Published:Updated:

திமுக இளைஞர்களை குறிவைத்து தூக்கும் பாஜக! - கொங்கு மண்டல அதிரடி அரசியல்

கொங்கு மண்டல அதிரடி அரசியல்

பா.ஜ.க மகளிரணி நிர்வாகியை தி.மு.க இழுத்த நிலையில், தி.மு.க நிர்வாகிகள் இருவரை தங்கள் பக்கம் இழுத்திருக்கிறது பா.ஜ.க.

திமுக இளைஞர்களை குறிவைத்து தூக்கும் பாஜக! - கொங்கு மண்டல அதிரடி அரசியல்

பா.ஜ.க மகளிரணி நிர்வாகியை தி.மு.க இழுத்த நிலையில், தி.மு.க நிர்வாகிகள் இருவரை தங்கள் பக்கம் இழுத்திருக்கிறது பா.ஜ.க.

Published:Updated:
கொங்கு மண்டல அதிரடி அரசியல்

தி.மு.க, பா.ஜ.க கட்சிகளிலிருந்து பரஸ்பரம் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பா.ஜ.க மதுரை மாவட்டத் தலைவராக இருந்த டாக்டர் சரவணன் சமீபத்தில், அந்தக் கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

மைதிலி வினோ
மைதிலி வினோ

தொடர்ந்து தி.மு.க-வில் இணைய விருப்பமும் தெரிவித்திருக்கிறார். கோவை பா.ஜ.க மகளிரணியைச் சேர்ந்த மைதிலி வினோ, பா.ஜ.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பா.ஜ.க மாவட்டத் தலைவர் செயல்பாடுகள்மீது விமர்சனம் வைத்த மைதிலி, ``கர்வம் பிடித்தவர்களால், தாமரை வாடி கருகி போகும்” என்று கூறியிருந்தார். சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வந்திருந்தபோது மைதிலியுடன், பா.ஜ.க-விலிருந்து பலர் தி.மு.க-வில் இணைந்தனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கொங்கு மண்டல தி.மு.க-வில் உள்ள இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியை பா.ஜ.க செய்து வருகிறது.

முதல்வர் கொங்கு மண்டலத்தில் விசிட் அடித்திருக்கும் அதே நேரத்தில், தி.மு.க திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார்.

அதே போல தி.மு.க கோவை மாநகர் கிழக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செந்தில்நாதனும் அண்ணாமலையைச் சந்தித்து பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார். அடுத்தடுத்து மேலும் பல நிர்வாகிகளை, இழுக்க இரண்டு கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.