாகச் சிக்கவைத்துவிடுகிறது பா.ஜ.க. அவர்கள் வைக்கும் பொறிக்குள் ஸ்டாலினும் தானாகவே வந்து சிக்கிக்கொள்கிறார். தற்போது ஸ்டாலின் - கனிமொழி ஆகியோர் செய்துவருவது தி.மு.க பாணி அரசியலும் அல்ல.

`இந்து’ என்கிற பெயரைப் பயன்படுத்த முடியாமல் அரசியல் செய்ய முடியாது என்கிற நிலையை பா.ஜ.க-வினர் உருவாக்கிவிட்டனர். அவர்கள் நினைத்ததைச் சாதித்துவிட்டனர். ஆனால், அவர்களின் வழியில் சென்று தவறான வாதங்களை, அணுகுமுறைகளைக் கையாண்டு தமிழ்ச் சமூகத்துக்கு துரோகம் இழைத்துக்கொண்டிருக்கிறது தி.மு.க.

பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர்

கருணாநிதியின் காலத்திலேயே `இந்து விரோதி, இந்துக்களுக்கு எதிரான கட்சி’ என்கிற விமர்சனங்கள் தி.மு.க மீது வைக்கப்பட்டன. ஆனால், அப்போது அவர் எப்படிக் கையாண்டார் என்று ஸ்டாலின், கனிமொழி போன்றவர்கள் பார்க்க வேண்டும்.

தி.மு.க-வினரின் இந்த முழக்கங்களுக்குப் பின்னால், பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டல் இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், டெல்லியில் இப்படி ஒரு அஜென்டாவைக் கையிலெடுத்துதான் அரவிந்த் கெஜ்ரிவாலை வெற்றிபெறவைத்தார் பிரசாந்த். எனவே, அதே பாணியை இங்கேயும் கையிலெடுக்கிறார். டெல்லிக்கு வேண்டுமானால், அது தேவைப்பட்டிருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் தேவையே இல்லை. கூடுதலாக, எதிர்காலத்தில் சித்தாந்தரீதியாக தி.மு.க-வுக்குப் பெரும் பின்னடைவாகவே இது அமையும். இந்த விஷயத்தைக் கையில் எடுக்காமலும் தி.மு.க வெல்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அது தெரியாமல் தி.மு.க தலைவர்கள் செயல்பட்டுவருகின்றனர்'' என்கின்றனர்.

ஆனால், இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தி.மு.க தரப்பில் கூறப்படும் ஒரே பதில்... ``இன்றைக்கு வெறும் மத உணர்ச்சியின் பெயரால் இளைய தலைமுறையை தூண்டிவிடுகிற அரசியல் சக்திகளுக்கு, அவர்களது பாணியிலேயே பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்திருக்கிறது. எனவே, இதில் தவறு ஏதும் இல்லை!'' என்பதே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism