Published:Updated:

அதிமுக VS திமுக VS பாஜக - வெடிக்கும் கோவை மேம்பால அரசியல்

கோவை மேம்பாலம்

கோவை மாவட்டத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட மேம்பால விவகாரத்தில் திமுக, அதிமுக, பாஜக இடையே அரசியல் வெடித்திருக்கிறது.

அதிமுக VS திமுக VS பாஜக - வெடிக்கும் கோவை மேம்பால அரசியல்

கோவை மாவட்டத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட மேம்பால விவகாரத்தில் திமுக, அதிமுக, பாஜக இடையே அரசியல் வெடித்திருக்கிறது.

Published:Updated:
கோவை மேம்பாலம்

கோவை - திருச்சி சாலை சுங்கம் மற்றும் ராமநாதபுரம் பகுதியில் ரூ.238 கோடி மதிப்பிலும், மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.60 கோடி மதிப்பிலும் மேம்பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. பணிகள் முடிந்த நிலையிலும் மேம்பாலங்கள் திறக்கப்படாமல் இருந்தன.

கோவை திருச்சி சாலை மேம்பாலம்
கோவை திருச்சி சாலை மேம்பாலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், “போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துவருவதால், மேம்பாலத்தை மாநில அரசு உடனடியாகத் திறக்க வேண்டும். இல்லையேல் நாங்கள் திறப்போம்” என்று பாஜக-வினர் அறிவித்திருந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “சட்டத்தைக் கையில் எடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. களத்தில் ரெளடிகளைப்போலச் செயல்பட்டால், அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

கவுண்டம்பாளையம் மேம்பாலம்
கவுண்டம்பாளையம் மேம்பாலம்

இந்நிலையில் அந்த இரண்டு மேம்பாலங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இதற்கிடையே இந்தப் பாலம் தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக இடையே அரசியல் யுத்தம் வெடித்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“புதிய மேம்பாலங்களை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தார் முதல்வர்’’ என்று திமுக-வினர் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர். மறுபக்கம் அதிமுக-வினரோ, “இந்த மேம்பாலங்களைக் கட்டும் பணிகள் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. திமுக இதில் ஸ்டிக்கர் ஒட்டி புகழ் தேடுகிறது. இதற்கு உண்மையான பெருமை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோரைத்தான் சேரும்” என்று பதிவிட்டுவருகின்றனர்.

திறப்புவிழாவில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி
திறப்புவிழாவில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி

“இது அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கி கட்டப்பட்ட பாலம். எனவே, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், மேட்டுப்பாளையம் சாலை மேம்பாலத்தைத் திறந்துவைக்கிறார்” என்று பதிவிட்டு அதிமுக-வினர் களத்துக்கு வந்துவிட்டனர்.

கவுண்டம்பாளையம் மேம்பாலம் திறக்கும் இடத்தில் அந்தத் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்குமார் தலைமையில் வந்து அதிமுக-வினர் கோஷம் போட்டனர். அதேபோல, திருச்சி சாலை மேம்பாலத் திறப்புவிழாவுக்கு, அந்தத் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தலைமையிலான பாஜக-வினர் வந்தனர்.

``இந்தப் பாலங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன்தான் கட்டப்பட்டிருக்கின்றன. ஏதோ மாநில அரசே தங்களது சொந்த நிதியில் கட்டப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்” என்று கொதித்தனர். இப்படி மூன்று கட்சிகளும் மாறி மாறி கோஷமிட்டதால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism